FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on July 27, 2011, 10:36:02 PM
-
மலர்கள் அழகுதான் ஆனால் உன்னைவிட இல்லை..
பறவையின் குரல் இனிமை தான்,
ஆனால் உன் குரலை விட இல்லை...
நிலவின் ஒளி குளிர்ச்சி தான்...
ஆனால் உன் ஸ்பரிசத்தை விட இல்லை...
கார்மேகம் கருமை தான் ,
ஆனால் உன் கூந்தலை விட இல்லை...
பெண்ணே! ஏன் நீ மௌனமாக இருக்கிறாய்,
உன் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளவா....
என் உயிர் மூச்சில் நீ கலந்திருக்கிறாய்,
ஆனால் உன் மூச்சின் வெப்பத்தை விட அல்ல....
நான் இல்லாமல் நீ இல்லை,
ஆனால் நீ இல்லாமல் நானும் இல்லையடி...
என்னை உன் கண்களில் வைத்து கொள்ளாதே,
உன் இதயத்தில் வைத்துகொள்...
ஏன் என்றால் உன் ஒவ்வொரு இதய துடிப்பும்..
நான் உனக்காக இருக்கிறேன் என்று நினைவு படுத்தும்..
-
என்னை உன் கண்களில் வைத்து கொள்ளாதே,
உன் இதயத்தில் வைத்துகொள்...
ஏன் என்றால் உன் ஒவ்வொரு இதய துடிப்பும்..
நான் உனக்காக இருக்கிறேன் என்று நினைவு படுத்தும்..
aalamana karuthu konda varikal ivai.... nice kavithai anbay(F)