FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதைகள்  => Topic started by: thamilan on August 24, 2022, 10:19:24 AM
		
			
			- 
				என்னை பத்து மதங்கள் 
கருவறையில் சுமந்து 
என் தாய் என்றால் 
என்னையும் என் தாயையும்
நெஞ்சில் சுமப்பது என் அப்பா 
தந்தையின் தாய்மையை 
மகள்களால் மட்டுமே உணர முடியும் 
தெய்வங்கள் எல்லாம் 
தோற்றுப் போகும் 
தந்தையின் அன்பின் முன்னாலே 
மகளின் கள்ளமில்லா
சிரிப்புக்குள்ளும் கொஞ்சலுக்குள்ளும் 
அடங்கிப் போகும் 
தந்தையின் கோபமும் கர்வமும் 
மகள்களை பெற்ற
தந்தைகளுக்கு தான் தெரியும் 
கடைசி காலத்தில் 
தன் மகள் தான் 
தனக்கு தாய் என்பது