FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on April 11, 2012, 12:39:42 AM
-
குங்குமம் வைப்பதன் நன்மைகள்
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.
ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.
குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்!