FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 04, 2023, 11:13:51 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: Forum on September 04, 2023, 11:13:51 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 319

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F319.jpg&hash=dd439e64e663332bc8764e578d58355ff170c28d)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: Arjun_here on September 04, 2023, 11:47:17 PM
நொடிகள் உறையுமா ?

குளிரும் இரவின் மடியில்..
மிளிரும் தெருக்கள் வழியில்..
உனை நான் அறிந்தேன் விழியில்..
சேர்ந்தோம் நம் உலவிரவில்..

தயங்கி நெருங்கும் அடிகள்..
சிறிதாய் நிமிரும் இமைகள்..
இதயம் உறையும் கணங்கள்..
நுழைந்தோம் புது உலகில்..

ஏன் நொடிகள் உறையவில்லை ?
உறைந்த நினைவுமில்லை..
விலக மனமுமில்லை..
எங்கள் உலகில் எதற்கு எல்லை ?

காதல் காலமிது..
என்றும் காதில் கேட்பதற்கு..
ஓர் வார்த்தை மேல் எதற்கு அன்பே??

உரசல் மொழிகள் பகிர்ந்தோம்..
உளறி சிரித்து மகிழ்ந்தோம்..
உருவம் அதையும் மறந்தோம்..
உயிரோடுயிர் இணைந்தோம்..

விரல்கள் இணைந்தே இருக்க..
இதழைச் சுவைக்க நெருங்க..
கடைசி நொடியில் சிரிக்க..
மனதால் மணம் முடிக்க ..

ஏன் இரவு உருகி விட..
என்று அடுத்த இரவு வர?
உடல்கள் விலகிச் செல்ல..
எங்கள் நிழல்கள் நடனமிட..

நானும் சிறகடிக்க..
எந்தன் கால்கள் தரைமறுக்க..
உன் பார்வை சிறைபிடிக்க நின்றேன்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: ShaLu on September 05, 2023, 03:51:10 PM
அன்று-
உன்னுடன் நான் கழித்த ஒவ்வொரு நொடியும் வானவில்லை விட வண்ணமயமானது
இன்று-
உனை எண்ணி தனிமையில்
நான் கழிக்கும் நாட்கள்
மிகக் கொடியது

உன்னை இழந்தவுடன் வாழ்க்கையின் ஒட்டு  மொத்த அர்த்ததையும் இழந்தேன்
எப்போதும் உன் கைகளை என் கைகளுடன் கோர்த்து  என் இதயத்திற்கு நெருக்கமாகப் பிடித்து  உன் தோள் சாய நினைத்தேன்

நான் மனச்சோர்வுடன் இருக்கையில்
​​​​என்னருகில் வந்து
நான் இருக்கிறேன் என்னவளே
என்று எனை அணைப்பாய் என்றிருந்தேன்

​​​​என் இன்னல்களில் இருந்து எனைக் காக்கும் பாதுகாப்பு அரணாய் நீ இருப்பாய் என நினைத்தேன்
ஆனால் நீயோ என்னைவிட்டு எங்கோ சென்று
என் வாழ்வை பற்றிய பயத்தில் எனை ஆழ்த்தினாய்
நான் கோபமுற்று இருக்கையில் என்னிடம்
​​​​அன்பாய் பேசி அமைதிபடுத்துவாய்  என எண்ணினேன் மாறாக நீயோ கடுஞ்சொற்கள் வீசி எனை மேலும் காயமாக்கினாய்

நான்  தனித்திருக்கையில்
​​என் கைகளை இறுகப்பற்றி  உன்னை ஒருபோதும் கைவிடென் என்று சொல்வாய்
என நினைத்தேன்
நான் காயப்பட்டு வலியில் இருந்தபோது,
​என் வலியை குணமாக்க நீ ஓடி வருவாய் என எண்ணினேன்
ஆனால் உன்னாலேயே பலமுறை காயப்பட்டேன்

நான் இரவில் தூங்காமல்  அழும்போது,
​​கண்ணீரைத் துடைக்க என்னருகில்
நீ இருப்பாய் என நினைத்தேன்
ஆனால்  தலையணை மட்டுமே இருந்தது எனைத் தேற்ற என் துணையாய்...

என்னிடம் அன்பு காட்ட யாரும் இல்லை என வருந்துகையில் உனை நேசிக்க  உன்னவன்
நானிருக்கிறேன் என்று சொல்வாய் என நினைத்தேன்
ஆனால் நீயோ எனை பற்றிய எண்ணம் எள்ளளவும் இல்லாமல் எங்கோ இருக்கிறாய்
எனை மறந்து..
ஏன் என்னை விட்டு சென்றாய் -எனக்கு நீ தேவை என தெரிந்தும்
எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என் உயிரில்  பாதி நீ  இல்லாமல்

உன்னுடன் இருந்தால் மட்டுமே என் உலகம் அழகாகும்
நான் அதிகம் எதையும்  கேட்கவில்லை அக்கடவுளிடம்
எனக்கு வேண்டியதெல்லாம் நீ மட்டுமே
நீ என்னை விட்டு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
நீ அழைக்கும் வரை காத்திருப்பேன்
மாட்டாய் என்று தெரிந்தும்...

நீ என்னை தேடி என்னிடம் வருவாய் என்ற நம்பிக்கையில்...
காலமெல்லாம் காத்திருப்பேன் என் காதலுக்காக..!!!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: JenifeR on September 06, 2023, 06:41:08 AM
தனிமை எப்போதும் இனிமை
கனவுகளில் கை கோர்த்த நீ !!
ஏனோ வாழ்க்கையில் கை கோர்க்க மறந்தாய் !!
நீயும் நானும் தனிமையில் !!!
மொட்டைமாடியின் அழகினில் !!!
பௌர்ணமி நிலவின் ஒளியினில் !!
இதமான சாரலில் !!
கிளிகள் கீச்சிட !!
வானம் பளிச்சிட !!
பறவைகள் பறந்திட !!!
இடிகள் முழங்கிட !!
மழைத்துளிகள் சாரலிட!!
 நீ என் கரம் தொட!!
 மின்சாரம் பாய்ந்திட!!
 சுரப்பிகள் உயிர் பெற !!
இதழ்கள் ஈரமாக !!
கண்கள் மட்டும் பேசிக்கொண்டது
இத்தனை நாள் எங்கே இருந்தாய் ? என நானும்
 எங்கே இருந்தாய் என நீயும்
ஒரு நொடி பார்வையில்
ஆயிரம் கேள்விகள் ஆயிரம் பதில்கள்
மழை தணிந்தது !!!
இதழ்கள் கண்கள் மட்டும் பேசிக்கொண்டது
இத்தனை நாள் எங்கே இருந்தாய் ? என நானும் 
ஒரு நொடி பார்வையில்
 ஆயிரம் கேள்விகள்?
 ஆயிரம் பதில்கள்  !!!!
இதழ்கள் பிரிந்தது
வானம் இருண்டது
 கைகள் பிரிய மறுத்தன !!
 கனவில் மட்டும் நிழலாக உயிர் கொடுத்த உன் காதல்
என்றும் என் நினைவில்
 தனிமை என்னை கொன்றாலும் ...
 உன் நினைவு எனக்கு மட்டும் அல்ல
நம் நிழலுக்கும் உயிர் கொடுத்தது !!
நிழலாய் மட்டுமே இணைந்த காதல்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: சாக்ரடீஸ் on September 06, 2023, 01:17:12 PM
செப்டம்பர் 6, 1991 அன்று
வெளியானது இதயம் திரைப்படம்
அதே செப்டம்பர் 6, 2023 இன்று
இந்த பதிவை பதிவிடுவதில் பெரும் மகிழ்ச்சி
#32years_of_idhayam

சில நிகழ்வுகள்
சாதாரணமாகவே காட்சியளிக்கிறது
ஏனென்றால்
இந்த பிரபஞ்சத்தில்
இதம் தரும் அனைத்து நிகழ்வுகளும்
மிகவும் எளிதாகவே
வடிவமைக்கப்பட்டது தான்
கால்களை தொடும் கடல் அலை
கன்னத்தை தொடும் மழை துளி
அது போல
உன் அழகு சற்றும் எதிர் பார்த்திராத
நேரத்தில் என் இதயத்தை தீண்டிவிட்டது

பல கனவுகளோடும்
பல எதிர்பார்புகளோடும்
புதிய சூழ்நிலையோடும்
புதிய மனிதர்களோடும்
தொடங்கியது
என் கல்லூரியின் முதல் நாள்
கண்டதும் காதல்
இதில் துளியும் நம்பிக்கை இல்லை
ஆனால்
என் நம்பிக்கையை
சுக்குநூறாக உடைத்தது
மை வைத்த உன் கருவிழிகள்
உன் கண்கள் என் மனதில்
தடம் பதித்தது

உன்னிடம் பேச ஆசை
உன்னிடம் பழகிட ஆசை
உன்னிடம் சண்டையிட ஆசை
உன்னிடம் கோபித்துக்கொள்ள ஆசை
உன்னிடம் அன்பை பரிமாற ஆசை
ஆனால் ஏதோ
ஒரு தயக்கம் என்னை தடுக்கின்றது
என்ன செய்ய நான் ?

வகுப்புக்கு உன் வருகையை
எதிர்பார்த்து
தினம் தினம் காத்திருக்கிறேன்
நீயோ என்னை
திரும்பி கூட பார்த்ததில்லை
உன்னை பார்த்தும்
என் மனமோ துள்ளி குதித்து
காதல் கொள்கிறது
என்ன செய்ய நான் ?

இரவு முழுவதும்
நிலவை சபித்தபடியே கழிக்கிறேன்
மறுநாள் உன்னை
பார்க்கவேண்டும் என்று
என் தவிப்பை
எவர் உனக்கு உணர்த்துவது
என்ன செய்ய நான் ?

இறுதி ஆண்டில்
என் ஸ்லாம் புக்கில்
"நீ ஏன் என்கிட்ட பேசவே மாட்டேங்குற
எப்போ பாரு ஒராங்குட்டான் மாதிரி இருக்க"
என்று எழுதிருந்தாய்
அன்று தான் இந்த மரமண்டைக்கு
உரைத்தது உன்னிடம்
பேசியிருக்கலாமே என்று
இருந்தும்
மனம்தளராமல் சற்றும் தாமதிக்காமல்
ரிஜிஸ்டரில் இருந்து திருடி வைத்திருந்த
உன் தொலைபேசி எண்ணுக்கு
"ஹாய்" என்று குறுந்செய்தியை அனுப்பினேன்
உறவை நீட்டித்துக்கொண்டேன்
என் காதலை சொல்ல ஆசை
சொன்னால் விட்டு
போய்விடுவாய் என்று அச்சம்
குழப்பத்தில் என் மனம்
என்ன செய்ய நான் ?

வைரமுத்துவே உன்னை பார்த்து தான்
எழுதியிருப்பார் போல
"குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ" என்று
குழந்தை தனமாக இருக்கும் உன்னிடம்
எப்படி என் காதலை சொல்லுவேன்
என்ன செய்ய நான்?

பெயர் இல்லா பறவை
வரிகள் இல்லா பாடலை
பாடும் என்று
நம்புவது முட்டாள்தனம்
என்னை நானே
ஏமாற்றிக்கொள்ள விருப்பமில்லை
அச்சத்தை விடுத்து
அவளிடம் என் காதலை கூறினேன்
" ஐ லவ் யூ டி " என்றேன்
அவள் சாற்றும் யோசிக்காமல்
" லவ் யூ டூ " என்றாள்
ஆனந்தத்தில் நான் அங்கும் இங்கும் குதிக்க
அவளோ
" அஸ் எ பிரண்ட் " என்ற ட்விஸ்ட்டை வைத்தாள்
நானோ "போடிங்குஊஊஊஊஊஊ"
என்று மனதில் நினைத்தபடியே
அவள் இடம் சிரித்தேன்
பிறகு
எதுவுமே நடக்காதது போல்
அவள் தொலைபேசியை
என்னிடம் குடுத்து
ரீல்ஸ் ரெகார்ட் செய்ய சொன்னாள்
காதல் சொல்லவந்தவனிடம்
கையில் செல்போன் கொடுத்தாள்
அவள் கரம் பிடிக்கவேண்டிய என் கை
இன்று அவள் செல்போனை பிடித்துக்கொண்டிருக்கிறது

என் மனசாட்சியோ
காரி துப்புகிறது
"ஏன்டா டேய் அவ பின்னாடி பாருடா
எல்லாரும் மேகம் கருக்காதா பெண்ணே பாட்டுக்கு
ரீல்ஸ் பண்றங்க
உன் ஆளு என்னடானா
தெம்மா தெம்மா தெம்மாடிக் காத்தே பாட்டுக்கு ஆடுற
நீயும் ரெகார்ட் பண்ற"
என்ன செய்ய நான் ?
காதலில் இது எல்லாம் சகஜம்
நிச்சயம் ஒரு நாள்
அவளோடு டூயட் ரீல்ஸ்
செய்யவேன்
என்ற நம்பிக்கையில்
என்னை நானே
சமாதானம் செய்து கொண்டேன்

இப்படிக்கு

இந்த காலத்து இதயம் முரளி

குறிப்பு : 


“நீ போட்ட கிறுக்கலுக்கும் ஓவியம் உயிராகிறது இந்த வார நிழல்படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்போருக்கு ?

என் பதில் :

என் ஆளு பண்ண ரீல்ஸ்ல ஒரு screenshot தான் ஓவியம் உயிரகிறத்தின்  இந்த வார நிழல்படம், ப்ளூ கலர் ட்ரெஸ் போட பொண்ணு என் ஆளு தான்"

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: TiNu on September 06, 2023, 07:18:05 PM


என் மனதில் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள்.
நானும் அவரும் சேர்ந்து மகிழ்வுறும் நிமிடங்களை.
நினைத்து நினைத்து நெஞ்சமெல்லாம் பூரித்து நின்றேன்.

அவன் இசைக்க போகும், சுந்தர பண்ணிசையில்..
நான் என் மனம் உருகி, என்நிலை மறந்த நிலையில்..
அவன் கைகோர்த்து சதிராட.. காத்து கிடந்தேன்..

அவன் வரும் தருணத்துக்கு காத்திருந்து காத்திருந்து
என் கால்களும் உணர்வில்லாது. மரத்து போயின..
நிச்சயம் வருவான்.. என நம்பிக்கையில் காத்திருந்தேன்..

என் அடி மனதில் ஓர் எண்ணம் மட்டும் திடமாக..
உறுதியாக வேரூன்றி இருந்தன.. எனக்காக அவனும்
அங்கே மனம் உருகி.. ஏங்கி தவித்து காத்திருப்பான்..

எல்லைபாதுகாப்பு பணி செல்லும் முன்னே..  அவன்..
என் சின்ன செவிகள் மட்டும் கேட்டும் படி. மொழிந்த
அந்த வார்த்தை..  நினைத்து நினைத்து மனமுறுகினேன்..
 
என்று அவன் வருவானோ.. என்று என் கை கோர்ப்பானோ..
என்ன கதை சொல்வானோ..  எங்கனம் எனை நாணமுற செய்வானோ..
கட்டுக்கடங்காத கற்பனையில் நீந்தி நீந்தி திளைத்தேன்..

அந்த பொன்னான நாளும், என் கைபேசியை தட்டியது..
எனை முழுதாய் ஆட்கொண்ட அவனின் குறும்செய்தி - கண்ணே,
உன் படபடக்கும் விழி நோக்க, நாளை வருகின்றேன்.

அவனின் செய்தி பார்த்த என்னிரு கருவிழிகளும்,
வண்ண வண்ண நிறங்களில் ஜொலித்தன..-  இப்போதே,
அவன் முக பார்க்க, ஏங்கி வாசலை பார்த்து நின்றேன்.

என் சின்னசிறு இருதயத்தில் குட்டி குட்டி சிறகுகள் முளைத்து
அவனை நோக்கி பட படவென பறக்க தொடங்கின..
நில் மனமே நில்.. அவசரம் வேண்டாமென அடக்கிவைத்தேன்.

 பணியின் மொத்த விடுப்பு நாட்கள் முழுதும்
அவனுடன் நான்..  என்னுடன் அவன்... ஐயோ...
நினைக்க நினைக்க..மனமகிழ்ச்சியில் திளைத்தேன்.
 
எப்போது நாளை வருமே காத்திருந்து, என் நீல கண்களும்
சிவந்து போயிருந்தது... அவர் என் விழி பார்க்கையில்,
நிறம்மாற பூவாய் இருக்க எண்ணி, நித்திரை வரவழைத்தேன்.. 

காலை பொழுதும் மெல்ல மெல்ல புலர்ந்தது..
அவர் விரும்பும்  நீலவண்ண உடையில்
நானும் எனை அழகாக அலங்கரித்து கொண்டேன் 

வீட்டின் வாயில் மணியோசையும் கேட்டது..
தலைவாயில் நோக்கி மிதந்து வரும் மேகமென
வேகமாக துள்ளி குதித்து பறந்து ஓடினேன்..

சிரித்த முகத்துட்டேன் கதவின்  தாழ்திறந்தேன்.
அங்கே நான் கண்ட  காட்சிகள் கண்டு மிரண்டு நின்றேன்.
சொந்தம் பந்தம் எல்லாம் வாசலில் கூடி நிற்க  திகைத்துநின்றேன்.

பாவி பொண்ணே.. தங்க சிலையாட்டம் நிக்கிறாளே..
இவள தவிக்க விட்டுட்டு அவனை மட்டும் இப்படி..
அந்த படுபாதக எமன் கூட்டிட்டு போயிட்டானே..   

என் தலை கிறுகிறுக்க, கண்களில் உருவங்கள் நிழலாட
அவர்களின் பேச்சுக்கள் என் காதுகளை தழுவியது..
அவன் வந்த ரயில் குண்டு வெடிப்பில் சிக்கி சிதறியதாம்.
 
நிலைமையை புரிந்து கொள்ள மறுத்தது என் மனம்.
நிலை தடுமாறி.. கால்களில் வலுவின்றி தடுமாறினேன்.
எனை தாங்கிய பூமியே, இன்று எனை கைவிட்டதுஏனோ..

என் மனக்கண்களில், அவன் மலர்ந்த முகம் மின்ன..
நாங்கள் கண்ட கனவுகள் ஒன்று ஒன்றாக நிழலாட.
கண்களில் கருமேக சூழ, நிலைகுலைந்து வீழ்ந்தேன்..

அவன் கை கோர்க்க, மீளா துயில் கொண்டேன்..
அவன் முகம் காண, மீளா துயில் கொண்டேன்..
என்னுயிர் அவனுடன் சேர, மீளா துயில் கொண்டேன்..


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: IniYa on September 06, 2023, 09:36:52 PM
நிஜத்தில் நிழலாக இருந்து கனவாய் போன மனத்திற்கு இன்முகத்துடன் இனியாவின் கிறுக்கல்கள் என்றும் என்னுள்!
பார்த்த அந்த நொடியில் பொய் நிறைந்த உலகத்தில் மெய்யாக உணர்ந்தேன் என்னுள்!

நட்பின் ஆழத்தில் நுழைந்து ஆட்டம் பாட்டம் மகிழ்வத்து மகிழ்ந்து புரிதலின் ஈர்ப்பின் விசை என்னுள்!
எல்லையில்லா ஆனந்தமேன
என்னுவதற்குள் ஒரு ஜன்மம் பனிபோல விலகின என்னுள்!

நம் நிகழ்வை பின்னோகி பார்த்து ஆனந்த திடலில் திக்கு முக்கு ஆடுவேன் என்னுள்!
மறக்காத மனத்திற்கு நீ இல்லையென்று தெரிந்தும் வலி என்றும் சுகம் என்னுள்!

நாம் வசைபாடிய வார்த்தைகளை கேட்க செவிக்கு இன்று கடலின் அலையின் சப்தமாக என்னுள்!
காலத்தின் இறுக்கம் பிரிவின் வெறுமை இந்த சுகமே நாம்முள் பிரியா  விடை என்னுள்!

பல நினைவுகளை உள்வாங்கிய இதயம் ஏன் ஏப்படி துடிக்கிறேன் உன்னை மறவா மாறா என்னுள்!
கண்ணால் நீ தீண்டிய ஒரு பார்வையின் ஒத்த சொல் ஏன் பார்த்தாய் என்றது என்னுள்!

கொடுமை மீண்டும் ஓர் முறை
கண்டேன் இன்னும் அழியா கண்னில் கண்ணீராய் என்னுள்!
ஆனந்த தாண்டவம் உச்ச வடிவில் உன்னை தேடிய என் பாதம் வலியின வலியால் என்றும் என்னுள்!

நீ வாழந்த நிழலில் என் என் நிழலை கூட தீண்ட அனுமதி மறுத்தேன்
மறைத்தேன் என்னுள்!
ஹஹஹஹ!!!       பார்க்கும் மானிடர்களுக்கு உறவு ஒரு கேலியாக இருந்தபோதும் அதன் மதிப்பு கடலின் எல்லை நீ என்னுள்!
உன்னை உள்வாங்கிய என் மனதை பார்க்கும் போது வானத்தின் ஏழு வண்ணத்தின் நிறம் என்னுள்!

நீ இல்லா இடத்தை கடக்க முயலவில்லை முயன்றேன் முள்ளுடன் என்றும் நீ என்னுள்!
கணக்கேடுப்பு நடந்த நம்முள் அன்பின் போட்ட போட்டி நாட்களை நினைவில் வைக்க மனமில்லா காகித வடிவமாய் என்னுள்!
இல்லா இடத்தில் இருப்பாத இருந்து இருக்கமாக இன்புடன் இன்மை இனிமையாக என்னுள்!







Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: Nivrutha on September 07, 2023, 08:38:26 AM
(https://www.friendstamilchat.net/chat/emoticon/A2/zwrite.gif)நகரா நிமிடங்கள்

💔இப்படி சுடும் என தெரிந்திருந்தால்,தொட்டிருக்கவே மாட்டேன்,
இப்படித்தான் முடியும் என தெரிந்திருந்தால்,தொடங்கி இருக்கவே மாட்டேன்,
வடுக்களும் வலிகளும் இன்னும் முழுதாய் நீங்கவில்லை.

💔 கடந்து போன கசந்த காலங்களை நினைக்கும் கணம், கணத்துபோகும் இதயத்திடம் சொல்லி வைத்தேன்...
திரும்பி வரவே வராது அவ்ளோதான் வருத்தப்படாதே என்று,
இரக்கம் கெட்ட இதயம்..திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என யோசித்து வருத்தப்பட சொல்கிறது.


💔நெருப்பை நெருங்கும் நெகிழியாய்,உன் நினைவுகள் உருக்கும் என தெரிந்து நினைக்காமல் இருக்கவே முயலுகிறேன்.
என்னவெலாம் செய்தேன் அதற்காக.....

சொந்தங்களை கழட்டி விட்டேன்,
நட்பு வட்டங்கள் எனை நெருங்காமல் நிறுத்தி வைத்தேன்,
Chat site ஒன்று கண்டறிந்து சகல அரட்டையும் சலிக்காமல் செய்து சந்தோஷபட்டேன்,
பிடித்ததை மட்டுமே செய்கிறேன்.,
சத்தமான பாடல்கள்,சந்தோஷமான சினிமாக்கள்,விலகி நின்றாலும் எனை விரும்பும் நண்பர்கள்..இப்படி., நினைத்த நேரம் நான் நேசிக்கும் அத்தனையும் என்னை சுற்றி அடுக்கி வைத்தேன்.,


💔இத்தனை செய்தும்,உன்னை யோசிக்கும் ஒவ்வொரு நொடியும் உடைந்து அழ வைக்கிறாயே....நீ அவ்வளவு வலியவனா?? இல்லை நான் அவ்வளவு இலகி போய்விட்டேனா??

💔நீ மரித்து போனால் என்ன...இன்று வரை நீ விட்டு சென்ற நினைவுகள் உனக்கு உயிரூட்ட தவறியதே இல்லை..
உயிர்த்து கொண்டேதான் இருக்கிறாய்,உன் நினைவுகள் நெருடும் ஒவ்வொரு நொடியும்.,
மரித்து கொண்டே தான் இருக்கிறேன்,என்னால் உன் நினைவுகளுக்கு மட்டுமே உயிரூட்ட முடியும் என்பதால்.


💔 உயிர்த்தலும் மரித்தலும் என் கையில் இல்லை,சிரித்து கொண்டே நகர்த்தவே பார்க்கிறேன், கடந்த காலத்தின் வலிகள் சுமந்த கனமான நிமிடங்களை.......

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: Mani KL on September 07, 2023, 10:24:39 AM
மறக்க நினைக்கிறேன் உயிர் மடியும் வரை

என் இதயத்தை தொட்ட முதல் காதல் வலி

 கு!! தாயின் கருவறையில் இருக்கும் போதும்
ஈன்ற போதும் தாய் வலியை சகிப்பது
தாயின் மறு உருவம் உலகத்தை
பார்க்க போகிறது என்று நினைத்து

காதலிக்கும் போது  நீ தந்த இன்னல்களை
நான் சகித்தது நாம் இருவரும் இந்த
உலகத்தில் சந்தோசமாக வாழனும்
என்று நினைத்து

நீடிக்கவில்லை நீண்ட நாள்கள் நம் காதல்
ஆறா காயங்கள் ஆழ் மனதில்
ஆயுள் காலம் முடியும் வரை
ஆணி போல் அடித்தாய் நீ

இருந்தபோதிலும் அதை எல்லாம்
மறந்த என் மனது உன்னிடம்
மாற்றத்தை எதிர்பார்த்தது

உன்னிடம் நான் கொண்ட முதல் காதலை
எண்ணி எண்ணி முற்று புள்ளி வைத்தேன்
காதலுக்கு அல்ல

ஏழே  ஏழு  ஜென்மங்களுக்கும்
மறக்க முடியாத மருந்தே இல்லாத காயத்தை
தந்த உன் காதலுக்கு
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: Sun FloweR on September 07, 2023, 03:49:49 PM
மடமை உலகமிது...
காதலென்ற பெயரில்
கை கோர்த்துக் கொண்டும்
ஊர் அறிய நடம் புரிந்து கொண்டும் சல்லாபிக்கிறது..

சொந்தம் எனும் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டும்
பாசம் எனும் புதை மணலில் புதைந்து கொண்டும்,

தன்னையும் ஏமாற்றி,
பிறரையும் ஏமாற்றி
அன்பு எனும் ஆசைப் பெருங்குழியில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை புதைத்துக் கொண்டு இது தான் வாழ்க்கை என்று கூறிக் கொள்பவர்கள்
வாழ்தலின் அர்த்தம் தெரியாதவர்கள்...
வாழ்தலின் அருமை புரியாதவர்கள் ..

இணையரோடு இணைதலே வாழ்க்கை எனும் மாயப் பிம்பம்
உடைக்கப்பட வேண்டும்..
துணையோடு துஞ்சுவதே
இன்பம் எனும் துயரம் துடைக்கப்பட வேண்டும்..

வாழ்தல் என்பது ஓர் பெருங்கலை.. அதில் இணையும் வேண்டாம் துணையும் வேண்டாம்...
தனித்திருத்தலே அதில் வரம்...
ஒற்றை மனிதியாய் வலம் வருவோம்...
தனித்துவமாய் தகித்து நிற்போம்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 319
Post by: Minaaz on September 07, 2023, 07:44:46 PM
மறக்குமா நெஞ்சம்...!!!



ஆழ் மனதின் ஏக்கங்கள் லப் டப் என்ற ஓசையாய் ஒலித்திக் கொண்டிருக்க நினைவலையாய் ஓயாமல் கரைமோதிடும் அலைகள் போல் அலைபாய்ந்தன உன் நினைவுகள் ..

தாலாட்டாய் உன் இதலோரம் உதிட்டிட்ட வார்த்தைகளால் நிம்மதியாய் தலையணை சாய்ந்திட்ட தருணங்கள் நினைக்கையில் இரா வெளிச்சத்து நிலவும் இருளென காட்சியத்தனவே,

ஆறுதல் சொல்லிட ஆயிரம் உறவுகள் அருகிருந்தும் நீ இல்லை என்ற அந்த ஓர் எண்ணம் கைவிடப்பட்ட தரிசி நிலம் என ஆயிற்று..

வரையறை இல்லாது பொழிந்திடும் மார்கழி மழைத்துளி போல் மனதின் ஆழமான ரணங்களும் கண்ணோரம் கரைந்தோடிற்று கண்ணீர்த்துளியென..

கைகோர்த்திட்டு நெடுந்தூரம் நடந்திட்ட அந் நாளின் நினைவுகள் யாவும் நடந்து சென்ற பாதையெங்கும் மிதிபட்ட பூவென ஆயிற்று...

உரை பனியென திகைத்திப் போயிருக்கும் வேளைதனில் தலை கோரிடும் சற சறப்பு அன்னையின் மடியில் தலை சாய்ந்திடும் போதும் தன்னிலை மறந்து உன்னையே சுற்றிக் கொண்டிருந்தன..

இத்துனை புலம்பல்களும் உன்னை இழந்திட்ட மனதின் ஆதங்கம் என்பதை எப்படியடா உன்னிடம் தூது விடுவது...💔🥹