FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 11, 2021, 04:45:36 PM

Title: நம்பிக்கை எனும் நார் கொண்டு
Post by: thamilan on March 11, 2021, 04:45:36 PM
இலக்கு நோக்கி பயணிப்பதென்பது
மாரத்தான் பந்தயம் polaththan
இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்
ஆயிரம் பேர்கள் என்றாலும்
இலக்கின் உச்சத்தை தொடுபவன் ஒருவனே

அவன் நீ தான் என்று
உறுதி கொள்
ஓய்ந்துவிடாமல் துணிந்து செல்

எந்த செயலிலும் செய்யுமுன்
முடியுமா என்ற கேள்வியினை
உனக்குள் நீயே எழுப்பாதே
முடியுமா என்றெழும் கேள்வியே
முடக்கிவிடும் உனது திறமைகளை

தன்னம்பிக்கையை உனது
தாரகமாக்கிக் கொள்
அப்போதுதான் சோதனைகள் என்பது
உன்னை அணுக சிந்திக்கும்