FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on April 11, 2012, 12:37:39 AM

Title: திருநீறு அணிவது ஏன்?
Post by: Global Angel on April 11, 2012, 12:37:39 AM
திருநீறு அணிவது ஏன்?


மந்திரமாவது நீறு….. வானவர் மேலது நீறு……

சமயச் சின்னங்களில், திருநீறு அணியக் கூடியது என்பது புனித மான ஒன்று. தொன்று தொட்டு வரும் தமிழரின் ஆதிச் சமயமான சிவசக்தியை வழிபடும் சைவ சமயத்தில் திறுநீறு அணிவது மிகப்புனிதமான செயலாகக் கருதப்படுகின்றது. மகிமை யுணர்ந்து பக்தியுடன் அணியப்படும் திருநீறு தீராத வியாதியையும் தீர்க்கும் சக்தி கொண்டதாகும். எத்தனையோ மூலிகைகளாலும் குணப்படுத்த முடியாமல் துன்புற்ற கூன்பாண்டியனின் வெப்பு நோயினை, திருஞான சம்பந்தர் ஒரு பிடி திருநீற்றினால் குணப்படுத்தி னார். இந்தச் சம்பவம் ஒன்றே திருநீற்றின் உன்னதத் தன் மையை விளக்கப் போதுமானது.
 
 
 
தலை குளித்தபின் நெற்றி நிறைய திருநீற்றை அணிந்து கொண்டால் சளி பிடிக்காது என்பது அனுபவப் பூர்வமான உண்மை. தலைவலி ஏற்படும் போது நீரில் குழைத்து திரு நீற்றைப் பூசினால் தலைவலி பறந்துவிடும். “”மன உளைச் சல், மனச் சஞ்சலம், மன அழுத்தம் போன்ற சமயங் களில் கை,கால்களைக் கழுவி விட்டு நெற்றிநிறையத் திருநீறு பூசிக் கொண்டால் வந்த சஞ் சலங்கள் மறைந்து, இனம் புரியாத அமைதியில் மனம் திளைக்கும்” என்பது சித்தர்களின் அருள் வாக்காகும். இவைகளைத் தவிர ஆன்மிகத் துறையில் திருநீறு அணிவதற்கு ஆயிரக்கணக்கான பயன்கள் சொல்லப்பட்டிக்கின்றன.
 
 
 
நம் தமிழகத்திற்கே உரியதான “”சித்தாந்தம்” என்னும் மரபு வகுத்த விதிமுறைகளின்படி திருநீற்றினை அணிந்தால் கோடிபுண்ணியமும், முக்திப் பேறும் கிடைக்கும் என் பது உறுதி.
 
தாலமி என்ற வெளிநாட்டு பயணி கி.பி. 150இல் தமிழகத்திற்கு வந்தபோது அவரால் தமிழகத் தில் திருநீறு அணியாத நெற்றியை பார்க்கவே முடியவில்லை என்று எழுதியுள்ளார். திரு நீற்றின் மகிமையை உணர்ந்து தான் அந்தக் காலத்தில் அனைவரும் தவறா மல் திருநீறு அணிந்துள்ளனர். நம் முன்னோர்கள் அணிந்தபடி திருநீறை முறைப் படி அணிய வேண்டியது அவசியமாகும்.
 
 
 
திருநீறை வடக்குமுகமாகவோ, கிழக்கு முகமா கவோ இருந்து அணிய வேண்டும். திருநீறு பூசும் போது அண்ணாந்து கொண்டு வலது கையின் (சிறுவிரல் பெருவிரல் தவிர) மூன்று விரல்களா லும் அணிய வேண்டும். அவ் வாறு அணியும் போது திரு நீற்றுத் துகள்கள் தோளில் படும். இந்தத் துகள்கள் இயல்பாகவே, நம்மைச் சுற்றி ஆன்மிக அலை களை உருவாக்கிவிடும். இவ் வாறு அணியச் சொல்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. திருநீற்றைக் கீழே சிந்தக் கூடாது என்பதுதான் அந்தக் காரணம் ஆகும். திரு நீறினை கிழே சிந்துவது மகாபாவம். தவறுதலா கக் கிழே சிந்தினால் சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, உடனே அந்த இடத்தைச் சுத்தம் செய்யவேண்டும். ஏனெ னில் திருநீறு சிந்திய இடத் தினை மிதிப்பதைச் “சித் தாந்தங்கள்’ தீராத பாவம் என்கின்றன.