FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on July 21, 2023, 05:55:21 PM
-
நண்பர்கள் கவனத்திற்கு ...
நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் பனிரெண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும் பொருட்டு கவிதை மழைகளை பொழியலாம் ...
கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் ..
எதிர்வரும் ஜூலை 28 ஆம் தேதிக்கு முன்பாக உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் பனிரெண்டாம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி மூலம் உங்களை வந்தடையும்.
-
12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்குமாம் குறிஞ்சிப்பூ
நீயோ நொடிக்கொரு முறை புதிதாய் பிறக்கிறாய்
புதிதாக வரும் சகாக்களின் உருவில்
பிறப்பது நீ மட்டும் அல்ல புதிதாய் வரும் உறவுகளும் தான் .
நண்பர்களால் நண்பர்களுக்காக
நம் நண்பர்கள் அரட்டை அரங்கம்
அன்பான வார்த்தைகளும்
ஆறுதலான பேச்சுகளும்
முகமறியா நட்பில் கூட
அகம் மகிழ வைக்கும் தருணங்கள்
மாய உலகம் தான் என்றாலும்
மனதின் ரணம் போக்கும் உலகமாய் நீ .
ஜாதி மதமும் மட்டுமல்ல
முகவரியும் கூட அறிந்ததில்லை
ஜனங்களின் வார்த்தை மட்டுமே இங்கு
பல வலிகளை தீர்க்கும் மருந்தாய் .
கண்ணீரும் வடித்துள்ளேன்
கவிதையும் வடித்துள்ளேன்
கற்பனையில் மிதந்துள்ளேன்
நட்பின் ஸ்பரிசத்திலும் மிதந்துள்ளேன்
துக்கத்தினால் கனமான மனமும்
உன் கானமழையில் நனைந்து இலகுவானது
ஆம்
மனதின் பாரம் பல
மாயமாய் மறைந்த இடம்
வாழ்வின் நான் காணாத
இன்பம் பல கொடுத்த இடம் ..
கனவாய் இருந்த பலவும்
நெனவாய் ஆனது உன்னால்
தீதும் நன்றும் இருந்த போதும்
பல நன்மைகள் நிகழ்ந்தது உன்னால்
என்றும் நீ கர்வமுடன் வீர நடை போடு
ஆண்டுகள் பண்ணிரண்டு மட்டுமல்ல
இன்னும் பல பல கடந்து செல்
புதுப்புது முகங்களை மட்டுமல்ல
அவர்களின் புன்னகையும் காண ...
நல்வழிநடத்தும் அரங்கத்தின் அரசனே
இந்த வெற்றி அனைத்தும் உமக்கே சொந்தம் ..
-
[
ஆண்டுகள் என்னவோ பன்னிரண்டு ஆனால்
உன் வளர்ச்சி அதுபோல் பல மடங்கு
சீராட்டி பாராட்டி வளர்த்தவர் பலரும்
அண்ணார்ந்து பார்க்க நீ வளர்ந்துவிட்டாய்
வருவோர்க்கெல்லாம் வரமாய் கொடுத்தாய்
பரிவும் பாசமும் பகிர்ந்து கொடுத்தாய்
இனிமையாய் பேசவும் அன்புடன் பழகவும்
இரவும் பகலும் கற்றுக்கொடுத்தாய்
இதயங்கள் மட்டுமே பேசிடும் இங்கு
இன்னிசை கூடவே பாடிடும் இங்கு
சண்டைகள் சச்சரவுகள் கூடவே வந்தாலும்
சமரசம் பேசி தீர்த்திடும் தோழர்கள் இங்கு
ஆழ் கடல் சூழ்ந்த உலகெங்கும் வாழும்
அன்பர்கள் கூட்டம் கூடிடும் இங்கு
கவலைகள் கஷ்டங்கள் மறந்து அனைவரும்
அன்புடன் இணைந்து வாழ்கிறார் இங்கு
சிறியவர் பெரியவர் பேதங்கள் இல்லை
ஜாதிகள் இல்லை மதங்களும் இல்லை
ஆண்களும் பெண்களும் சரிநிகர் இங்கு
ஒற்றுமை எங்கள் பலம் என சொல்வோம்
பரஸ்பரம் பழகும் நண்பர்கள் உண்டு
எதிர்பார்ப்பு இல்லாத தோழமை உண்டு '
உடன் பிறவா உறவுகளும் உண்டு
நண்பர்கள் இணையமே நீ வாழ்க!
ஆல் போல் வளர்ந்து அறுகுபோல் வேரூன்றி
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
/b]
-
நட்புக்காக நண்பர்களால் உருவாக்கப்பட்ட
நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கமே !!!
நண்பர்கள் ஆவலாய் நட்பு நாடி வரும் ஓர் உன்னத அரங்கமே
உன்னுடன் செலவிடும் அந்த அழகிய தருணங்களுக்காக
ஒவ்வொரு நாளும் ஓடோடி வந்தோம்
உன்னைத் தேடி
எவ்வளவோ பொழுதுபோக்கு
வழிகள் இருந்தாலும் மனம்
பொழுதைப் போக்க தேர்வு செய்ததோ
உன்னை மட்டுமே
உன் அரங்கம் வரும் நண்பர்களுக்கு தந்தாய் பல இனிய நினைவுகளை
அரட்டை அரங்கங்கள் பற்பல
அன்பு பாராட்டி நட்பு கொள்ள -
இருப்பினும் வேறெங்கும் போக மறுத்தது மனம்
உன்மீது கொண்ட பற்றினால்
உன்னை நாடிவரும் நண்பர்களின்
துன்பங்களை மறக்க செய்யும்
இனிய நண்பனே
ஆச்சர்யமான பல மனிதர்கள்
ஒன்றுகூடும் அற்புத அரங்கமே
உன்னுடன் போட்டியிட்டு பொறாமையுற்ற
இணையதளம் பல முன் கம்பீரமாய் கடந்தாய்
ஒன்றல்ல இரண்டல்ல ...பன்னிரு ஆண்டுகளை
நீண்ட நெடும் ஆலமரமாய் வளர்ந்து
உன்னிடம் இளைப்பாற வரும் நண்பர்களை
உன் இன்னிசை பண்பலையால்
செவி குளிர்ந்து இன்புற செய்தாய்
பொழுதுபோக்குக்காக வந்த நண்பர்கள்
பொழுதை மட்டும் போக்காமல்
அவர்களின் பல்திறன் வளர்க்கும்
பள்ளியாய் ஆனாய்
இணையத்தின் வளர்ச்சிக்காக ஒருபோதும்
குறுக்கு வழியில் செல்லாமல்
உன்னை நாடி வரும் நண்பர்களின்
நலனையும் பாதுகாப்பையும்
காப்பதே முதற் குறிக்கோளாய்
கொண்டாய்
அதனால் தானோ என்னவோ
அனைவர் கவனத்தையும் ஈர்த்து
தனித்தன்மையுடன் குன்றுகளின்
நடுவே கோபுரமாய் உயர்ந்து
பிரகாசிக்கிராய்
பன்னிரு வருடம் !!!
ஆம் மலைப்பாகத் தான் உள்ளது
வெற்றி என்பது ஓர் நாளில் கனியும் கனியல்ல
வலுவான நிலைத்தன்மையும்
கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்
பல்வேறு நண்பர்களின் ஒத்துழைப்பும் இருந்ததால் மட்டுமே சாத்தியம் ஆயிற்று
காலத்தால் அழியா காவியமாய்
வரவிருக்கும் வருடங்களும் இதே போல்
இனிதே அமைந்து மற்றுமொரு மைல்கல்லை இவ்வரங்கம் அடைய அன்பு தோழியின் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்..!!!
-
ஹே உன்னதான் உன்னதான்ன்ன்....
போங்கய்யா நீங்களு உங்க பொங்கசோறும்னு
எத்தன தடவ மூட்டமுடிச்ச கட்டிகிளம்புனாலும்
செவுத்துல அடிச்ச பந்தா
திரும்பி உங்கிட்டயே வரேனே
ஏன் தெரியுமா?
உன்ன விட்டு போ முடியாம தான்..
எனக்கு சில நேரம் தோணும்
நம்ம ஏன் நமக்கான நேரத்த எடுத்துக்குறதே இல்ல
இங்கயே சுத்தி சுத்தி வரோமே
Self exploring, Self grooming இத பத்திலாம் நெனைச்சதே இல்லயே
ஏன்னு? அடிக்கடி தோணும்
நல்ல ஆழமா யோசிச்சி பாத்தா
எனக்கு எப்போ டைம் கெடச்சாலும்
நா உன்ன தேடிதான் வரேன்
அன்பு,நட்பு,காதல், இசை, கவிதை,கருத்து ,பஞ்சாயத்து
இப்படி எத்தனையோ அழகான உணர்வுகள
எனக்குள்ள நீ வளர்த்துவிட்ருக
இதுவே ஒரு விதமான Self culturing தான்ல..
நானுலாம் பாட்டு கேட்டா எப்பவுமே
பாட்டு நல்லா இருக்கா? இல்லையா ?
அவ்ளோதான் என் மூளை யோசிக்கும்
நல்லா இருந்தா கட் அவுட்டு
இல்லனா கெட் அவுட்டு பீல்ல டீல் பண்ணிட்டு
போயிட்டே இருப்பேன்
ஆனா "இசை தென்றல்" மாதிரி ஒரு ப்ரோக்ராம்க்கு
Rj பண்ணதுல இருந்து
நா பாட்டு கேக்குற விதமே மாறிருச்சு
எந்த பாட்டு கேட்டாலும்
அது என் மண்டைல ஏறி உட்காந்துகிட்டு
கேள்வி மேல கேள்வி கேக்கும்
Bgm எப்படி இருக்கு ?
Lyrics எப்படி இருக்கு ?
மியூசிக் யாரு தெரியுமா ?
சிங்கர்ஸ் யாரு தெரியுமா ?
இந்த மாதிரி பல கேள்விய
அந்த பாட்டு என்ன தேட சொல்லும்
எனக்குள்ளயும் எதோ இருக்கு பாரேன்னு
என்னை எனக்கே அடையாளப்படுத்தி
அன்பின் ஸ்நேகிதியா எடம் குடுத்து அழகுபாக்கற
FTC-FM மற்றும் இசை தென்றல் நிகழ்ச்சிக்கும் என் நன்றி..
நட்பு
நட்புனா என்னனு தெரியுமா உனக்கு ?
சம்யுக்தானா யாரு தெரியுமா உனக்கு ?
இந்த மாதிரி பஞ்ச்லாம் பேசிக்கினு
மெயின்ல பிரண்டுக்காக சண்டை வழிச்சிக்கினு
தினம் ஒரு பஞ்சாயத இழுத்துகினு
அழும்பு பண்ணிட்டு இருந்தேன்…
நமக்கே தெரியாம நமக்கு பின்னாடி
விபூதி அடிச்சிக்கினு இருப்பாங்க..
அப்பறம் புரியும் எவன் உண்மையா இருக்கான்
எவன் டகுல்பாஸ் வேலைய பாக்குறானு..
இந்த மாதிரி மனுஷ மக்கள புரிய வெச்சி
Zen-modeக்கு அழைத்து சென்ற
FTC-CHATக்கு என் நன்றியோ நன்றி…
மணிகணக்கா ஈடுகுடுத்து பேசுற Kan சிஸ்
பாரபட்சம் பாக்காம இழுத்து போட்டு அடிக்கிற Pavi சிஸ்
தமிழுகே டிக்ஷனரி போடவெச்ச Bree சிஸ்
ஒருவாசகம் பேசுனாலும் திருவாசகமா பேசுற Paul
அடிவாங்கிட்டு கம்பதுல கட்டிவெச்ச பாட்ஷாமாதிரி நிக்குற Viper
பாசமலர் சிவாஜியவே தூக்கிசாப்ட Anona
கவசகுண்டலமா இருந்து அடிதாங்குற Socky சீனியர்
சத்துடானிக்கா சுமைதாங்கியா தோள்குடுக்ற Gab
இவங்கலாம் எனக்கு FTC குடுத்த வாழ்நாள் பொக்கிஷங்கள்...
ஒரு சில இடத்துல மட்டுமே
எல்லாரும் பாகுபாடு இல்லாம
சமமா பீல் பண்ணுவாங்க
அந்த மாதிரி ஒரு இடம் தான் FTC..
என் வாழ்க்கைல சில நிரந்தர உறவுகளை தந்த
உன் பயணம் தலைநகரம் வடிவேல் மாதிரி
Endcard இல்லாம போயிக்கினே இருக்கணும்.
உன்னோட இந்த 12 வருஷ பயணத்துல
7 வருஷமா உன் கை பிடிச்சி நடைபழகின பெருமையோட
என்றும் உன் அன்பின் சிநேகிதி சம்யுக்தா...
-
ஆண்டு விழாவின் அரசன் Ftc க்கு.
வலைதளத்தில் வண்ண கோலமிட்டு
வரவேற்றாய் வசந்த காலத்தின் முதல் தொடக்கமாக பல வலிகளைக் கடந்து கரை சேர்ந்தேன் உன்னிடம் நிஜ வாழ்க்கையில் ஏமாற்றங்களை அடைந்த நான் இங்கு
பல நண்பர்ளின் பட்டாளம் அளவு கடந்த மகிழ்ச்சி அளித்தது...
எனது வருகைக்காக நண்பர்கள் கொடுக்கும் வரவேற்பு எல்லையில்லா உற்சாகம் என்னை நெகிழ செய்தது !!!
கடல் தாண்டி இருக்கும் முகமறியா நண்பர்களை எனது கையில் தவழ வைத்தாய்
முகமறியா நட்பின் மகத்துவத்தைக் கண்டேன்
நட்புக்கு ஏங்குவோர்க்கு ஏணியமைத்தாய் ஏற்றம் தானே தவிர இறக்கமல்ல. நாகரிக உறவாகவும் வரம்புமீறா நட்பாகவும் இன்னும் மனதிற்குள் களமாடிக்கொண்டிருக்கிறது...
பல நிகழ்ச்சிகள் மூலமாக என்னுள் புதைந்திருக்கும் திறமைகளை பலருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய கண்ணாடியாக!!
என்னுள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் செதுக்கிய சிற்பியே நீதான்!!!!!
இது போல பல நண்பர்களின் அசாத்திய திறமைகளை உன்னால் மட்டுமே வரையறுக்க முடியும் அந்த புகழ் உனக்கே உரித்தான ஒன்று!!!!
அது மட்டுமா? ?
உனது மன்றத்திற்க்கு மழலையாகவந்தேன்
மலைத்துப்போனேன்!!! இலட்சக்கணக்கில் பதிவுகள் நட்சத்திரங்களாக பிராகாசித்து கெண்டிருந்தது!!!!!!
எண்ணற்ற தலைப்புகள் ஏராளம் ,,பல படைப்பாளிகளின் பதிவுகள் நேர்த்தியாக பரவிகிடந்தது ஆண்டுகள் பல கடந்தாலும் அவர்கள் உன்னால் ஜொலித்து கொண்டுதான் இருக்கிறார்கள்!!!!
!!!!!!வியப்பின் உச்சம்!!!!!!!
அந்த வரிசையில் கடைக்குட்டியாக உன்னுடன் பயணிப்பதை மார் தட்டி சொல்வேன் உனக்காக எனது நேரத்தை செலவிடுவதை கண்டு ...
துயில் கலைந்தும் விழிகள் உன்னை நாடி வரும், விரல்கள் உனது இடுக்கையை இடம் பிடிக்கும் உன்னை விட்டு நகர்ந்து செல்ல என் மனம் அடம் பிடிக்கும் பிரமாண்டத்தின் வெளிப்பாடு!!!!!!
அரட்டைக்கு மட்டுமல்ல அனைவரின் இதயத்திலும் தவிர்க்க முடியா பந்தம் நீ!!!!!
மேலும் மேலும் பல சாதனைகள் படைக்க.
நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்திற்கு!!
!!!!அன்பு அர்ச்சனைகள்!!
இவண்: மண்ட கசாயம்
-
கவலைகளும் சோர்வும் என்னை அண்டும் தருணமதில் நான் நாடும் நாயகனே.. எல்லை இல்லா இனிய தருணங்களை பரிசளித்த இனியவனே..
தனிமையில் தவிக்கும் தனியனை அடைக்கலம் குடுத்து தன்னுள்ளே வைத்து கொள்ளும் மாயவனே..
கடிகார முள்ளின் நுனியில் அமர்ந்திருந்து பயணம் தொடர்ந்து நாளிகைகள் கழிந்து நாட்கள் தடம் புரண்டு இளைப்பாறுகையில் பன்னிரெண்டு வருடங்களாயிற்று என்ற செய்தி காதோரம் தவழ்ந்தோடின...
காலமும் கண்காணிக்கப்படவில்லை ஆனால் பல உறவுகளின் புது வருகையால் பிரம்மிப்பு மட்டும் நிலையானது..
அழகிய அரட்டைகள், அழுப்பில்லாமல் தொடரும் பேச்சுக்கள், சிறு சிறு கிண்டல்கள் என்று அன்பையும் பண்மையும் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டின...
செல்லப் பெயரிட்டு தொடர்ந்த வாதாட்டமும், நீதியென கூறிய நக்கல்களும் அந் நொடியில் ஆறுதலாய் அமைந்திடும்..
தேன் சொட்டும் தேனீக்களின் ஒற்றுமையே ஓர் தேன் கூடென தெகிப்படைய வைத்து விடுகிறது அது போல் தங்கள் உறவுகளும், அன்பெனும் கூட்டுக்கு சொந்தெமன வசைபாடிடுமே...
அசத்தும் அழகிய கவிகள், கருத்தாற்றல் இரசிக்கும் படியான பாடல்கள் அனைத்தும் உற்று நோக்கி களிப்படைய கிடைத்த ஓர் பொக்கிஷம்..
உள்ளூர் அன்றிறாது வெளியூர், வெளிநாடுகள் என தன் வாழ்வை தொடரும் பல உறவுகளும் அண்டிய உறவுகள் என கிடைத்திட்டது..
இத்துனை சுவைகளையும் உள்ளடக்கலாய் தொடர்ந்த பயணம் நிலையாய் இன்னும் தொடர என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்💜💜.
-
எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில்
எங்கோ ஒரு நாள் எதார்த்தமாக கிடைத்த உறவே
மனித வாழ்வில் இன்றியமையா நயமாக விளங்கும் குடும்பத்தை போல
புதிதாக கிடைத்த ஒரு குடும்பமே
இங்கு மட்டுமே முகமறியா குணமறியா மனமறியா
ஏன் மொழி அறியா குரல் அறியா
என உறவுகள் ஆயிரம் கிடைத்தது..
பரிசு பொருளாக கிடைத்ததை
எண்ணிலும் சொல்லிலும்
அளந்திட முடியும்..
பரிசாகவே வந்த
இந்த அரட்டை அரங்கத்தை
என்னவென்று சொல்லி முடிப்பது
நித்தம் ஒரு உறவு
அளவில்லா பேச்சு
சின்னசிறு சண்டைகள்
சிறுசிறு வாக்குவாதங்கள்
இங்கு வந்து குறுகிய நாட்களை ஆன நிலையிலும்
எப்போதும் ஒரு மகிழ்ச்சி பரவசம்
இந்த அரட்டை நிலையத்தில் நுழையும் போது ஏற்படுகின்றது.
அன்பின் ஊற்றுக்கு வயது பன்னிரண்டு .
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
-
FTC - ஓர் பயணம்.
தினமும் காலை முதல் இரவு வரை..
உன் மெல்லிய பாடலிலே மெல்ல..
மெல்ல நகர்ந்தது என் நாட்கள்..
திடீரென ஓர் நாள் உன் பாடலைகளின்
இடைஇடையே.. ஓர் சந்தோச குரல்.
" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
என் இரு கண்கள் சுருங்க..
என் நீள இரு புருவங்களும்..
ஒன்றுடன் ஒன்று இணைய..
இது என்ன? ஒரு பண்பலையில்..
பிறந்த நாள் வாழ்த்துக்களா?
இப்படியும் ஓர் பண்பலையா?..
கேள்விகள் என் மனதில் எழ..
பண்பலை எதுவென தேடினேன்..
FTC FM pink கலரில் அழகாய் சிரித்ததது..
அதை(FM) தொடர எத்தனிக்கையில்
என் கண்ணில் பட்டு மின்னியதோ
ஓர் புதிய உலகம் FTC FOURM
FOURM நுழைவாயிலில் ஓர் அழகி
வாவென வரவேற்று நின்றாள்.
நானும் ஆனந்தமாய் நுழைத்தேன்..
பத்து தலைப்புகளில்.. 58 நுழைவாயில்..
நானும் ஆர்வமுடன்.ஒன்று ஒன்றாக.
நுழைந்து நுழைத்து வெளிவந்தேன்..
எல்லா நுழைவாயிலுக்கு 100 100
சிறு அறைகள்.. எல்லா அறைகளிலும்
நிறைந்து வழிந்தன.. அறிவு பொக்கிஷங்கள்..
பொக்கிஷ கதவை தட்டி.. மெல்ல மெல்ல
ஆண்டுகள் பலவும் கடந்து போயின..
நானும் எல்லாம் படித்து முடித்த பாடில்லை..
அறிவு களஞ்சியத்தை அள்ளி பருகையில்
இன்னோர் பொக்கிஷம் என் கண்ணில் பட..
எனது சின்ன சிறகுகள் விரித்தே அங்கே பறந்தேன்.
அங்கே 1000 1000 இமய மலையென
குவிந்து கிடந்தன.. என்னை முழுதாய்
ஆட்கொள்ளும் இன்னிசை தட்டுகள்.
ஓ இங்கு இருந்து தான் என்னை மெய்மறக்க
செய்யும்.. பாடல்கள் FTC FM க்கு பறந்து..
படையெடுத்து வருகிறதோ.. என நினைக்கையில்
எங்கோ நண்பர்களின் பேச்சு குரல்..
பேச்சு குரல் வரும் திசை நோக்கி மெல்ல நடக்கையில்..
FTC CHAT என பெயரிட்ட ஓர் அரங்கம்..
Wow என்னோ ஓர் கூட்டம்.. என்னோ ஓர் சந்தோசம்..
100க்கும் அதிகமானோர் கூடி நின்று
கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
சரி நானும் கலந்து கொள்ளலாமே என
எண்ணம் எழ மெதுவாக நடந்தேன்..
ஆர்ப்பரிக்கும் அரங்க நோக்கியே.
அங்கே நடத்த அந்த குதூகல நிகழ்ச்சியோ
என்னவென்று நானும் சொல்ல வேண்டுமா?...
நீங்களும் என்னுடைய வாருங்க..
"நமது FTC பனிரெண்டாம் ஆண்டு நிறைவு விழா -
சிறப்பு கவிதை நிகழ்ச்சி".
-
மனதில் ஆயிரம் குழப்பங்களோடு நுழையும் இதயங்களை!!!
Angel வாங்க வாங்க என்று வரவேற்க!!
தாரா தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா ? என்று வானொலி ஒலிக்க!!!
இன்றைய நிகழ்ச்சிகள் என்று பள பளக்கும் செய்தி பலகை மினுமினுக்க!!!
வாங்க வாங்க நல்லாருக்கீங்களா சாப்டிங்களா என்று ஒரு கட்சி
என்ன ஏதுனே தெரியாமல் சிரித்து குலுங்கும் குழுமம் ஒரு ஓரம்
வடிவேலுவை கடத்தி அன்பு தொல்லைகள் அளிப்பவர்கள் ஒரு பக்கம்😅
ஓவியம் உயிராகிறது, இசைத் தென்றல், உங்கள் சாய்ஸ் என பல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வரும் குழுமம்
விருந்தாளிகளை உபசரித்து ஊக்குவிக்கும் VIP gal
இவ்வுங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான ஒழுக்கமான பாதுகாப்பு மிக்க தளமாக " I am watching" என்று உற்று கவனிக்கும் Moderators
என்னடா பிரச்சனை அங்கே என ஆவலாக ஓடும் நாட்டாமையாக Admin
அனைத்து காட்சிகளையும் வேடிக்கை பார்த்து புன்னகைக்கும் Monalisa
ஒளிந்திருக்கும் திறமைகளை ஊக்குவிக்க ஒரு விளையாட்டு மைதானமாய் FTC பொது மன்றம்
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நட்பு வட்டாரம் குறைந்து அர்த்தமில்லாமல் போகும் வேளையில்
இனம் மொழி மதம் வயது தாண்டி ஒரு தோழ் குடுக்கும் நட்பு இருப்பின்
எரிமலையிலும் பனிக்கட்டி மழை பொழிவது போல் உள்ளம் புன்னகையில் குளிரும்!!!
அறிமுகம் இல்லாத நபரை தன் கூட்டுக்குள் சேர்த்துக்கொள்ளும் ஒரு பெரிய ஆலமரமாய்!!
"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" க்கு அடையாளமாய்!!
நட்பிற்கு ஏங்கும் தேடலில் விழுந்த மீன்களின் கூட்டமைப்பாய்!!
நண்பர்களின் திறமையை அங்கீகரிக்கும் ஒரு பிரமாண்ட மேடையான!!
பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற FTC தளமிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
இன்று போல் என்றும் இலக்கணம் இல்லாத அன்பு நிலைத்திருக்கும் நட்பை வளர்த்து வழங்குவதற்கு நன்றிகள்!!!
அப்பறம் என்ன பா!! போலாமா? என்று
லேசான மனதுடன் சிரித்து கொண்டே பல நினைவுகளுடன் இப்பிரமாண்ட மேடையிலிருந்து விடைப்பெறுவது உங்கள் பிரியமான தோழி Hini...🤗
-
நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கமே Wish You Happy Anniversary..!
நண்பர்கள் தினத்தில் பிறந்தவனாம்
எல்லோர் மனதிலும் நன்மதிப்பை பெற்றவனாம்..!
மாற்றங்கள் பல கண்டாலும்
மாறாத கொள்கை உடையவனாம்..!
துன்பங்கள் பல கடந்தாலும்
பளிங்கு தூணாய் நிற்பவனாம்..!
துயரத்தில் யார் வந்தாலும்
துவட்டி விடும் தூயவனாம்..!
இன்பங்கள் பல இருந்தாலும்
அமைதியாய் இருபவனாம்..!
தரணியெங்கும் போற்றினாலும்
தன்னடக்கம் கொண்டவனாம்..!
புரியாமல் பிரிந்து போனாலும்
வாழ்த்தி வழியனுப்பும் நல்லவனாம்..!
போனவர்கள் புரிந்து வந்தாலும்
போற்றி வரவேற்கும் அன்பானவனாம்..!
கலைகள் பல கற்றவனாம்
கலைமாமணி பெற்றிடாத கலைஞ்சனாம் ..!
எட்டி பறித்திடும் புகழையெல்லாம்
தொட்டு பறித்திடும் உயர்ந்தவனாம்..!
எட்டா இடத்தில் இவனிருந்தும்
பிறருக்கு ஏணியாய் இருபவனாம்..!
துரோகங்கள் பல கண்டாலும் அதை
துணிச்சலோடு கடந்தவனாம்..!
தீயவர்கள் தீண்டினால்
தீப்பிழம்பாய் மாறுவானாம்..!
நண்பர்கள் படை சூழ
எப்படையையும் வெல்பவனாம்..!
இதனால்,
நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கம்
என பெயர் கொண்டவனாம்..!
இவன்,
குறும்புகள் பல செய்யும் செல்லப்பிள்ளையாம்
ஈராறு வயது சிறு பிள்ளையாம்
டீனேஜ்க்கு போகும் நல்ல பிள்ளையாம் நம்ம FTC..!
வெற்றிகரமான தனது 12 வருட பாதையை கடந்து 13ம் வருடத்தில் கால் பாதிக்கும் நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்திற்கு, எனது சார்பாகவும் மற்றும் FTC நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறோம்..!
இந்த பயணம் மென்மேலும் தொடர்ந்து இன்னும் பல மைல்கல்களை எட்டி பல சாதனைகளை படைத்து அத்தகைய சாதனைகளையெல்லாம் சரித்திரமாக மாற்றி, வரலாற்றில் தனக்கான நீங்கா இடம் பிடித்து கல்வெட்டுகளிலெல்லாம் FTC யின் பெருமையை பொன்னெழுத்துக்களில் பொறிக்க படவேண்டும் என வாழ்த்துகிறோம்..!