FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KS Saravanan on January 03, 2023, 08:54:59 PM

Title: காலச்சக்கரமே..!
Post by: KS Saravanan on January 03, 2023, 08:54:59 PM


காலச்சக்கரமே..!

உன்னைப்போல் ஒரு அதிர்ஷ்டசாலியும் இல்லை
உன்னைப்போல் ஒரு துர்பாக்யசாலியும் இல்லை

நொடிப்பொழுதில் புதியதாய் பிறக்கிறாய்
நொடிப்பொழுதில் மடிந்தும் போகிறாய்
அரியதொரு கலையை எங்கு காற்றாய்..?

மாற்றம் ஒன்றே இவ்வுலகில் மாறாதது
காலனே அந்த மாற்றத்தின் மர்மம் என்னவோ?

விடை தெரியா வினாவாக இன்றும் என்றும்..
உனது பிறவியின் காலத்தை தேடி..!
இதில்,
காலம் பதில் சொல்லும் எனும் கூற்றும்
பொய்யாய் போனது..!

மன்னுயிர் அறியாத பல யுகங்களை கண்ட காலனே
மானிடர்கள் வேண்டும் வரமாக நீ இருக்கின்றாய்..!
Title: Re: காலச்சக்கரமே..!
Post by: Tejasvi on January 04, 2023, 12:05:51 PM

Nalla irukuthu kavithai. OU pic ku eluthineengala... clap clap... unga point of view nalla irukuthu...

cheer....