FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on January 01, 2021, 05:45:10 AM

Title: காலம்
Post by: SweeTie on January 01, 2021, 05:45:10 AM
நிற்காமல்  ஓடுகிறது    காலம்   
மணித்துளிகள்  குறைந்துவிட
காலத்தோடு  போட்டியில்  மனிதனும்
பின்னோக்கி பார்க்க  நேரமின்றி
முன்னோக்கி ஓடுகிறான். 
இதோ    2021 ஐ  எட்டிவிட்டான் !!! ஆனால்
காலத்தின்  ஓட்டம் குறைவதில்லை
 
உறவுகள் சொல்லி உறவாடிய காலமும் போய்
தொலை  தூரம்  தெரியாமல்  தொலைபேசியில் பேசி - பின்
உலகத்தை  உருட்டி  உள்ளங்கையில்  பிடிக்கும் 
கையடக்க தொலைபேசிகள்  பேசுவதை  சுருக்கிவிட     
செய்திகளின்  முடக்கமும்  சிறுகத்   தொடங்கிவிட
நாளுக்கு நாள்   புதுமைகளுடனான
அதி தீவிர  வேக  நவீனம்    தேடுகிறான் 
விண்ணை எட்டிவிட துடிக்கும் மனிதன்
பூவுலகில்  வாழ்ந்தது போதும்  என்றாகி
வேறுலகு  தேடுகிறான் 

இதில் வேடிக்கை  என்னவென்றால் 
படைத்த  கடவுளோ   பார்க்கமுடியாமல்
உள்ளிருந்த சாத்தானை வெளியே  திறந்துவிட்டு
தாட்பாளை  இழுத்துமூடி    இறுக  அடைத்துகொண்டு
உள்ளே  நிம்மதியாய் தூங்குவது.