FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 11, 2020, 01:42:57 PM
-
காக்கையின் சிறகினிலும்
பார்க்கும் பொருளிலெல்லாம்
கண்ணனை கண்டவன்
இவன்
செல்ல குழந்தைகளுடன்
குழந்தையாய்
ஓடி விளையாடு பாப்பா என
ஓடி விளையாடியவன்
இவன்
ஆனந்த சுதந்திரம்
அடைவோம் என
ஆடி களித்தவன்
இவன்
அச்சமில்லை அச்சமில்லை
எதிரியை கண்டு
அச்சமின்றி
வலம் வந்தவன்
இவன்
காதல் ஆகட்டும்
நாட்டின் விடுதலை ஆகட்டும்
பெண்ணுரிமையாகட்டும்
எளிய நடையில்
குரல் கொடுத்தவன்
இவன்
மக்களின்
கவிஞன்
இவன்
எட்டயபுரத்தில் பிறந்த
எட்டா உயரத்தில் புகழோடு
எங்கள் உள்ளத்தில் கலந்திட்ட
முண்டாசு கவிஞன்
இவன்
எங்கள் பாரதி
இன்று பாரதியார் பிறந்தநாள்