FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 01, 2020, 01:09:55 PM
-
வாழ்க்கையே உனக்கு நன்றி
உன்மேல் பயணிக்கும் பயணி நான்
பல நூறு மைல்கள் கடந்து விட்டேன்
குழந்தையாக சிறுவனாக
வாலிபனாக காதலனாக
கணவனாக தந்தையாக
பலப்பல பருவங்களை
கடந்து விட்டேன்
என் பயணத்தில்
நான் அனுபவித்த
வசந்தகாலங்கள் சில
வேனிற்காலங்கள் பல
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
புது அனுபவங்கள்
அம்மா எனறு நான் கூப்பிடுகையில்
ஒரு ஆனந்தம்
அப்பா என்று என்னை அழைக்கையில்
அது பேரானந்தம்
பெற்றவர்கள் என்னை சுமந்தார்கள்
என்பிள்ளைகளை நான் சுமந்தேன்
ஒரு நாள் என்பிள்ளைகள்
என்னை சுமப்பார்கள்
வாழ்க்கையே கொஞ்சம் பொறு
நான் இன்னும் வாழ வேண்டும்
எல்லா பருவங்களிலும் கடந்த நான்
முதுமையையும் கடக்க வேண்டும்
நெஞ்சு நிமிர்ந்து - வீறுநடை
போடும் நான் - உடல் சுருங்கி
நடை தள்ளாடும்
வயோதிக பருவத்தையும்
வாழ்ந்து பார்த்துவிட வேண்டும்
வாழ்க்கையே கொஞ்சம் பொறு
-
உடல் சுருங்கினாலும், நடை தளர்ந்தாலும்
அனுபவத்தில் தலை நிமிர்த்து
வீறு நடைபோடும் முதுமை பருவம்..
கடமைகள் முடிந்து, பொறுப்புகள் கைமாற்றி
உருவில் முதுமை ஏந்தி, மனதில் குழந்தையாய்
ஜீவிக்கும் முதுமை பருவமும் சுகமானதே....
தமிழன் அருமையான கவிதை...
-
நன்றி TINU
-
ஒரே கவிதையில் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் உள்ளடக்கி விட்டீர்கள். நல்ல கவிதை வாழ்த்துக்கள் தமிழன் அண்ணா.
-
நன்றி உடன்பிறவா சகோதரனே darth