FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 10, 2020, 06:24:48 PM

Title: நீ !
Post by: joker on December 10, 2020, 06:24:48 PM
விடிந்தும்
உறங்காத
விழிகள்
தந்தாய்

பசித்தும்
விழுங்காத
உணவாய்
இருந்தாய்

வளர்ந்தும்
கனி தராத
மரமாய்
நின்றாய்

தாகம்
தீர்க்காத
கடலில் விழும்
மழையாய்
பொய்தாய்

இருளில்
நிலவில்லா
வானமொன்று
தந்தாய் 
பரிசாய்

நான் மட்டும்
ரசிக்கும் கவிதையாய்
ஏட்டில்
நீ

Title: Re: நீ !
Post by: Natchathira on December 11, 2020, 06:29:42 AM
நான் மட்டும்
ரசிக்கும் கவிதையாய்
ஏட்டில்
நீ//அழகான வரிகள் friend  ;D ;D