FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 02, 2023, 10:43:09 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: Forum on July 02, 2023, 10:43:09 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 314

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F314.jpg&hash=b3d2266adf181e422d296a374cfb8135e293e03c)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: VenMaThI on July 03, 2023, 12:11:25 PM


பத்து மாசம் சுமக்கலையே
பாவி உன்ன பெக்கலையே
பதமா நானும் பார்த்தேனே
பாசமா என்றும் இருக்கறயே

தவமும் இருக்கலையே
தாய்ப்பாலும் ஊட்டலையே
மடியிலே கெடத்தி வளத்தேனே
என் மகளாய் உன்ன நெனச்சேனே..

காது கேளாக் குழந்தையே
கையசைவுக்கு கட்டுப்பட்டாயே
என் குரலைக்கூட கேட்டதில்ல
ஆனா என் காலடி விட்டு போனதில்ல..

மறைஞ்சு நின்னு பாப்பேனே
மாடி விடாம தேடுவியே
நன்றிக்கு இலக்கணமே
நானும் உன்ன பெக்கணுமே..

பெத்தவ யாருன்னு தெரியல
உன்ன நெனவிருக்கானும் தெரியல
காத்துல கூவி சொல்லுறேன்
அவ காதுக்கு எட்டும்னு நெனைக்கிறேன்...

ஆத்தா உம்புள்ள பத்திரமா இருக்கா
அன்பா என்றும் பாத்துக்குறேன்
அவளை பத்தி வெசனம் வேணாம்
அரவணைக்க நான் இருக்கேன்....

நாயின்னு பாத்ததில்ல
நானும் உன்ன வெறுத்ததில்ல
அடுத்த ஜென்மம்னு இருந்துச்சுன்னா
அப்பவும் என்னோட இருக்கனுமே

அம்மாவா சொமக்கணுமே
அன்பாக பாக்கணுமே
தாய்ப்பாலும் ஊட்டணுமே
தாவி உன்ன அணைக்கணுமே.....


Dedicated to my SPARKIE.. பிறந்ததுல இருந்து காது கேக்காது ஆனா நான் சொல்ற எல்லாம் அவளுக்கு புரியும் ... அவ்ளோ அன்பா இருப்பா ... நான் பெத்து எடுக்காத என் மூன்றாம் குழந்தை ... ❤️❤️❤️❤️❤️


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: Nivrutha on July 04, 2023, 11:07:04 AM
😉 இந்த வாரமும் கிறுக்க போறேன் (https://www.friendstamilchat.net/chat/emoticon/A2/zwrite.gif)

நானும் என் நா(ய்)யகனும் 🐶:
 
புரிதலுக்கு மொழி தேவையில்லை_
புரிகிறது
அவனை பார்க்கும் போதெல்லாம்🐶

🐶கோபத்தை கொடுத்தாலும்,
 கொஞ்சலை
பரிசளிக்கும் ஒருவன்

கண்ணீரைக் காட்டும் முன்னே_ என் கவலைகளை கரைத்து விடும் கலையை,கைவசம் கொண்ட காவலன்🐶

எரிச்சலாய் எட்டி விரட்டினாலும், எண்ணிய வேளை எட்டும் தூரத்தில் இருக்கும் இனிய நண்பன்🐶

அன்பை மட்டுமே வேண்டி என்னை அணுக தெரிந்த,ஐந்தறிவு ஜீவன்🐶

ஆறறிவு கிட்டாவிட்டாலும்,என் ஆறுதலுக்கு கிட்டிய குட்டி ராட்சசன்🐶

நேசிக்கப்படுவதும் ஒரு சுகம்_என்று நான் உணர, எனை நித்தம் நேசித்து நான்கு காலில் நிற்கும் நன்றியுள்ள நல்லவன்🐶

சிறிய தீண்டலில் வசப்பட்டு,என்னை விலகாமல் விளையாடும் விசுவாசி 🐶

🐶முகர்ந்து பார்த்தே,
 என் இடம் அறிவான்
🐶முகத்தை பார்த்தே,
 என் மனம் அறிவான்

காமம் வேண்டா காதலன்🐶

உற்றுழி உதவும், உண்மையான தோழன்🐶

மொத்தத்தில என் ஆளுகிட்ட...... மொரைச்சா மோசம்
சிரிச்சா பாசம் 🤗
பழகிட்டா ஜாலி
பகைச்சிட்டா காலி🤭


                                                        இவள்..,....🦋
                                            (https://www.friendstamilchat.net/chat/emoticon/A2/zwrite.gif)உங்களை போல் ஒரு ரசிகை நிவி 🦋
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: ShaLu on July 04, 2023, 11:48:32 AM
என் அழகிய நாய் குட்டியே
என் அன்பான சிநேகிதன் நீ
சூரியனை போல பிரகாசமானது
உன் பழுநிற கண்கள்
பால் போன்று  வெண்மையானது
உன் கள்ளமில்லா மனது

இவ்வுலகில் அதிகம் விரும்புவது
யாதென கேட்பின்
என் செல்ல நாய்க்குட்டி
நீதான் என்பேன்

என்னுடன் நீ இருக்கையில்
குழந்தையாய் மாறி
குதூகலம் அடைகிறது
எனதுள்ளம்
விசுவாசமும் நன்றி உணர்வும்
ஒருங்கே பெற்ற என்னருமை
நான்கு கால் செல்லப் பிராணியே
நன்றி என்றொரு வார்த்தைக்கு
இதுவரை உவமை கண்டிரார் எவரும்
உனை அன்றி வேறொரு ஜீவனை

துன்பமாயினும் இன்பமாயினும்
உடனிருந்து ஆறுதல் தரும்,
நிபந்தனை எதுவும் இல்லா
அன்புதனை அள்ளித் தரும்
என் ஐந்தறிவு ஜீவனே
பாசம் காட்டுவதில் - அன்னை ஆனாய்
பாதுகாக்கும் கேடயமாய்
இருப்பதில் - தந்தை ஆனாய்
தீங்கிளைக்க நினைக்கும்
பகைவர் களிடமிருந்து
காக்கும் காவலாளி ஆனாய்
உற்ற நேரங்களில்
உறுதுணையாய் இருந்து
உயிர் நண்பனும் ஆனாய் !!

கடவுள் எனக்கு கொடுத்த
அற்புதமான வரம் நீ
என் வாழ்வில் நீக்க முடியா
ஓர் அங்கம் நீ

என்னருகில் வந்து
துள்ளி குதித்து நீ செய்யும்
சேட்டைகள் சலிக்காது
எத்தனை முறை பார்ப்பினும்
என்னை நான் நேசிப்பதை விடவும்
அதிகமாய் எனை நேசிக்கும்
அன்பு ஜீவன் நீ
ஆதாயம் எதிர்பார்த்து பழகும்
இம் மானிடர்களுக் கிடையில்
அன்பு ஒன்றை மட்டுமே எதிர்பார்த்து
எனை நீங்காவிருக்கும்
உன்னத ஜீவன் நீ

மனச் சோர்வுடன் அமருகையில்
மடிமீது  வந்தென்னை
அரவணைத்து உற்சாகப்படுத்தி
கோபமாய் இருக்கையில்
நீ செய்யும் கோமாளித் தனத்தால்
எனைக் குதூகலப் படுத்தி
உன் கள்ளங்கபடமற்ற
அன்பினால் கட்டியணைத்து
என் முகத்தில் புன்னகை
வரச் செய்வாய்

உனக்கும் எனக்கும் இருப்பது
ஓர் அசைக்க முடியா பந்தம்
என் வாழ்க்கையை
முழுமை ஆக்கிய
ஒப்பற்ற ஜீவன் நீ
முடிவில்லா மகிழ்ச்சி நீ
உலகில் விலை மதிப்பற்றது
தங்கம் வைரம் முத்து என்பர்
அவற்றை விடவும் விலை
மதிப்பிட முடியாதது
நீ எனக்கு தரும் அன்பும்
அளவில்லா ஆனந்தமும்
மன அமைதியும் !!

இனி ஒரு பிறப்பு உண்டெனில்
உடன் பிறக்க வேண்டிடுவென்
என் உடன் பிறவா சகோதரனே !!!


Dogs - Save them and pet them ❤️❤️




 






Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: Minaaz on July 04, 2023, 12:15:58 PM
புரியாத அன்புக்கு இலக்கணமாய் இதழ் ஓரம் தவழ்ந்த ஒற்றை முத்தத்தால் மண்டியிட்டுக் கொண்டாய் என்னிடம்

தனிமையில் தேற்றும் அளவிற்கு அருகில் யாரும் இல்லை என்பதற்கு முரணாக அமைந்திருந்தது உன் வருகை

காதல் தோல்வியிலும் கண் கலங்கி அகம் உடைந்து நின்ற போதிலும் உற்ற நண்பன் என உதவியாய் அமர்ந்திருந்தது உன் குலத்தவராம் என்ற தேவதாஸின் கதை வரலாற்றில் ஓங்கியிருந்தது உம் பெருமை

காவற்காரனாய் நன்றியுள்ளவனாய் எங்கும் அறிமுகமாகிய உமக்கு என்றும் நிகராய் வேறில்லை

ஒரு வாய் சோற்றுக்காய் நிமிராத உன் வாலை நிறுத்தாது ஆட்டும் அழகினில் மயங்கி நின்றது என் மனது..

மோப்ப சக்தியில் வல்லமை பெற்ற உமக்கு மங்கிடாத மகிமை எங்கும் கொடி கட்டி நிற்கும் அதிசயம்.. அதனால் தான் என்னவோ யாரும் அறியா என் இன்னல்களை கூட உன் கொஞ்சல் மொழி ஊற்றி தேற்றினாய்..

வார்த்தையில்லா மொழிகளால் உணர்த்திய உம் அன்பினில் என்றும் மீளாத நான் உன் நண்பனாய் உன் உடன் நடைபோட்டிட காலம் வழங்கிட்ட ஓர் அரிய வாய்ப்பே எனக் கருதி தொடரும் பாதையில் தொடராக நடை போட்டிட வேண்டுமெடா...!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: SweeTie on July 05, 2023, 05:42:39 AM
[bகணப்பொழுதிலும்   உனை பிரியேன்தேவதையே !
என்றும் உன் காவலனாக நான்   இருப்பேன் 
தெவிட்டாத  உன் அன்பில்   திக்குமுக்காடி
உன் கொஞ்சலிலும்  கெஞ்சலி\\லும்  மிஞ்சியவன்
உனக்கெனவே வாழ்வேன்  பெண்ணே

அனாதரவாகி  ஆற்றுவார்  அற்று  நான் வீதியில் கிடக்க
வழிப்போக்கர்  அனைவருமே   என்னைக்   கடக்க
என் மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக  அடங்கி கொண்டே  இருக்க
தூரத்தே  வானத்தில்   ஒரு தேவதை    வரவு 
அடுத்த கணம்   அய்யோ...... என்ற  ஓலம் கேட்க
என் கண்கள் அவள்மேல் நிலைகுத்தி நிற்க........

கண்விழித்து பார்க்கையில்    கட்டிலில் கிடக்கிறேன்
இது சொர்க்கமா  நரகமா  எதுவும் தெரியவில்லை
தடவிக்  கொடுக்கிறது   ஒரு கை    அது
என் தேவதையின் கை  எனப் புரிந்துகொண்டேன்   
நன்றிசொல்ல  எனக்கு  பேச்சு   வரவில்லையே
கண்கெட்ட கடவுள் என மனிதன் திட்டுவது புரிந்தேன்
அவள் கையை என் நாவினால் வருடுகிறேன்

 எதுக்குடா  இந்த நாய் பொழைப்பு  என்று
நன்றிகெட்டு  திட்டுகின்ற  மானிடருள்
நன்றிக்கே இலக்கணம்  நீ என்று  நான் கூற
இல்லை  நீதான் டாசெல்லக்குட்டி என்று அவள்   கொஞ்ச
நானும் அவளும்    பரிமாறும்  அன்புக்கு
எதுவும் ஈடாகுமா ?


] [/b]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: KS Saravanan on July 06, 2023, 12:58:51 PM
அன்பு நிறைந்த உலகில் என்னுடன் வசிக்கும்
ஐந்தறிவு கொண்ட செல்ல நண்பனே..!
அறிந்தவர்கள் வீட்டுக்கு வருகையில்
உன்னை விட நலம் கொண்டு
வரவேற்பவர்கள் யாருமில்லை..!
உன்னுடன் நான் செல்லும் பாதைகள்
எனக்கு வழிகாட்டியாக பாதுகாப்பையும் தருகின்றன..!
உன்னுடைய விளையாட்டுத்தனமான கோமாளித்தனங்கள்
செயல்கள் என்னை மகிழ்ச்சிகரமாக வைக்கின்றது..!
உன்னுடைய ஒவ்வொரு அசைவும்
உன்னுள் இருக்கும் எண்ணைத்தை
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது..!
ஒரு உண்மையான உற்ற நண்பனை
உன்னுள் நான் உணர்கிறேன்..!
மனிதனான என்னுள் உள்ள துரோகம்
என்ற சொல் அறியாதவன் நீ..!
மாந்தர்கள் மறந்து தவிக்கும் நன்றியை
மறவா மன்னன் நீ..!
ராப்பொழுதை நன் நிம்மதியாக உறங்கிட
நீயே காரணம்..!
என் வீட்டு செல்லப்பிள்ளையே
நீ மிருகம் என்ற பேதமில்லை..!
தொட்டு பழகிட ஆசை கொண்டேன்
மனமெங்கும் உனதன்பின் ஆழம் அறிந்தேன்..!
ஓய்வாக நானிருக்க, ஐந்தறிவு நண்பனே
நீ ஓயாமல் உழைக்கிராய்..!
நீ கற்றுக்கொடுக்கும் பாடத்தை
நான் ஏட்டில் ஏற்றிட கடமை கொண்டவன்..!
வார்த்தைகள் இல்லாமல் உன்னை
உனை மனதில் வைத்து போற்றுவேனடா..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 314
Post by: TiNu on July 06, 2023, 05:18:51 PM


அன்பை அள்ளி அள்ளி கொடுக்கவோ..
அதை திரும்ப மொத்தமாக பெறவோ..
யாரும் யாராகவும் இருக்க தேவையில்லை..
உணர்வுகளை உணரும் உணர்ச்சிகள் போதுமே..

ஓரறிவு மரமும்.. நீரும்.. வளைந்தாடும்..
உன் ஆத்மார்த்தமான... ஓர் பார்வையில்..
ஈரறிவு கிளிஞ்சல்களும்.. தழுவி செல்லும்..
உன் ஆழ்மனதின்.. உதிக்கும் பாசத்தால்..

மூவறிவு எறும்பும்.. பூச்சிகளும்.. பேசுமே ..
உன் அடிமனதில்.. கள்ளமில்லா பாஷையில்.
நான்கறிவு தேளும்.. சிலந்தியும்.. சீறிடும்..
உன் எண்ணத்தில்.. எழும் பகையினால் ..

ஐந்தறிவு மீனும் கோழியும் உறவாடும்..
உன் வெள்ளை மனதின் பாசத்தால்..
ஐந்தறிவு களிறும் ஞாளியும் கைகோர்க்கும்..
உன்  உயர்வான பண்பான பாசத்தால்..

ஆறறிவாம் மனிதர்ளுக்கு... இது.. நிஜமா?
அழகு..  பைரவரின் துடிக்கும் அறிவுக்கும்...
அசுழ(ம்)மின் தூய பாசத்துக்கும். முன்..
ஆறறிவு மயங்கி மண்டியிடும்.. ஐந்தறிவு ஜீவனிடமுமே..   

அன்பை அள்ளி அள்ளி கொடுக்கவோ..
அதை திரும்ப மொத்தமாக பெறவோ..
யாரும் யாராகவும் இருக்க தேவையில்லை..
உணர்வுகளை உணரும் உணர்ச்சிகள் போதுமே..