FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 05, 2012, 10:35:44 PM

Title: என்னுயிர் தோழன் !
Post by: Jawa on April 05, 2012, 10:35:44 PM
மேகத்தை இழந்த
வானத்தை பார்க்கமுடியாது...


உப்பை இழந்த
கடலை பார்க்கமுடியாது...


தென்றலை
விரும்பாத பூக்களை
பார்க்கமுடியாது ...

நிலவை ரசிக்காத
காதலர்கள் கிடையாது

காதலை விரும்பாத
இளைஞர்கள் இல்லை
காதலை விரும்பாத மனிதனே இல்லை


அலைகள் இல்லாத
கடல் இல்லை கடலே
இல்லாத உலகம் இல்லை


காற்று இல்லாத
பூமி இல்லை
காற்றை துறந்தவன்
மனிதனே இல்லை


நம்பிக்கை இல்லாதவன்
வாழ்கையில் யாரும்
இல்லை
நண்பன் இல்லாதவன்
வாழ்வதே இல்லை!
Title: Re: என்னுயிர் தோழன் !
Post by: Yousuf on April 05, 2012, 10:49:10 PM
வாழ்க்கையின் ஒரு அங்கம் நட்பு!

நல்ல கவிதை ஜாவா மச்சி!

தொடரட்டும் உங்கள் கவிதைகள்!
Title: Re: என்னுயிர் தோழன் !
Post by: Global Angel on April 08, 2012, 01:43:12 PM


அந்த அங்கம் பங்கம் ஆகாத வரைதான் .... ஆகிவிட்டால் .....