FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: DuskY on June 22, 2021, 08:08:23 PM

Title: கனவு காதலன்
Post by: DuskY on June 22, 2021, 08:08:23 PM
கனவுகளில் என் கற்பனை காதலனே! 
என்றும் உன்னை எதிர்பார்க்கிறேன். ...
என் நிழலாக! என் நினைவாக! என் உறவாக!
என் உயிராக ! என் உணர்வாக! என் கனவாக!
என்னுயிர் சேரும் நாள் எது ?
என ஒவ்வொரு   நிமிடமாக !
நாழிகையாக! நாட்களாக!
யுகங்களாக எதிர்பார்த்திருக்கிறேன்.

உன் தோள்  சேர எனது பல வருட கசப்பான துன்பங்களும்
ஏக்கங்களும் ! நிறைவேறாத கனவுகளும்
தினம் தினம் பயணிக்கிறன !
 நித்தம் சந்திக்கும் சில உறவு நீ என நினைத்ததும் உண்டு!
பின் அவர் தந்த வலிகள் நீ இல்லை என உணர்த்தியதும் உண்டு !
இத்தகைய நிர்பந்தத்திற்கு என்னை ஆளாக்காமல்
 நீ விரைவில் என்னிடம் வர பிரபஞ்சத்திடம் அணு தினமும் வேண்டுகிறேன்! 


                             இப்படிக்கு உன்னில் என்றும் இருக்கும்
                                              பெண்மை நான்
                                                       By  Arasi
Title: Re: கனவு காதலன்
Post by: Cholan on June 22, 2021, 08:49:35 PM
Nice kavithai
Title: Re: கனவு காதலன்
Post by: Evil on June 22, 2021, 09:16:52 PM
super kavithai arasi nirya ezhuthunga
Title: Re: கனவு காதலன்
Post by: BeeMa on June 23, 2021, 08:38:23 AM
  nalla eluthu murai migavum nanraka ulathu thodarnthu eluthavum
Title: Re: கனவு காதலன்
Post by: DuskY on June 23, 2021, 08:54:59 AM
Kandipa eluthuren frnds neenga support pana ok
Title: Re: கனவு காதலன்
Post by: gab on June 23, 2021, 11:59:02 AM
முதல் கவிதையிலேயே தடம் பதித்த தங்கள் கவிதை,  மென்மேலும் பொதுமன்றத்தை அலங்கரிக்க வாழ்த்துகிறேன் அரசி.
Title: Re: கனவு காதலன்
Post by: SweeTie on June 23, 2021, 09:32:20 PM
அரசி   வாழ்த்துக்கள்.   தொடரட்டும்   உங்கள் கவிப்பயணம்.    உங்கள்  கவிதைகள்  நமது
ஓவியம் உயிராகிறது  நிகழ்ச்சியலையும்    வரணும்.    எதிர்பார்க்கிறேன் அரசி.   வாழ்த்துக்கள்
Title: Re: கனவு காதலன்
Post by: Ice Mazhai on June 24, 2021, 03:14:24 AM
 சூப்ப்பர்ர்ரூ
Title: Re: கனவு காதலன்
Post by: எஸ்கே on June 24, 2021, 10:49:23 AM
மிக அருமை முதல் கவிதையே அரசி...🤗
Welcome to forem arasi congrats 👏
கனவு காதலனை நினைவில் வரவைக்கும் கவிதை...😍
மென்மேலும் உங்கள் படைப்பை எதிர் பார்க்கும் உங்கள் தோழன் YesKay👍