FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VenMaThI on February 01, 2023, 05:34:21 PM

Title: ❤️❤️காதல்❤️❤️
Post by: VenMaThI on February 01, 2023, 05:34:21 PM

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
கண்டதும் காதல் களமிறங்கியது..

வண்ணத்துபூச்சிகள் வயிற்றில் வட்டமிட
கனிரென்ற மணியோசை எங்கோ ஒலிக்க
என் மனதிலும் மெதுவாய் சஞ்சலம் தோன்ற
மறுமுறை அவனை மயக்கமாய் பார்த்தேன்...

அவன் என்னை நோக்க
நானோ அவனை நோக்க
நேரமோ இரவை நோக்க
நெற்றில்லை இன்றுமில்லை
என்றுதான் பேசுவோம்
என்ற மனதின் ரணத்துடன்
சென்றது காலம் சில

இன்றாகிலும் பேசுவேன்
நான் உன்னவள் என கூறுவேன்
என்ற சபதம் எடுத்து
அவனை கண்ட இடம் நோக்கி நகர்ந்தேன்
அன்றுபோல் இன்றும்
வண்ணத்துபூச்சிகள் வயிற்றில் வட்டமிட
கனிரென்ற மணியோசை எங்கோ ஒலிக்க
என் கண்கள் கடல் போல்
அங்குமிங்கும் அலைபாய்ந்தது

கண்டேன் அவனை
என் கண்ணாளனை
கண்களின் காதல் மொழி
மனது அறியும் என்பதை தெரிந்துகொண்டேன்...
சாலையை கடந்து
வரவா என்று அவன் கேட்க
வருகிறேன் என்று நான் கூற
காதல் பொறுமையை வென்றது
கட்டித்தழுவி காதல் கொண்டு
கரம் பிடிக்க நினைத்தோம்

எமனின் வாகனம் எருமை என்றிருந்தேன்
என்று அது காராக மாறியதோ..
அடித்து நொறுக்கியது எங்களை மட்டுமல்ல
எங்கள் காதலையும் தான்..

ஆண்டுகள் பல ஆயிற்று
எமனின் வருகைக்காய்
இன்றும் காத்திருக்கிறேன்

என்னவனின் கதி என்னென்று அறிய
நலமுடன் இருந்தால்
அவனுக்கு அரணாய் இருப்பேன்
இல்லையேல்
அவன் ஆன்மாவை தேடி
காலமெல்லாம் அலைவேன்..


பலரின்  கேள்வி
எங்களைப்போல் கால் இல்லையே உனக்கு
என் பதிலோ
கடலை விட பெரிய காதல் உள்ளது என்னிடம் .....