FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on February 07, 2021, 01:01:02 PM
-
ஆணும் பெண்ணும்
அன்பின் வழியில்
அறம் சார்ந்து வாழும்
இல்லறம்..
எந்த அன்பு அறம் உன்னோடு
வாழ்கிறதோ உன்னை அலங்கரிக்கிறதோ
அதை துறப்பது துறவாகாது
அதற்க்காக எதையும் துறப்பதே
துறவாகும்...
வாழ்க்கையில் இல்லறம் பாதி
துறவறம் மீதி...
துறவால் யாரும் இறைதன்மையை
அடைவதில்லை..
இல்லறத்தை துறப்பது ஒருபோதும்
துறவாகாது..
மாறாக..கோபத்தை...காமத்தை...கர்வத்தை
துறப்பதே ..மிக சிறந்த துறவு நிலை..
இல்லற தர்மத்தை மீறிய வாழ்க்கை
உண்மையில் துறவாகது..
தொடந்து ஒருவன் தன்னை
வேறுவிதமாக காட்டிக்கொள்ள
துறவை பயன்படுத்த கூடாது...
தர்ம சங்கடமான சூழ்நிலையில்
ஒருவன் தன்னை
தற்காத்து கொள்ள
பிறரை தலைகுனிய வைக்கிறான்
தன்னடத்தையில் தவறுபவன்
தன்னை அறிதலிலும் தவறி விடுகிறான்
உயிரும் உடம்பும் பிரிவது இறப்பு
காதல் உயிர்நிலை
காமம் உடல் நிலை
இரண்டும் இணைந்தது இல்லறம்
பொய்கள் மிகுந்த உறவுகளால்
வாழ்க்கை தவறாக புரிந்து கொள்ளபடுகிறது
இன்று. தந்தை மகன் அன்னை நண்பன்
என எல்லா உறவுகளிலும் பொய்கள்
மிகுந்து காணப்படுகிறது..
மனிதன் எல்லாவற்றயும்
தான் இழந்துவிட்டு
எஞ்சி நிற்க்கும் அநுபங்களை
ஞானம் என்கிறான்
துறவு ..பிறர்நிலை தன்நிலை
கடந்த உள்நிலை தேடல் ....
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...
....
அன்புடன் சிற்பி.......