FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 31, 2022, 11:09:20 AM
-
நீ தொலைவில் வரும் போது
ரத்தத்தில் புத்துணர்ச்சி
பூவாய் பூக்குமே......
அதையா
உன் நெற்றில்
ஒட்டியிருந்த பொட்டை
என் வீட்டுக் கண்ணாடியில்
ஒட்டி வைத்து ரசிப்பேனே........
அதையா
நீ எழுதி அனுப்பிய கடிதத்தில்
உன் உதடு தடவிய பசையை
என் விரல்கள்
தேடிப்பார்த்து தடைவிப் பார்க்குமே ......
அதையா
உன் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம்
என் உதட்டில்
தேன் ஊறுமே ........
அதையா
என் அருகில் அமர்ந்து
உன் தேகம் உரசியதும்
முயல் குட்டியின் மென்மையும்
மயில் தோகையின் தன்மையும்
என் தேகம் உணறுமே.....
அதையா
நீ சாலையில்
நடந்து செல்லும் போது
அமாவாசை இரவு கூட
பவுர்ணமியாய் பிரகாசிக்குமே....
அதையா
எதை சொல்வது
அழகான ராட்சசியின்
வானவில் நிமிடங்கள் என்று......