FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on February 05, 2023, 07:44:09 PM

Title: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: Forum on February 05, 2023, 07:44:09 PM
காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்



எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .

உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு  மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த  உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம்.  உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 10.02.2023  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....

என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று  உங்கள் இதயங்களை வந்தடையும் ....



குறிப்பு: சொந்தமாக எழுதப்படும் முதல் 8 கவிதைகள் மட்டுமே  வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: Tee_Jy on February 05, 2023, 09:17:19 PM
நீளும் என் இரவில் நித்தமும் என் நித்திரையை விழுங்குகிறது உன் நினைவு.

என் கண்ணுக்குள் பொழியும் மழைக்கு குடையாய் நீ வர வேண்டும்...!
உன் தொப்புள் கொடி உறவில்லை தாலி கொடியில் உறவாக வர வேண்டும்...!
நரை முதிர்ந்து போன பின்பும் உன் கரம் கோர்த்து நடக்க வேண்டும்...!
 என்ற கனவுகள் எல்லாம் வெறும் கனவாகவே கலைந்தன...

பிரம்மித்து போனேன் எனக்காக மட்டுமே என்று நீ கொடுத்த அத்தனை அன்பையும் இதயத்தில் சுமக்க முடியாமல்....!
துடித்து போகிறேன் உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாமல்...
தவித்து போகிறேன் உன்னை என்னிடம் தக்கவைத்து கொள்ள முடியாமல்...

எத்தனை தூரத்தில் நீ இருக்கின்றாய் என்று எனக்கு தெரியாது....
எத்தனை எத்தனை அருகில் நீ இருந்தாய் என்ற நினைவுகள் மட்டுமே போதும் எனக்கு....!

இன்றும் இனியும் என்றும் உனை காதலிப்பேன்... உனை நினைத்து வாழும் ஒவ்வொரு கணமும் எனக்கு காதலர் தினமே...!

எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும் உன் நினைவுகள் மட்டும் உறங்குவதே இல்லை..
அந்த ஒவ்வொரு இரவும் எனக்கு காதலர் தினம் தான்...!

தொலைதூர பயணங்களின் தனித்த நேரத்தில் உன் நினைவுகள் ஓடி வந்து சக பயணியாக பயணிக்கும் அந்த கணமும் எனக்கு காதலர் தினம் தான்....!

இறந்து போகத்தான் சொல்கிறது நீ தந்த காயங்கள்....ஆனால் வாழ சொல்கிறது உன் நினைவுகள்.....உன்னோடு இல்லையென்றாலும் உன் நினைவுகளோடு வாழ்ந்துக்கொள் என்று...

அடுத்த ஜென்மத்திலாவது உன்னோடு பிறக்க ஆசை படுகிறேன். நிஜமாக நீயும் நிழலாக நானும் கடைசி வரை உன்னுடனே பயணிக்க....!

நிஜம் இல்ல வாழ்விற்கு ஆசைகள் ஆயிரம். நிலையில்லா உறவுக்கு நினைவுகள் மட்டுமே நிரந்தரம்......!

என்றும் நீங்க நினைவுகளுடன்.....

Ftc நண்பர்கள் அனைவர்க்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள்... 🥰
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: Madhurangi on February 06, 2023, 03:14:09 PM
பண்டிகைகளுக்கு காத்திருக்கும் மழலையின் மனநிலையோடு
நம் சந்திப்புகளுக்கு காத்திருக்கும் நான்..

நீ மறக்கும் காலை வணக்க குறுஞ்செய்திகளுக்காக
மணிக்கணக்கில் சண்டை போடும் நான்..

துளை கொண்ட பாத்திரத்தின் நீர் போல உன் மேல் நிமிடங்களில்
தொலையும்  கோவம் கொள்ளும் நான்..

காதல் எனும் பெயரில் என் சுயத்தை உன்னுள்
தொலைத்துக்கொண்டிருக்கும் நான்..

கரம் பிடிக்கும் நாளில் உன் அழுத்தத்தின் ஆதிக்கங்களுக்காக
தவமிருக்கும் நான்..

வலி தந்த நீயே அதை ஆற்ற வேண்டுமென
பிடிவாதம் பிடிக்கும் நான்..

உன் ஒற்றை புன்னகை தரும் இனிமையில்
பனியாய் உருகும் நான்..

தொலை தூர பயணங்களின் இடைவெளிகளை இடைவிடாத
தொலைபேசி உரையாடலில் நிரப்பி கொண்டிருக்கும் நான்..

ஆம் நீ சொல்வது போல் முரண்பாடுகளின் மூட்டை தான் நான்..

அனலும் புனலும் அணையாமல் அணைக்கும்
விந்தை காதலில் மாத்திரமே சாஸ்வதம்..
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: KS Saravanan on February 07, 2023, 11:33:19 AM

இப்பிறவி(பிரிவு) ஓன்றே போதுமே..!

மனசுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே..
கண்ணுக்குள்ள இருந்தவளை
கண்ணிமைக்காம தேடுறேனே
கூடவே வந்தவள
விட்டுபுட்டு அலையிறேனே
எட்டுத்திக்கும் தேடினேனே
எங்கயும் காணலையே..!

நிக்கும் இடமெல்லாம் அவ
நெனப்பா இருக்குதே
நடக்கும் போதெல்லாம்
நினைவெல்லாம் தொடருதே
நித்தமும் அவ நெனப்பு
நெருப்பா எரியுதே 
உறங்கும் போதெல்லாம் அவ
உருவம் தோன்றுதே
வழியேதும் தெரியாமல்
குருடனா இருக்கிறேனே..!

பார்த்தவங்க சொல்லுங்க
சாகும் நாளு தூரமில்லை
பால் சோறும் இறங்கவில்ல 
படுத்தா தூக்கமில்ல 
நேரமும் ஓடவில்ல 
சேர்த்தனைக்க யாருமில்லை
பூவின் தேவையுமில்ல
தாழம்பூவும் மணக்கவில்லை..! 

மனசுக்குள்ள இருக்கவளா
தூக்கிப்போட முடியலயே
மண்குடம் ஓடைக்கும் வரை
மனசுலயே நிப்பாளே
மரணித்து போனால் தான்
மனச விட்டு போவாளா
மதிகெட்டு நானிருக்க
மண்ணுலகம் போவேனே..!
 
கூடவே வருவேன்னு
வாய்மொழி சொன்னாளே
அழைத்துப்போக நானிருக்க
அவள் எங்கே போனாளே
போகாமல் நானிருக்க
தடுக்கத்தான் போனாளோ
பிடிக்காமல் போயிருந்தால்
இப்பிறவி ஓன்றே போதுமே..!
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: VenMaThI on February 07, 2023, 07:26:21 PM

காதலுக்கு என்ன தேவை
கேட்டதோ என் நண்பன்

என் விடை
அழகும் வேண்டாம்
ஆடம்பரமும் வேண்டாம்
அன்பு மட்டும் போதுமே

பட்டங்கள் வேண்டாம்
பாராளும் பதவி வேண்டாம்
இதழின் புன்னகை மட்டும் போதுமே

மதமும் ஜாதியும் தேவை இல்லை
என்னை புரியும் மனமிருந்தால் போதும்
மரணம் வரை மகிழ்ச்சியாய்
மணம் கொண்டு வாழ்வோம்

அவன் கேட்டான்
இதெல்லாம் கொண்டவள்
ஒரு கைம்பெண் என்றால்??


கிறுக்கனே
கைம்பெண் என்னடா கைம்பெண்
குருடாய் செவிடாய்
முடமாக கூட இருக்கட்டும்
மனதில் உண்மை காதல் இருப்பின்
கை கோர்த்து காலமெல்லாம்
கடைசி மூச்சு உள்ளவரை
கண்கலங்காமல் காப்பேன் நான்

காதலுக்கு கண்ணில்லை என்றனர்
கண்ணை விட கண்ணியம் தேவை
கொண்ட காதல் உண்மை என்றிருப்பின்
உன்னை நான் அறிவேன் என்பதும்
உனக்காய் நான் இருக்கிறேன் என்பதும்
காதலரின் மந்திரமாய் இருக்கும் வரை
எந்த தந்திரமும் காதலை வெல்லாது.....❤❤


Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: IniYa on February 08, 2023, 03:36:15 PM
என் காதல்
மூன்று காலத்திலும் நம்ம வாழ்க்கை
பயணத்தில்
இடம் பிடிக்கும் காதலே! பசி தூக்கம் இன்பம் துன்பம் என்று
தொலைத்து நிற்க்கும் போதும் காதல் தான் சிறந்த மருந்து!!

பள்ளி பருவத்தில் , பார்த்தும் பதியும்
முகம் அனைத்தும் நமக்கு காதலே!
ஏன் என்னிடம் வருகிறாய் காதலே!
உன்னை பற்றுவதற்கு எனக்கு வயதியில்லை காதலே!!
உன் அழகிலும் வசியத்திலும் மயங்குகிறேன் காதலே!
உன் வெப்பத்தை தாங்க மனமில்லை காதலே!!

கல்லூரி பருவத்தில் ,  வயதுக்கு வந்த காதலே!!
ஏக்கமும் , தாக்கமும், மனதை தொலைந்து போக வைக்கும் காதலே!!
நானத்துடன் உன்னை நெருங்கும் போது என் வயதை மறக்கும் காதலே!!
பெற்றோர், படிப்பு, வேலை மூன்றையும் நினைவுக்கு கொண்டு வரமால்
இருக்கும் காதலே!!

வேலை பருவத்தில்,  பக்குவபடும் வயதில் வரும் காதலே!!
ஒருத்தி ஒருவனை நினைப்பில வைத்து ஏங்கும் காதலே!!
எல்லை மீறலாம் , வாழ்க்கை நம்ம கையில் என்று தைரியம்
கொடுக்கும் காதலே!!
ஊடல் கூடல் மயக்கம் கோபம் தாகம் , நீ இல்லாத இடம் ஒன்று உண்டோ
காதலே!
காதலுக்கு மரியதை , கல்யாணத்தில் சந்தோஷம் என்று
பேர் போகும் காதலே!!


என்றும் எப்போதும் எங்கேயும் ஒன்றாக நம்ம மனதில் இருந்து
ஆனந்தம் அழுகை அரவணைப்பு தந்து ஒன்றுடன் வாழ்வின்
முடிவு வரை துணையோடு துணையாக கைகோர்த்து முதிர்ந்த
நடை போட்டு வியப்புடன் நிமிர்ந்து பார்த்து , நம்ம வாழ்க்கையில்
ஓர் துணை  (இவன்) காதலே !! காதல்!!!

என்றும் இனியா😍


Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: அனோத் on February 08, 2023, 05:35:22 PM

(https://i.postimg.cc/qMnK1Rpm/Untitled-design-1.gif) (https://postimages.org/)
(https://i.postimg.cc/SR9n1TbX/Untitled-design-2.gif) (https://postimages.org/)
(https://i.postimg.cc/8P8JfSLL/Untitled-design-3.gif) (https://postimages.org/)

RJக்கான குறிப்பு :

இந்த கவிதை நான் camera 
மீது கொண்ட காதலின்
வெளிப்பாடாக எழுதியுள்ளேன்...

ஓர் பெண்ணின் உடலை காதலன்
வர்ணித்து காதல் செய்வதைப் போல

என் காமெராவின் உடலமைப்பையும்
அதன் மேல் எனக்கெழுந்த
காதலையும் பெண்ணோடு ஒப்பிட்டு
எழுதியுள்ளேன்
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: AgNi on February 09, 2023, 12:47:53 AM
நிலம் என்று பார்த்தால் ....
நீ வெகுதூரத்தில் இருக்கிறாய் !
நிறம் என்று பார்த்தால் ....
கருப்பு வெள்ளையாய் நிற்கிறாய்!
கடல் என்று பார்த்தால்....
எனை என்னை சுழற்றி
அடிக்கும் சூறாவளி ஆகிறாய் ...
என்னை உடலாய் பார்த்தாய் ....
என் ஆவியை உருவி எடுக்கிறாய்....

எல்லைகள் அற்ற பிரபஞ்ச வழியில்....
காதலில் அணுக்கத்தில்...
ஆறாத காயங்களின் வடுக்களோடு நான் ...
காலை யை ஒத்திருக்கும் உன் மென் சிரிப்
கதகதப்பான காயங்கள் ஆற்றும் அரவணைப்பாய் நீ.....
என்னை வழி அனுப்பி வைத்த நீ .....
திரும்பி வாரா இடத்திற்குச் சென்றதென்ன..... நம்பிக்கையின் மொழிகள் .....
நாணயமற்று சிதறி கிடக்கின்றன ...
நீ வருவாய் என நான் காத்திருந்தேன் .....
நீ போவாய் என எவரும் இங்கு சொல்லவில்லை....

காதல் என்ற வார்த்தையின் அர்த்தங்கள் ....
எந்த அகராதியில் புரட்டினாலும் ...
ஞ்சுவது என்னவோ வெருமைதான் .....
அர்த்தங்கள் இல்லா வாழ்வை ....
அர்ப்பணிப்பாக வாழ்ந்து என்ன பயன்....
ஊரும் உறவும் சொல்ல மொழியே
உன் பேரும் சீரும் இங்கு சொல்லிக் கொண்டு உள்ளது

சீக்கிரமாய் திரும்பி விடுவாய்
என்று ஜன்னலோர கைதியாய் நான்...
ஒரு கூறிய பனிப்பாறை போல்
என் அறையில் உறைந்து கிடக்கிறது தனிமை.....

அறியா காதல் அறிந்த காதல்
தெரிந்த காதல் தெரியா காதல்
உணர்ந்த காதல் உணரா காதல்
புலர்ந்த காதல் புலரா காதல்
மலரா காதல் மலர்ந்த காதல்
வாடா காதல் வாட்டம் இல்லா காதல்
சொல்லிய காதல் சொல்லாத காதல்....
எத்தனையோ காதல் இருந்தென்ன மாயம் ?

சொல்லியும் ஏற்றுக் கொள்ளா காதல்
ஏற்றுக் கொண்டும் சொல்லாத காதல்
எல்லா காதலும் இந்த பூமியில் மட்டும் தான்..... பிரபஞ்சம் வகுத்த காதல் இலக்கணம்
கோடான கோடி ........     
அதில் நம் காதலும் .....
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: Anusha on February 09, 2023, 08:09:44 AM
உன்னை காணும் அந்த
சில நொடிகளுக்காக
பலமணி நேரம் காத்திருக்கும்
அந்த நேரத்திட்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்..

இன்னும் எத்தனை பிறவி
எடுத்தாலும் உனையே
காதலிக்க தேடி வருவேன்

இதயம் துடிப்பது சாதாரண
விடயமாக இருக்கலாம்..
ஆனால் என் இதயம் துடிப்பது
 உனக்காக மட்டுமே..

நீ அழகாக இருப்பதால்
உன்னை விரும்புகிறேன்
என்பதல்ல காதல்
நீ எப்படி இருந்தாலும்
உன்னை மட்டுமே விரும்புவேன்
என்பதே உண்மையான காதல்

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஒரு பிறவி என்று
இருந்தால் அதிலும் நீதான்
என் காதலாக வேண்டும்
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: தமிழினி on February 09, 2023, 05:16:43 PM
இதோ எனது சமீபத்திய பரிசாக அவன் பெற்ற தலைக்கவசமும் என் காதல் வரிகளும்
உங்கள் பார்வைக்காக... 🤩🙈.....!!!


  காதலர் தினத்திற்கு பரிசளிப்பதால் மட்டுமே.. நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தமில்லை.. அந்நாளில் மட்டுமே நினைவு கூற நீ நினைவு சின்னம் அல்ல..
நித்தம் நான் சுவாசித்திடும் என் உயிர் மூச்சடா நீ..

சண்டைகள் ஆயிரம் வருமெனில் என் சாஸ்டாங்க சமாதான தூதுகள் ஓர் ஆயிரம் வரும்..

இதோ இந்த தலைக்கவசம் கூட ஓர் வெளிப்பாடு தான்.. உன்னை அன்பு கொலை செய்ய வேண்டும் என்று எண்ணி .. உன் உடல் உயிர் என்று அனைத்தையும் பாதுகாக்க முற்படுகிறேன் என்னால் முடிந்த வரை ..

நாணம் தவிர்த்து கூறுகிறேன் என் உடல் உயிர் உனக்கு மட்டுமே உரித்து மற்றும் அதை என் ஆயுள் மீறி ஜென்மங்கள் கடந்து உனக்கே கொடுக்க அந்த கடவுளுக்கே கட்டளை இடுவென் ..

இதோ..

இவனே என் கள்வன்..!!
இவனே என் கண்ணாளன்..!!
இவனே என் கணவன்..!!

இனிய காதலர்கள் தின வாழ்த்துக்கள்..என் உயிர் காதலனே .. 😘🙈

               
  பிரியமுடன் .. பிரியா 🙈♥️
[/color]

   
Title: Re: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2023)
Post by: MoGiNi on February 10, 2023, 02:50:21 AM
எண்ணக் குதிரைகள்
எப்பொழுதுமே வலுவானவை
உறக்கத்திலும்
உன் நினைவு சுமந்து
கடுகதியில்
உன் கரம் பிடித்துவிடுகிறது
கற்பனையில்...

யாருமற்ற இரவுகளில்
நீ நான்
அந்த இரவுப் பறவைகள் என
குறிகி இருக்கிறது காலம்..
இருளோடு கருமை என
மனதோடு
ஒட்டிக் கி(ழர்)டக்-கிறது மனது...

 இப்பொழுதெல்லாம்
உன் மௌனமொழிகளுக்கு
பழக்கப் படுத்திக்கொண்ட மனது,
எண்ணச் சிறகுகளிடமே
தஞ்சம் கிடக்கிறது..

அதில் உன் மௌனங்களுக்கு
ஓராயிரம் அர்த்தங்கள்
கண்டு உயிர் வாழ்கிறது

கடல் சுமந்த அலையென
உன் நினைவகளில்
அலைப்புறும் மனதுக்கு
இந்த காற்று சுமக்கும் உன் வாசனை
ஒர் ஆத்ம ஆலாபனை..

ஓர் மழை நாள்
எப்படி உன்னை
என்னுள் வார்க்கத் தவறுவதில்லேயோ
அதைப்போல்
இந்த காதல் தினமும்
உன்னிடம் என்னை
சேர்க்கத் தவறுவதில்லை
எண்ணங்களில்.

உன்னை
சேராத காதல்
இன்னும்
தீராத காதலாகவே
வாழ்கிறது...
வா வழக்கம் போல்
இந்நாளையும்
கனவுகளில் வாழ்நதிடலாம்...

எண்ணக் குதிரைகள்
எப்பொழுதுமே வலுவானவை..
உறக்கத்திலும்
உன் நினைவு சுமந்து
கடுகதியில்
உன் கரம் பிடித்துவிடுகிறது
கற்பனையில்...