FTC Forum

Entertainment => விளையாட்டு - Games => Topic started by: VenMaThI on August 17, 2023, 02:17:26 AM

Title: வார்த்தை விளையாட்டு
Post by: VenMaThI on August 17, 2023, 02:17:26 AM


காசு பணம் துட்டு மணி.....

மக்களே நாம அன்றாட வாழ்வில் பணம் எவ்ளோ முக்கியம்னு எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..

ஆனா அந்த பணம் எந்த எந்த எடத்துல என்ன பெயர்ல பயன்படுத்தப்படுது அப்படினு பார்க்கலாம்..

உதாரணத்துக்கு

திருமணத்தில் பெண் வீட்டார் கொடுப்பது சீதனம்... கோவில் உண்டியல்ல செலுத்தினால் அது காணிக்கை...

இப்ப ஒரு ஒருத்தரும் தங்களுக்கு தெரிஞ்ச பணம் என்பதற்கான வேறு பெயர் பதிவிட்டு விளையாடலாமா??

Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on August 17, 2023, 02:25:11 AM
வீட்டுக்கு வாடகை
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Cholan on August 17, 2023, 02:41:33 AM
வேலை செய்தவருக்கு குடுப்பது கூலி
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: SweeTie on August 17, 2023, 03:39:16 AM
குற்றத்தை மறைக்க  கொடுப்பது லஞ்சம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 17, 2023, 10:46:24 AM
வாங்குவது கடன்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Lakshya on August 17, 2023, 10:58:33 AM
ஒருவருக்கு பண உதவி செய்வது...
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: vaseegaran on August 17, 2023, 11:07:28 AM
நன்கொடை
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Minaaz on August 17, 2023, 11:08:43 AM
வியாபாரம் நோக்கத்தின் ஆரம்பம் முதலீடு , எதிர் கால தேவைக்காக சேகரித்து வைத்தால் சேமிப்பு 😊🤭
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Aathirai on August 17, 2023, 12:42:24 PM
கட்டணம் (பள்ளியில் )
விரையம் - செலவு
பொற் காசு பரிசு பொருள் முந்தைய காலத்தில்
கப்பம் - தவறு செய்தல் கட்டுவது
தானம் - பிறருக்கு அன்பாக கொடுத்தல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Suji on August 17, 2023, 04:38:39 PM
வெற்றிப்பெற்றவனுக்கு கொடுத்தால் அது பரிசு..
இல்லாதவருக்கு கொடுத்தால் அது தர்மம்...
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 17, 2023, 04:59:31 PM
பாரம்பரிய சொத்து முதுசம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on August 17, 2023, 05:41:21 PM
கல்யாண ஜோடிக்கு கொடுக்கப்படும் மொய்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 17, 2023, 11:08:42 PM
செலவினை மிஞ்சிய வருமானம் லாபம்..

வருமானத்தை மிஞ்சிய செலவு நட்டம்..
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on August 17, 2023, 11:43:19 PM
கலைஞருக்கு அங்கீகாரம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 18, 2023, 12:09:43 AM
அரசின் ஒரு வருமான  வழி  வரி
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Nivrutha on August 18, 2023, 08:06:38 AM
செய்த வேலைக்காக பெறுவது சம்பளம் அல்லது ஊதியம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 18, 2023, 10:53:04 AM
குற்றத்துக்கு தண்டனை அபராதம் / தண்டம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on August 18, 2023, 11:28:04 AM
பிறந்தநாளுக்கு அன்பளிப்பு
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 18, 2023, 11:53:29 AM
தெய்வத்திற்கு கொடுப்பது காணிக்கை
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Cholan on August 18, 2023, 12:02:14 PM

மாத சம்பளம் வந்தபிறகு தருகிறேன் என்று வாங்கும் பணம் கடன்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: IniYa on August 18, 2023, 12:08:11 PM
இணையத்தளத்தில் விளையாடி
போனது பணம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 18, 2023, 12:17:22 PM
போட்டியில் வைக்கும் பணம் பந்தயம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on August 18, 2023, 12:24:03 PM
நோயை குணப்படுத பிறகு மருத்துவமனை கட்டணம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Cholan on August 18, 2023, 12:33:23 PM

வியாபாரத்தில் தோல்வி நஷ்டம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on August 18, 2023, 01:06:03 PM
வாகனம் ஓட்டுவதற்கு தேவை பெட்ரோல்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 18, 2023, 01:52:19 PM
பாராட்டி பரிசாக கொடுப்பது பொற்கிழி
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Nivrutha on August 18, 2023, 02:43:45 PM
Retirement கு பிறகு கிடைக்கும் பணம் ஓய்வூதியம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Nivrutha on August 18, 2023, 02:49:41 PM
வேலை செய்யாமல், அதிகாரத்தை காட்டி பெறுவது கிம்பளம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Nivrutha on August 18, 2023, 02:52:09 PM
கடன் தொகை மொத்தமாக திருப்பி கொடுத்து விட்டால் அது அசல், அதை கொடுக்கும் வரை தவணை முறையில் கொடுப்பது வட்டி
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 18, 2023, 05:24:47 PM
இழப்பீட்டு  பணம் காப்புறுதி
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Nivrutha on August 18, 2023, 07:14:59 PM
Hotel ல bill கு மேல அதிகமா குடுத்தா tips தமிழ் ல சொன்னா கொசுரு 🤭🤭
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on August 19, 2023, 11:06:01 AM
விவாகரத்தின் பின் கிடைப்பது ஜீவனாம்சம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on August 20, 2023, 04:17:08 AM
குடும்பத்தின் எதிர்கலத்தை நினைத்து குடும்ப தலைவி/தலைவன் போடு வைப்பது ஆயுள் காப்பீடு (life insurance)
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Nivrutha on August 20, 2023, 08:47:22 AM
வருங்காலத்தில் உதவும் என்று அடுத்த தலைமுறைக்காக,பொருளாகவோ நிலமாகவோ முதலீடு செய்யப்படும் பணம் சொத்து
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on September 21, 2023, 04:33:15 AM
பொது போக்குவரத்துக்கு (bus,train...) தேவை டிக்கெட்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Madhurangi on September 21, 2023, 07:21:27 AM
அஞ்சல் வழி அனுப்பும் பணம் பண அஞ்சல்
Money order
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ishaa on October 28, 2024, 12:12:57 PM
Veeduku current venumna olunga kaddhunga
மின்சார கட்டணம் a😊
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: RajKumar on October 28, 2024, 12:41:43 PM
ஊழியர்களுக்கு கொடுக்க படும் ஊக்க பணம்     போனஸ்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Vethanisha on October 28, 2024, 01:14:23 PM
கணக்கில் வராதது கருப்பு பணம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Thooriga on January 27, 2025, 02:33:30 PM
கைமாத்தாக கொடுக்கும் பணம் ... கடன்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Ninja on January 27, 2025, 04:25:42 PM
கொடுத்தா கடன்.. கொடுத்த கடன் திரும்ப வரலனா வாராக்கடன் (bad debt)
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: RajKumar on January 27, 2025, 10:22:29 PM
கடன் அடைக்க மூடியலானா வைக்கனும் function அதுல கிடைக்கும் பணம் மொய் பணம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Thooriga on January 28, 2025, 10:35:13 AM
நம் வாதத்தை முன்னிறுத்தி மற்றோருக்கு புரியவைப்பது  விவாதம்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: RajKumar on February 26, 2025, 03:38:24 PM
 
🪷மதிப்பு அல்லது பயன் உள்ள பொருட்களைக் கொண்டுள்ள பணம் பண்டப் பணம் 🪷
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: Yazhini on March 23, 2025, 04:44:37 PM
மதிப்பை இழந்த பணம் -  செல்லாகாசு
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: RajKumar on April 07, 2025, 01:31:10 PM
 
அசல் தொகை மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கு ஈடாக மற்றொரு தரப்பினருக்கு பணம் வழங்கப்படுவது  கடன்
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: KS Saravanan on May 18, 2025, 08:42:29 PM
காண மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
வழங்கியவன் திண்டாட..!


(என்ன விளையாட்டு னு புரியல...ஏதோ ஒரு post...related to கடன்..!)

வேலை செய்யறவங்களுக்கு மாசா மாசம் கிடைக்கும் சம்பள பணம்..!
Title: Re: வார்த்தை விளையாட்டு
Post by: RajKumar on May 22, 2025, 03:30:26 PM
எதிர் கால தேவைக்காக சேகரித்து வைத்தால் சேமிப்பு பணம்