Hi RJ
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்..
Song Title: Veera Raja Veera - Tamil
Album: Ponniyin Selvan Part - 2
Song Composed , Produced and Arranged by Traditional Dagarvani Dhrupad / A.R.Rahman
Lyrics : Ilango Krishnan
Singers : Shankar Mahadevan, KS Chitra, Harini
Additional Vocals : Haricharan, Nakul Abhyankar, Ravi G, Bharat Sundar, Sreekanth Hariharan, Vasudha ravi, Keerthana Vaidyanathan , Niranjana Ramanan, Maalavika Sundar, Srivardhani, Sireesha Bhagavatula
முதல் முதல இந்த பாடலை கேட்கும் போது..எனக்கு ஏதோ ஒரு இந்தியப் பாரம்பரிய இசை போல இருந்ததது.. அதுக்கு அப்புறம் தேடி பார்க்கும் போது கிடைச்சது தான்.. இது..
இது நமது இந்தியப் பாரம்பரிய இசையின் துருபாத் பாணியில் compose பண்ணின பாடல் ஆகும்...இதில் தாள கருவிகளோடு.. தந்தி கருவிகளும் இணைத்து இழைந்து குழைந்து ... இசைப்பாடி என்னை மயக்கி விட்டது..
Veena - Punya Srinivas
Sitar - Asad Khan
Sarangi - Dilshad
நான் சங்கர் மகாதேவனோட.. தீவிர ரசிகை.. அவருடைய குரல் ஒலிக்கும் இந்த பாடலை நான் ரசிக்காமல் இருப்பேனா?...
பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் சும்மா சொல்ல கூடாது.. தமிழ் மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை ரொம்ப அழகாகவே பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்..
ஒரு நாட்டின் அரசனை தலைவனை.. எப்படி வரவேற்கிறார்கள் பாருங்க..
உடைவாள் அரை தாங்க
பருதோள் புவி தாங்க
வளவா எமை ஆள
வருவாய் கலம் ஏற
ஆயிரம் வேழம் போல
போர்க்களம் சேரும் சோழ - அரசனின் வர்ணனை இது..
விறலியர் கானம் பாட
கணிகையர் நடனமாட
பாவையார் குலவை போட
பரிதேர் சகடமாட - இது மக்கள் தலைவனை சந்தோசமாக வரவேற்கும் முறை...
மொத்தத்தில் இந்த பாடலின் கிரீடமே.. தூய தமிழும்.. இந்தியப் பாரம்பரிய இசையின் துருபாத் பாணியில் அமைந்த இசையும் தான் சொல்லணும்..
https://www.youtube.com/watch?v=UxXvOfLMgac (https://www.youtube.com/watch?v=UxXvOfLMgac)
இந்த பாடலை.. யார் யாருக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்குமோ அவங்க எல்லோருக்காகவும் dedicate பண்ணுறேன்..
Thank You,
FTC Team
வணக்கம்,
இசை தென்றலில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவிடுகிறேன். இந்த இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன் . வெளிவந்த ஆண்டு 2000. இந்த திரைப்படம் பிரசாந்த் லைலா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க.. சரண் இயக்கத்தில் திருவேங்கடம் தயாரித்து வெளிவந்த திரைப்படம்.
(https://images-na.ssl-images-amazon.com/images/S/pv-target-images/0c1fdef3bcfbaf98998710fe6db6379174f7ed2fec639d4ad7793c6958df2318._UY500_UX667_RI_TTW_.jpg)
இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... "கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல" என் துவங்கும் பாடல்
நன்றி
அமுல் பேபி