FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on June 21, 2021, 11:42:34 PM

Title: கண்டதும் காதல்
Post by: suthar on June 21, 2021, 11:42:34 PM
(https://i.postimg.cc/Y4zvt2DJ/IMG-20210621-184009.jpg) (https://postimg.cc/Y4zvt2DJ)

நிபுனனை போல்
நிஜ பிம்பம் கானாமலே உன்
நிழலை நகல் எடுக்கிறேன்
நிர்வாணம் தொலைத்து
நின் புருவ வளைவுகளும் தூக்கி
நிற்கும் பருவ மேடுகளும்
நித்திலம் அணியும் கழுத்தும்
வளவி அணியும்  கைகளும்
நளினமான கொடி இடையும்
நிலவை ஒத்த வதனமும்
நிறைவான நங்கையென்றே உள்ளம் பூரிக்கிறேன்

நிதமும்  உன்னுருவை
நிச்சயம் கண்டுவிட
நிர்பந்திக்கிறது மனம்
நிஜம் கண்டு மனமுழுதும்
நிறைந்திருக்கும் காதலை வெளிபடுத்துகையில்
நின்னை காதல் செய்ய
நிர்பந்தம் செய்வாயோ...?
நிந்தனை செய்வாயோ..? யாமறியேன்..

நிர்பந்தமும், நிந்தனையும் காதலில்
நிதர்சனமென்பதால் எனக்கான
நிபந்தனைகளை மனதுள் நிறுத்தி
நிர்ணயம் செய்து கொள்கிறேன்...

நிசிகள் தோறும் உன்
நிழலை நினைவில் நிறுத்தி
நிலமகள் உன்னை அடைய
நியாயமான ஆசைகள்
நினைவெல்லாம் நிறைந்திருந்தும்
நிரந்தரமாக மனதுள்ளே பூட்டிவைத்து
நித்திரை தொலைத்து
நிதானம் இழந்து
நிர்மூலம் ஆகிறேன்....