FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Augustin on August 23, 2023, 01:54:03 AM
-
கல்லூரி பருவத்தில் நான் கிறுக்கிய
முதல் காதல் கிறுக்கல் 😇 🙈🙊🏃
(https://i.ibb.co/d53vHHc/images-1.jpg) (https://ibb.co/d53vHHc)
நாள்தோறும் உனது மெளன
மொழிகள் எனது சிந்தையில்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது !
எனினும் ஏங்கி நிற்கின்றேன்,
எனது விழிகளின் ஈரத்தினை
நீ எப்பொழுது அறிவாயோ என்று !
நடுநிசியில் விழிக்கிறேன்,
நானும் நாணம் அடைகிறேன் உன்னால் !
இறையிடம் கோருகிறேன் இன்றைய
பொழுதாவது உன்னுடன் மலருமா என்று !
-
காலம்தோறும் காத்திருக்கும் என் கண்கள்
உன்னை காண
காலத்தின் கட்டளையால் என்னை விட்டு சென்றபோதிலும்
உன்னை காணாமல்
கண் இமைக்க மறுக்கும் என் கண்கள்
காலம் மாறிய போதும்
கண் இமைக்க மறுத்தது
கலங்கிய கண்களுடன் காண வந்தாய்
கண் துடைப்பாய் என நினைத்தேன்
கண் கலங்கடித்து சென்றுவிட்டாயே நீ
(https://i.ibb.co/XVRygjX/desktop-wallpaper-crying-woman-eye-with-tears-stock-video-footage-sad-eye-crying.jpg) (https://ibb.co/XVRygjX)
(https://i.ibb.co/XVRygjX/desktop-wallpaper-crying-woman-eye-with-tears-stock-video-footage-sad-eye-crying.jpg) (https://ibb.co/XVRygjX)
-
:) Nice
-
👌👍