FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 19, 2023, 11:31:06 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: Forum on August 19, 2023, 11:31:06 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 317

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F317.jpg&hash=2ba129cfd403af11742918121c83dbeb4f2d92d6)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: Sun FloweR on August 20, 2023, 11:55:45 AM
ஏடுகளை சுமக்க வேண்டிய கைகள்
குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கிறது..

புத்தகங்களை ஏந்த வேண்டிய கரங்கள்
கழிவு மூட்டைகளை சுமந்து செல்கிறது..

சீருடையில் வலம் வர வேண்டிய
சிறுவர்கள்
சிதிலமடைந்து கிடக்கின்றனர்
வறுமையின் பிடியில் சிக்கி..

பிள்ளை பருவம் தொலைத்து
குடும்பத்தை சுமக்கிறார்கள்..
விளையாடும் ஆசைகள் துறந்து
வருமானம் நோக்கி ஓடுகிறார்கள்...

ஒரு வாய் சோற்றுக்காக இவர்கள் பணயம் வைப்பது தங்களின் சிறார் பருவத்தை...
வீட்டில் அடுப்பெரிய இவர்கள் விறகாக்கி கொண்டது தங்களின் பால்யத்தை ...

அரசியல் காரணமா?
அதிகாரிகள் காரணமா?
நீங்கள் தான் காரணமா?
நாங்கள் தான் காரணமா?
இவர்களின்  பெருந்துயரின்
ஆணிவேர் எது?

இளமையில் வறுமை கொடிதென்று அன்றே சொல்லிவிட்டாள்
பாட்டி ஒளவை..
கொடிய வறுமை அழிந்தால்
குழந்தைகளின் வாழ்வு மலரும்..
நெடிய ஏழ்மை ஒழிந்தால்
பிள்ளைகளின் துயரம் நீங்கும்..

இன்றைய மனிதர்களே!!
நாளைய வாழ்வைக் காத்திடவும்
வருங்கால சமுதாயம் உயர்ந்திடவும்
எதிர்கால தூண்களை
பாதுகாப்பது நமது கடமை...
வறுமை சங்கிலியில் சிக்குண்ட குழந்தைகளின் வாழ்வை
நேசம் எனும் சாவி கொண்டு
திறந்திடுவோம்..
அதிகார கரம் கொண்டு ஆட்டி வைக்கும் வர்க்கத்தை
அடக்கிடுவோம் புரட்சி கொண்டு... அடக்கிடுவோம்
புரட்சி கொண்டு ...





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: ShaLu on August 20, 2023, 03:19:21 PM
குழந்தைப் பருவம் -
மனிதனின் வாழ்வில் மகிழ்வான மறக்க முடியா பருவம் !!!
எதிர் காலத்தை நோக்கி
கனவுகள் பல சுமந்து
கையில் புத்தகப் பையுடன்
உதட்டில் புன்முறுவலுடன்
கால்களில் துள்ளல் நடையுடன்
துள்ளி குதிக்கும் மான்களாய்
கல்வி பயிலும் ஆவலுடன்
கிளம்பும் சிறார்களை - அவர்களின்
பெற்றோர்களே
அவர்தம் அறியாமையாலும்
குடும்ப வறுமையாலும் போதிய
கல்வி அறிவின்மையாலும்
முதலாளிகள் எனும் முதலைகளின் மனித நேயமின்மையாலும்
குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும்
அதைவிட இன்றியமையா கல்வியும் தேவை
என்றுணராத அறிவற்றவராய்
பள்ளிக்கு  அனுப்பி பார் புகழச் செய்யாமல்
பஞ்சம் போக்க பணிக்கனுப்பும் தீய சக்தியாய்
உருமாறிய அவல நிலை நம் அன்னை தேசத்தில்

நம்பிக்கையான கண்கள்
மகிழ்ச்சி ததும்பும் புன்னகை
மென்மையான கைகள்- இவையே
அடையாளமாய் கொண்ட
அப்பிஞ்சு குழந்தைகளை
கண்ணீர் நிறைந்த கண்கள்
பீதியுற்ற முகங்கள்
கரடுமுரடான கைகள்
உடைந்த கனவுகள்
இங்ஙனம் காண்பது
மனதை வதைக்கும்
மாபெரும் கொடுமை
புத்தகப் பையினை சுமக்க வேண்டிய சிறார்கள் புத்தியில்லா சமூகத்தால் சுமப்பதோ - குடும்ப பாரத்தை!!!

குழந்தைகள் கற்பதற்கும்
சாதிப்பதற்கும்  அதிகம் உண்டு
அவசியமும் உண்டு
இன்றைய குழந்தைகளே நாட்டின்
நாளைய தலைவர்கள்
அவர்களை பணிக்கு அனுப்பி
அழிப்பது அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல
நம் தேசத்தின் எதிர்காலமும் தான்
என்பதை எங்கனம் மறந்தனர்
இம்மதியற்ற மானிடர்
குழந்தைகளின் கல்வி பாதிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும்
பாதிக்கப்பட்டு நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது


குழந்தைகள் இவ்வயதில் சம்பாதிக்க வேண்டியது அறிவையே அன்றி
பணத்தை அல்ல
ஜூன்12 -தேசிய குழந்தை
தொழிலாளர் ஒழிப்பு தினமாய்
அரசு அறிவித்திருந்தாலும்
இலவச கல்வியும் மக்களுக்கு விழிப்புணர்வும்
கொடுத்தா லன்றி அழிக்க முடியாது
இக்குழந்தை தொழிலாளர் முறையை

பூ போன்ற அந்த பிஞ்சுகளைப்
புண்படுத்தாமல்  அவர்களின் கனவுகளைச் சிதைக்காமல் சின்னஞ் சிறிய
பட்டாம்பூச்சிகளின் அச்சிறகினை முறிக்காமல் சுதந்திரமாய் பறக்க விடுங்கள்!
அம்முகங்களில் புன்னகை துளிர விடுங்கள்!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: Nivrutha on August 20, 2023, 04:29:57 PM
(https://www.friendstamilchat.net/chat/emoticon/A2/zwrite.gif) இந்த வாரமும் கிறுக்க போறேன்😉

மலை சுமக்கும் மழலைகள்:👧

👦வயல் வெளியில் வீசப்பட்ட வைரங்களாய்,
துறுவை போல் நடத்தப்படும் தங்கமாய்,
புதைத்த தடம் தெரியாத புதையல்களாய்,
மண்ணோடு மூடப்படும் மாணிக்கமாய்,
போக்கிடம் இல்லாத பொக்கிஷங்களாய்,
குருடன் கையில் கிடைத்த ஓவியமாய்,
செவிடன் காதை சேரும் குழலோசையாய்,

எவனோ வகுத்த கோட்டிற்குள்
எதுவும் அறியாத இளசுகளின் இதயங்கள்,எதையோ தேடி பயணிக்க..
எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள்,
எத்தி தள்ளப்பட்டதோ?
எட்டி உதைக்கப்பட்டதோ யார் கண்டார்?👧


கருங்கல்லை சுமக்கும் கட்டெறும்பாய்,
கனவை கலைத்த கள்வரிடத்தில் சேவகம் செய்யும்
சின்ன பிள்ளைகளின் எத்தனை ஆசை சிறகுகள்
ஒடிக்கப்பட்டதோ யார் கண்டார்?👧


ஏட்டு கல்விக்கு ஏங்கும் எறும்புகளாய்,எத்தனை
பிஞ்சுகளின் கனவுகள் எறிக்கப்பட்டதோ
யார் கண்டார்??
👦

வாளை விட பேனா வலியது தான்,👦
அந்த பாலகனால் ,அதை தொடக்கூட முடியவில்லை


புத்தக மூட்டை சுமக்கவே ஆசை,ஆனால் முதுகில்
ஏற்றப்பட்டதோ வெறும் பொதி மூட்டை👧


👦 ஹெல்ப் லைன் நம்பர்கள் நிறைய உண்டு
👧 ஹெல்ப் க்கு தான் நபர்கள் இல்லை.


உடலால் உழைத்து மனதாலும் களைத்து,கனவை கலைத்த சமூகத்தால் சளைத்து,வாழ்வில் சலித்து எப்படியோ பிழைத்து_இப்படியே போய்விடுமோ? இனிமையாக இருக்க
வேண்டிய இளமை காலம்👧


பள்ளி கனவுக்கு கொல்லி வைக்கும் கொடிய
வறுமை இங்கிருக்க,வளரும் நாடென்று பெருமை கொள்வதை_எங்கே
சொல்லி தொலைக்க?👧


பீட்சா பர்கர் தேவை இல்லை,பிச்சை எடுகாமல் இருந்தால் போதும்.
கான்வென்ட் ஸ்கூல் கனவில்லை,களவாட போகாமல் இருந்தால் போதும்.
பளிச்சிடும் பொம்மைகள் தேவையில்லை,பசிக்காமல் இருந்தால் போதும் என்று,.

தேவையும் ஆசையும் தீண்டாமல் வாழும் திக்கறியா
சிறுபிள்ளைக்கு கல்வி என்றொரு கணை உண்டு,
அதை கட்சிதமாய் தொடுத்தால்,
வறுமை மறையும் பெருமை மிளிரும் என்றே., ஒன்றோ இரண்டோ,
இயன்ற ஓர் உதவி இன்றே துவங்கினால் நாளை நன்நாள் ஆகும்.

இவள் (https://www.friendstamilchat.net/chat/emoticon/A2/zwrite.gif) நான் தான்😉
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: VenMaThI on August 20, 2023, 08:12:07 PM


இளமையில் கல்(படி) என்ற கூற்றை
இளமையில் கல் (பாறை )என்று அறிந்த அவல நிலை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்றனர்
ஐந்திலேயே வளைய பழக்கும் பாவமான நிலை

பச்சிளங்குழந்தையாய் நீ அழுதாய்
அன்பு கரங்கள் பல உன்னை தாங்கின
இன்றும் நீ அழுகிறாய் குழந்தையாய்
ஆனால் அது எவர் காதிலும் விழவில்லையே...

என்ன வலி என்ற கூற முடியாத பருவத்தில்
இதுவோ அதுவோ என்ன கேட்ட மக்கள்
வலிக்கிறது என்று கூவி அழுதாலும்
கேட்டிடாத நிலை ஏனோ?

சரமாய் தொடுக்க
வாசனை பூக்கள் பல இருக்க
வண்ணமிகு பட்டாசை தொடுத்தாய்
ஆனால் நீ அறிவாயோ கண்ணே - அதில்
வெடித்து சிதறுவதென்னவோ
பல கனவுகள் கலைந்த சிறு நெஞ்சங்கள் தான் ...

எழுதுகோல் பிடிக்கும் காரங்களால்
தீக்குச்சி செய்ய பழகினாய்
பற்ற வைத்து எரிந்தது என்னவோ
உன் லட்சியங்களும் கனவுகளும் தான்

அழகு சிற்பமாய் திகழ வேண்டிய நீ
பல பாறைகளை செதுக்குகிறாய்
கள்ளங்கபடம் அறியாத வயதில்
கல்லும் மண்ணும் சுமக்கிறாய்

புது உலகை படைக்க ...
பட்டம் பெற வேண்டிய கைகள்
இன்று புண்ணாய் போனது ஏனோ..
இலகுவான வண்ணத்து பூச்சியான உன்மேல்
வானலாவிய பாரத்தை ஏற்றுவது எனோ ..

என் மகளே என் மகனே
உலகை ஆள பிறந்தாய் நீ
உழைக்க அல்ல இந்த பிஞ்சு வயதில்


பெற்றோரே
குழந்தை தொழிலாளர் எனும் கோலம் உருவாக
புள்ளி வைப்பது என்னவோ
குழந்தையை காட்டி பிச்சை எடுப்பதில் தான்
என்பதை அறிவோம் .. முதலில் அதை ஒழிப்போம்

குழைந்தைக்கு கஞ்சி கூட வேண்டாம்
கல்வியை மட்டும் புகட்டுங்கள்
உங்களை தோளில் ஏற்றி சுமந்து
தன் சொந்த காலில் நிற்கும் உம் பிள்ளை

இன்று உம் பாரத்தை சுமக்க
அதன் கால்களுக்கு மட்டுமல்ல
மனதிற்கும் வலிமை இல்லை
என்பதை அறிவீர்
பொருள் ஈட்டும் பிள்ளையாய் அல்ல
பார் போற்றும் பிள்ளையாய் வளர்ப்பீர் ....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: Mani KL on August 20, 2023, 09:01:28 PM
பாரம் சுமக்கும் குஞ்சு குட்டிகள்
நாளைய பாரதம் இன்றைய இளைஞர்களின்
கையில் என்று சொல்வது நியாயம்!
கல் தூக்கும் கைகளை கண்டு
கண் சிந்தும் கண்மணிகளை
பார்க்காமல் சென்றால்
படைத்தவன் பொருக்க மாட்டான்
கல்வி வாயிலாக பல கனவுகளை
காணும் கண்மணிகளை கண்ணீர் சிந்த விடுவது
நியாயமா?
புத்தகப்பைகள் தூக்கும் சிறு வயதில்
சாக்கு மூட்டைகளை தூக்கும் அவல
நிலைக்கு தள்ளி விடுவது
நியாயமா?
பேனா பிடிக்கும் மென்மையான கரம் கொண்டு
கடினனமான கருங்கல் தூக்க வைப்பது
நியாயமா?
பள்ளிக்கு போய் சந்தோசமாக துள்ளி குதித்து
விளையாடும் சிறு பருவத்தை சீரழிப்பது
நியாயமா?
குடும்ப சுமை போக்க குட்டிகளின் தலையில்
கடினமான பாரத்தை சுமக்க வைப்பது
நியாயமா?

வறுமையில் வாடி குழந்தை தொழில் எனும்
சங்கிலியில் சுற்றி கிடக்கும் பிஞ்சு உள்ளங்களை
அன்பு எனும் சாவி எடுத்து கல்வி எனும்
கரம் கொண்டு கட்டு அவிழ்த்து விட வேண்டும்
குழந்தைகள் தொழிலாளர் தினத்தை ஒழிப்போம்
 குழந்தை கல்வி காப்போம்
 புதிய. பாரதத்தை  உருவாக்குவோம்
 ஜெய்கிந்த்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: அனோத் on August 21, 2023, 01:37:06 PM
பள்ளி செல்லும் வழியெல்லாம்
துள்ளியோடும் மழலைகள்
கொஞ்சும் எள்ளி நகையாடும்
காட்சிகளை
காணும் பொழுதெல்லாம் ........!


கொஞ்சம் தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கும் சிறார்கள்
கதை நாம் அறியோம்..........!


படிப்புக்காக சில குழந்தைகள்
பட்டினிக்காக இன்னும் சில குழந்தைகள்
அவரை படைத்தவன் உன்னிடத்தில்
தான் இக்கேள்வி.......

ஆசிரியர் நல்  ஆசிக்காக சில குழந்தைகள்
ஆலய ஓரங்களில்  நல்ல பசிக்காக
இன்னும் சில குழந்தைகளை படைத்தவனே !
உன்னிடத்தில் தான் இக்கேள்வி ?

அறிவெனும் ஊற்றை உறிஞ்ச சில குழந்தைகளும்
அரையண்ட குப்பைகளை
பொறுக்க இன்னும்  சில குழந்தைகளையும்
படைத்ததவனே !
உன்னிடத்தில் தான் இக் கேள்வி ?

சீருடையணிந்து புன்னகை சொட்டும்
செவ்விதழ்களுக்காய் சில குழந்தைகள்
சீறியழுது புன்படும் செஞ்சோற்று கடன் தீர்க்க
இன்னும் சில குழந்தைகளை
படைத்தவனே !
உன்னிடத்தில் தான் இக்கேள்வி ?

பாசம் காட்டி தேசம்
பல படிக்க சில குழந்தைகளும்
நேசம் இழந்து நாசமாகும்
வாழ்வுக்காய் சில குழந்தைகளையும்
படைத்தவனே !
உன்னிடத்தில் தான் இக்கேள்வி ?

அறிவெனும் ஆழ்கடலை பருகிட
அறியாமை வயதிலேயே ஒதுக்கப்படும்
பாலகர் கதை யார் அறிவர் ?

ஆண்டவனே உன்னிடத்தில் எந்த கேள்வியையும்
கேட்டு பயனில்லை......
பாலகரை காக்க வேண்டிய பாரிலே
பாலாபிஷேக வேதங்கள்
 வேதனையளிக்கிறது ....

பசியால் மாலும் செல்லங்களை
அள்ளி அணைக்கும் வேளையில்
இறையாசி எனும் செல்வங்கள்
தேவைதானா என்கிறது .......


எத்தனை பட்டதாரிகள் இருந்தும்
பட்டினியால் அழியும் சிறார்களுக்கு
விடியல் இல்லை .........

வேடிக்கை பார்ப்பது தான் நம் வழக்கம்
வேதனை வாழ்வுக்கு ஏது விளக்கம் ?
வேதங்கள் இருக்கட்டும்
வேற்றுமைகள் விலகட்டும்
வெற்றியால் நம் மழலைகள் துள்ளட்டும்............

நாம் விதைத்த விதிகளை நாமே திறந்திடுவோம்
அன்பெனும் சாவி கொண்டு
அகிலத்தை ஆண்டிடுவோம் ........

தனியொரு மழலைக்கு
கல்வி இல்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
பாரதி வழி நின்றிடுவோம்    .........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: mandakasayam on August 21, 2023, 06:30:59 PM
மகிழ்வை கொடுப்பது மழழையின் சிரிப்பு  மனப்பாரமும் இறங்கி விடும், மகிழ்ச்சியே அறியாத உன்னை பாரம் சுமக்க வைக்கிறது அறிமையாமையில் வந்த வறுமை,

கல்வி கற்க்கும் நீ கட்டிட தொழிலாளி
கால்பந்து விளையாடும் வயதில் கால்வாய் அள்ளுவதா, வீதியிலே சகாகக்களுடன் சுற்றி திரியும் நீ விறகு வெட்ட செல்லும் அவலம்!!

பறக்கும் பட்டாம்பூச்சிக்கு பாரம் கொடுத்து
முத்தமிடும் கைகளுக்கு கூலி கொடுப்பது
இந்த மானுடர்கள் வரையறுத்த வறுமைக்கோடு ...


சாலையிலே தாள் பெருக்கி,  பலர் வீடுகளில் துணிதுவைத்து கடைகளில் எடுபுடியாய்
வேலை செய்கிறாய், எங்கே உனது எதிர்காலம்... கல்வி  முக்கியமல்ல உனது கைகளுக்கு கூலி தான் முக்கியம் ....

புத்தகமும் எழுதுகோலும் சீறுடைகளும் எங்கே
வியர்வை சிந்தி பாடு பட்டு பசியைத்தானே போக்கினாய், இதை காணும் பொழுது கனவுகள் காணல் நீராய் உன் வியர்வையில் உறைந்து போனதே

புத்தாடைகள் உடுத்தியதுஇல்லை  பலவற்றின் உணவுகளை கண்டதும் இல்லை
பளு சுமக்கும் உனது கைகளுக்கு ஓய்வும் இல்லை!

 [/color[இலவசங்கள் முறையாக சென்று இருந்தால் இன்று பல நூல்களை சுமக்கும் பிஞ்சு கைகள் செங்கல் சூளையிலும் தெருவோரங்களிலும் பட்டாசு தொழிற்சாலைகளிலும் என பல வேலைகளில் தனது எதிர்காலமே எட்டாக்கனியாகிய நிலைமை இருந்திருக்காது

வறுமையும் வயிற்று பசியும் வளைத்து  போட்டாலும் வானுயற பறக்க   கல்வியே திறவு கோல்!!  பணத்திற்க்காக பசியை காரணம் காட்டாமல் பள்ளிபருவத்தின் முக்கியத்தை அனைவரும் எடுத்துரைப்போம்!!  குழந்தைதொழிலாளர்களை ஒழிப்போம்!!! 
இவண்: மண்டகசாயம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 317
Post by: Minaaz on August 21, 2023, 07:54:09 PM
தொலைந்த புத்தகத்தில் எழுதப்பட்ட வரிகள் உமது...

புத்தகப் பொதி சுமக்கும் வயதில் கற்பொதிகளை சுமந்திட அவசியம் என்ன வேண்டியிருக்கிறது...!!?

பேனாவைப் பிடித்து உன் கையெழுத்தின் மூலம் இவ் உலகை ஆழ நினைக்கும் உமக்கு பாறைகளை குடைந்திடும் உளிகள் எதற்கு..!!?

கல்வியின் படிகளை அலங்கரிக்க உரிமைகளின் குரல்களைப் பாடி இவ் உலகத்தையே மூழ்கடித்திட்ட பாரதியார் கவிகள் எங்கே...!!??

புராணங்களும், இதிகாசங்களும் கல்வியின் சிறப்பினை எடுத்துக் காட்டி கல்வியில் முத்துக் குளிக்கும் வேளையில்,, அடிமட்டத்தில் அரவணைப்பின்றி அல்லாடுவதுதான் ஏனோ...!!??

விதி இட்ட கோலமோ..??! இல்லை சதி இட்ட கோலமோ..?!!
கண் முன்னே வாய் மூடி வேடிக்கை பார்க்கின்றன உரிமையை பெற்றுத் தரும் அறம்களும் இங்கே...

இலவசக்கல்வி என்று அறிமுகப்படுத்திய கல்வி இன்று தனியார் மயமானதினால் தான் என்னவோ,, பிஞ்சுக் கரங்களும் பிலக்கும் அளவிற்கு உழைக்கத் துணிந்தது...??

அறிவை அள்ளி வழங்கும் பலர் அடிமட்டம் உயர்மட்டம் என சாதி பிரிப்பதனால் தானோ, உடலை வருத்தி நீ அயராது கண் விழிப்பது...??

வீதியோரம் படுக்கையை தயார்படுத்தும் உம்மிடம் யாரும் அருகிருந்து உன் ஆசைகளை ஆராயாததினால் தானோ, சிறு வயதிலே சிறைப்பட்டு உன் கனவுக்குள் உனக்கான ஆறுதலைத் தேடுவது...??

எத்துனை கேள்விகள் எழுகிறது துணை நிற்கும் என் கண்ணீருடன்...

கலங்காதே தேயாதே மனிதன் என்ற கோட்பாட்டிற்குள் அணுகும் மனித நேயம் கொண்ட பலரும் இங்கே இருக்கத்தான் செய்கின்றனர், அவர் ஒருவரின் பார்வையில் விழும் உன் பிம்பத்தில் உனது அழகிய வாழ்வையே வடிவமைத்திருப்பான் அந்த இறைவன்..


போராட்டம் இல்லாத புற்களுக்கும் இங்கே வரலாறு என்றொன்றிராது, கல்விக்கனிகளை சுவைக்க வேண்டும் என்ற உன் போராட்டம் உன் கடின வாழ்வையே ஓர் அங்கீகாரம் சூட்டும் போர்வையாக்கித்ததரும் என்பதில் உறுதியாய் நில்...

பயம் என்பதை துடைத்தெறிந்து துணிந்து குரல் கொடு உன் உரிமைக்காக காலம் செல்லும் வேகத்தில் உன் உரிமைக் குரலை செவிமடுத்து உன்னோடு குரல் கொடுத்து நடந்திட ஓர் உறவாவது உன்னோடு பயணத்திடும்...

உன் கனவுகள் அனைத்தும் உதித்திடும் காலம் தொலைவிலில்லை....

கலங்காதே...!!
தேயாதே...!!