ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 312
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F312.png&hash=5c81acca6d3cf8831bd3fc3e1ae00274f198a554)
எனது முதல் கவிதை
கதிரவன் அடிவானிடம் சரணடையும் பொழுது அது..
அடர் நிறைந்து ஒய்யாரமாய் நிமிர்ந்து நிற்கும் விருட்சங்கள் பரந்த வனம்..
அதில்..,
கதிரவனின் மங்கிய ஒளியில் தன் இருப்பிடத்தை நெருங்கும் பட்ஷிகளின் சப்தம் அங்கே..,
தன் நிழலும் தன்னை அச்சமூட்டி வேடிக்கை பார்க்கும் நிகழ்வும் அரங்கேறும் சந்தர்ப்பம் அங்கே..,
இத்துனை சிறப்புக்கள் பொதிந்த இவ் வனத்தின் அழகை மேலும் மெருகூட்ட தவமிருக்கும் மாது அவள்,
மரணப்படுக்கையிலும் மாதுவின் வாசனையைக் கூட முகர்ந்திடக் கூடாதென வீராப்பாய் நின்ற எண்ணங்களை ஒரு நொடிப் பொழுதில் நொருக்கிவிட்டது உன் கயல் விழி...
கயல் விழிப் பார்வையால் பாலாய்ப்போன பலரது வரலாறுகளை இலக்கியங்களில் பாடி முடித்தனர் பல புலவர்கள் அந்த வரிசையில் நானும் நிற்கிறேன் என எண்ணுகையில் நாணம் எட்டிப் பார்க்குதடி..
மலர் சூடிய உன் குழலழகில் குதித்து நிற்குதடி என் இளமையும்..
நிலாவினது வெள்ளொளியாய் உருவெடுத்து நிற்கும் மாதுவைக் கண்ட விழிகள்,
காதோரம் தவளும் கம்மலாய் மாறிட ஏக்கம் வசைபாடுதடி..
மயில் தோகையாய் விரிந்தாடும் உன் விரல் இடுக்கில் ஓய்வெடுக்கும் புல்லாங்குழலாய் உன் கைகளில் தவழ்ந்தாட உள்ளம் சீண்டுதடி..
உன் அழகில் மயக்கிய மாயவளே, என்னை மட்டுமல்ல உன் மூச்சுக்காற்றினால் உயிர்நின்ற புல்லாங்குழலையும் உயிர்ப்பித்து இவ் வனத்தையும் உன் வசமாக்கியதேனோ...♥️💜