FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on December 31, 2020, 05:24:43 PM

Title: 2021
Post by: சிற்பி on December 31, 2020, 05:24:43 PM
காலமகள் இன்னுமொரு
வயதை கடக்கின்றால்
ஒன்றல்ல இரண்டல்ல
இருபத்தி ஒரு நூற்றாண்டு
அவள் கடந்து வந்த பாதை

மண்பிறந்த காலம் முதல்
எண்ணிறைந்த மாற்றங்கள்
கண்ணிறைந்த பூமியெல்லாம்
கடல் நடுவில் மிதக்குதம்மா
அந்த ...
கண்மறைந்த காலமகள்
கற்பனை தான் படைப்புலகம்

மண்படைத்து விண்படைத்து
உயிர் படைத்து
மரம் செடி மனிதனையும்
படைத்திவள்
புதியதோர் உலகம் படைக்க
புறபட்டு வருகின்றாள்

அன்பென்றும்
அறமென்றும்
நிதிநெறி தவறாமல்
அவள் ஆட்சி செய்ய வருகின்றாள்

அவள் பண்பாடு குறையாமல்
அடுத்துவரும் தலைமுறைக்கு
தாயவளை தமிழை
அப்படியே எடுத்து செல்வோம்

....புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
.....அன்புன் சிற்பி.....