FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 16, 2020, 04:47:30 PM

Title: நீயே !
Post by: joker on December 16, 2020, 04:47:30 PM
(https://i.postimg.cc/3rkH7CFK/252.jpg)

உருக உருகத்தான்
நேசித்தேன்
உயிராய்  கொண்டுதான்  -உனை
காதலித்தேன்

விடிய விடியத்தான்
பேசிக்கொண்டேன்
விடியாமல் இருக்கதான்
பிரார்த்தித்தேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
வார்த்தை சேகரித்தேன்
கொஞ்சி கொஞ்சி பேசும்
உனக்கோர் கவிதை
சமர்பித்தேன்

துள்ளி துள்ளித்தான்
நடனமாடும் உன்- காந்த விழி
அழகை மனதில்
படம்பிடித்தேன்

நாணம், நாணம் கொள்ள
நீ புன்னகைக்க -அதை காண முடியா
உன் தலை சூடிய பூக்கெல்லாம்
தரை சேர
சேகரித்தேன்

தத்தி தத்தி
காதல் பாடமெல்லாம்
பயின்றேன்

தவிக்கவிட்டு
நீ செல்வாய்
என்றறியாமல்
நினைவெல்லாம்
நீயே என 
பித்து பிடித்து
விக்கித்து கிடக்கிறேன்


*****JOKER****