FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on June 28, 2021, 10:03:03 PM

Title: தொடுவானம் தொட்டிட தொடர் பயணம்..!
Post by: suthar on June 28, 2021, 10:03:03 PM

(https://i.postimg.cc/yk6vXVkT/IMG-20210628-WA0009.jpg) (https://postimg.cc/yk6vXVkT)

தொடுவானம் தொட்டுவிடும்
 தொலைவில்லை என்பதறிந்தும்
தொலைவில் இருக்கும்
தொடுவானம் நோக்கிய பயணங்கள்
தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன
தொடரிகள்  பல தொடர்வண்டி தடத்தில்
தொடர்ந்து வந்தாலும் எனக்கான
தொடரி எதுவெனும் குழப்பத்தில்  இனைசேரா
தொடர்வண்டி தடமாய் நான்...

தொடரிகள் பயணத்திற்க்கேற்ப
 தடமாறும்
தொடரிகள் தடமாறி பயனித்தாலும்
தொடர்ந்து பயணித்து
தொடவேண்டிய இடத்தை
தொட்டுவிடும் ஆனால் -என்னை
தொடரும் தொடரி
தடம் மாறி நானும்
தடுமாறி விடுவோமென்றே
தடுமாற்றத்தில் குழப்பங்கள் நீள்கிறது....

தடங்கல் இல்லா  பயணம் செய்ய
தடங்களில் தடங்கல்  வந்தாலும்
தடுமாறி விடக்கூடாது என்பதற்காகவே
தடத்தில் பாலங்கள் அமைப்பது போல்
எனக்கான தடத்தில்
எதுவும் தடங்கல் வந்தால்
எப்படி பாலம் அமைப்பது
என்பது புரிந்தபாடில்லை
எங்கு பயணப்பட வேண்டும்,
எப்படி பயணப்பட வேண்டும்,
எதுவும் புலப்படவில்லை எனினும்
எனக்கான தொட(ரி)ர்பயணம் பற்றியே
என்னுள் எண்ணிக்கை இல்லா
எண்ணக் குவியல்கள்..?

தொடர்வண்டி தடங்கள் இரண்டும்
கடைசிவரை இனைசேராமல் இருந்தும்
தொடரியை பாதுகாப்பாக சேர்ப்பதுபோல்
தொடர்வண்டி தடம்போல்  உன்னை
தொடர்ந்து இனையாக பயணித்து
தொடுவாணம் தொட்டிட
முடிவுறா எண்ணிக்கையில்  எண்ணங்கள்
தொடர்ந்து நீள்கின்றன .....!!


புதுமைக்கவி
சுந்தரசுதர்சன்