FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on March 20, 2021, 03:34:59 PM
-
கண்களால் காதலித்தேன்
கனவுகளாக காதலித்தேன்
கவிதைகளை காதலித்தேன்
நிலவை காதலித்தேன்
நிஜத்தை காதலித்தேன்
அவள் நினைவுகளை காதலித்தேன்
காவியங்கள் ..
வண்ணமிகு ஓவியங்கள்
இன்பதமிழ் ஏடுகளை நான்
தள்ளிவைத்து அவளை
நேசித்தேன் ..
அவள் அன்பை மட்டுமே யாசித்தேன்..
இதயமெல்லாம் அவள் நினைவு
இளைமை யெல்லாம் அவள் வனப்பு
பாவை ஒரு பால் நிலவாய்
பாவித்தேன் ...அவளையே
காலமெல்லாம் கரம்பிடிக்க
வேண்டுமென ..காதலிலே
கரைந்துவிட்டேன் ....
காற்றுக்கும் பூவுக்கும்
தென்றலுக்கும் திங்களுக்கும்
வானுக்கும் ..மீனுக்கும்..
அவளோடு ஒப்பனைகள்
நான் வரைந்த கவியெல்லாம்
காலமகள் எனக்கு தந்த கற்பனைகள்
காதலிலே மெய்மயக்கம்
கண்களிலே பாவையிலே
நினைவிகளில் ...எப்போதும்
பால் மாயக்கம் ...காதலித்து
காதலித்து ...காதலிலே
கரைந்துவிட்டேன் ...
..........சிற்பி....