FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: DuskY on June 24, 2021, 08:53:27 AM

Title: நீங்கா நினைவுகள்
Post by: DuskY on June 24, 2021, 08:53:27 AM
பிரிவு என்றும் கொடியதே !
நாம் முதல் முறை சந்தித்த கல்லூரியைக் கடக்கும் போது
நினைவலைகள் ஏதோ சொல்ல வரும்போது...

பிரிவு என்றும் வலியுடையது!
முதல் பரிசு தரும் வேலையில் உன் கண்களில்
என் முதல் காதல் நீ என உணரும்போது...

பிரிவு என்றும் இனிமையானது!
உன்னுடன் பயணித்த நிமிடங்கள் சுகமான உணர்வுகள்
மற்றும் கனவுகளை உருவாக்கியபோது...

பிரிவு என்றென்றும் என் நினைவுசசின்னங்கள்!
உன் ரசனைகளை எல்லாம் என்னுடன் காதலோடு
உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளும்போது....

நீ என்னுடன் பயணிக்க முடியாமல் போனாலும்
இன்றும் என்னுள் இருக்கும் நம் நினைவுகளுடன்
நித்தம் பயணிக்கிறேன்.

உன் பெயரை யாரேனும் அழைத்தால்...
உனக்குப்பிடித்த பாடல்களை கேட்டால். ..
உன்னுடன் சென்ற இடங்களைக் கடந்தால்...
என் கைப்பேசி அழைப்பு மணி அடித்தால் கூட
ஒரு கணம் நீயாக இருக்க மனம் துடிக்கிறது. ..
     
       
                                                                   இப்படிக்கு உன் நினைவுகளில் மட்டும்
                                                                                         வாழும் நான்
                                                                                               By Arasi