FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 10, 2012, 08:29:41 PM

Title: சிறு யோசனை !
Post by: aasaiajiith on April 10, 2012, 08:29:41 PM
இருக்கையில், உட்கார்ந்து கொண்டிருக்கையில்
உன்னைத்தான்  உள்ளூர யோசித்தேன்  உள்ளத்தில் .
உன்னை பற்றிய யோசிப்பின் யாசிப்பாய்
உன்னதமான  யோசனை ஒன்று பொறிதட்டியது.
அறைமுழுதும் மணமணமாய் மணம்  கமழ்ந்தது
யோசனையின் நல் வாசனையால் ...
நீ சுவாசிக்கும்  பொழுது, உன் நாசியில்
இருந்து வெளிப்படும் சுவாசம் .
அச்சுவாசத்தை மட்டும்  தனியாய்  பிரித்தெடுத்து
ஓசோன் மணடலத்தில் லேசாய் உலவ விட்டால்
நாசக்கார வேலை செய்யும் ,வாயுக்களான
கார்பன் தெட்ராகுளோரைட்,குளோரோ புளோரோ காபன்,
ஐதரோ குளோரோ புளோரோ கார்பன்  மெதில் புரோமைட்
கூட, உன் சுவாசத்தின் வாசத்தில் ஈர்க்கப்பட்டு
தன் நாசத்தை இழந்து ,உன் வாசத்தின்
நேசத்தில் இணைந்து ,இரண்டற கலந்து
என் தேசத்தை  (குறைந்தது) காப்பாற்றும் .

அடடே !
உன் சுவாசத்தின் ,வாசத்தின், நேசத்தால்
பாசமாய், என்னிடம் இருந்தும் சமுதாய நேச கவிதை !!
Title: Re: சிறு யோசனை !
Post by: ஸ்ருதி on April 10, 2012, 08:57:55 PM
நல்ல கவிதை ..
Title: Re: சிறு யோசனை !
Post by: Global Angel on April 10, 2012, 11:07:43 PM
nice one  :)
Title: Re: சிறு யோசனை !
Post by: Dharshini on April 10, 2012, 11:43:58 PM
உன்னைத்தான்  உள்ளூர யோசித்தேன்  உள்ளத்தில் .
உன்னை பற்றிய யோசிப்பின் யாசிப்பாய்(nala varigal kavignare intha yasipil kuda ethanai aanantham


உன் சுவாசத்தின் ,வாசத்தின், நேசத்தால்
பாசமாய், என்னிடம் இருந்தும் சமுதாய நேச கவிதை !!(arumaiyana varigal swasathal matum samuga nesa kavithai endral arugil irunthu vitalo nattai kaaka porkodi uyraithi viduvome nala karpanai

Title: Re: சிறு யோசனை !
Post by: supernatural on April 13, 2012, 02:01:04 PM
உன் சுவாசத்தின் வாசத்தில் ஈர்க்கப்பட்டு
தன் நாசத்தை இழந்து ,உன் வாசத்தின்
நேசத்தில் இணைந்து ,இரண்டற கலந்து
என் தேசத்தை  (குறைந்தது) காப்பாற்றும்

swasathaal kooda naasathai izakka seiya mudiyumo???
swasaththai nesikum ungal swasa kavithai nandru....