FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on November 07, 2020, 09:36:11 PM
-
காலம் மாறும்
சில காயங்கள் ஆறும்
சில உறவுகள் பிரிந்தாலும்
அந்த நினைவுகள் சாவதில்லை
ஆலயம் கோடி
இறைவனை தேடி
ஆயிரம் கோடி
இதயங்கள் பார்த்தேன்
காதல் வானில்
சிறகடித்து கவிதை பாடும்
மனங்கள் பாத்தேன்
இதய மலரில்
இடறி விழுந்து
மௌனம் பெற்ற
மறைஞானம் பார்த்தேன்
கல்லும் மண்ணும்
மரமும்
மலரும் கூட
கனிவாய் கொஞ்சம்
பேச பார்த்தேன்
ஆயிரம் கோடி ஆண்டுகள்
தாண்டி மனிதம் பெற்ற
மாற்றம் பார்த்தேன்
பாவையரோடும்
பால்மனதோடும்
பழமை மறவா நாணம்
பார்த்தேன்
ஆடவர் நெஞ்சில்
அலைகளை போல
பணியும் பாயும்
வீரம் பார்த்தேன்
ஆனாலும் ஆனாலும்
அனைத்திலும் நீயே
அனைத்துமே நீயே
கடவுளே
உன்னை மட்டும்
பார்க்கவில்லை
.....சிற்பி.