FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on June 04, 2021, 11:57:11 AM
-
கடந்து போன ஒரு காலத்திலும்
வரப்போகும் ஒரு காலத்திலுமாக
நான் நிகழுகிற காலத்தை தொலைப்பதாக
குறைபடுகிறாள் தோழியொருத்தி..
நாளைய பொழுதுகள் குறித்து
திண்ணமான நிலை எதுவுமில்லை என்னிடம்
கடந்து போன காலத்தின்
என் பிரதிபலிப்புகள் சூழ்ந்திருக்கும்
இந்த நிகழ்காலங்களை புறந்தள்ளி வாழ்தல்
எப்படி என் நிஜங்களாகும் என்கிறேன்
முன்னும் பின்னும் விடுத்த
ஓரு மென்நிலையில் நிகழும் காலத்தை
முழுமையாக வாழ்ந்திடு என்கிறாள்
எனதிந்த கணங்களில்
நேற்றின் தொடர்ச்சியான நான் இருக்கிறேன்
அதை விடுத்தபின் இக்கணங்கள்
என் கணங்கள் ஆகுமோ?..
நான் எனது கணங்களையே
வாழ முயல்கிறேன்
எனது இன்றைய கணங்களில்
நீயுமிருக்கிறாய்
நாளையை குறித்து
திண்ணமான நிலை ஏதுமில்லை என்னிடம்
நான் எனது நிகழ்களிலே வாழ்கிறேன்
அதில் நீயுமிருக்கிறாய்...