FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on October 31, 2020, 11:19:48 PM
-
எதிர் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. ஆக்கமும்,கருத்துக்களும் நிறைந்த உங்களுடைய கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கவிதைகள் தீபாவளி திருநாள் பற்றிய சொந்த கவிதைகளாக அமைந்திட வேண்டும்.
இந்த பகுதியில் முன்பதிவு செய்தல் கூடாது.
அதிகமான கவிதை பதிவுகள் வரும்பட்சத்தில் குறிப்பிட்ட அளவு கவிதைகள் வந்ததும் இங்கு குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக பதிவுகள் அனுமதி மூடப்படும் . எனவே தங்கள் கவிதைகளை விரைவில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் 9 ஆம் தேதி (திங்கள் கிழமை ) இந்திய நேரம் இரவு 12:00 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தீபாவளி திருநாளில் உங்கள் கவிதைகள் நண்பர்கள் இணையதள வானொலி வழியே ஒலிக்கட்டும். தீபாவளி திருநாளில் உள்ளம் மகிழட்டும்.
-
தீபத் திருநாளாம் தீபாவளி இன்று
அதிகாலை எழுந்து
தலைமுதல் கால்வரை எண்ணைக் தேய்த்து
அசுத்தம் நீங்கக் குளிக்கும் போதே
நம் மனதில் உள்ள அசுத்தங்களையும்
சுத்தம் செய்வோமாக
இது வரை நம் இதழ்களை
மவுனம் மட்டும் அலங்கரித்திருந்தாலும்
இந்த இனியத் திருநாளில்
வண்ண வண்ண இனிய வார்த்தைகள்
மத்தாப்பூவாக
உங்கள் இதழ்களில் மலரட்டும்
புத்தாடைகள் உடுத்தி
புத்துப்புது நகைகள் அணிந்து
பெற்றவர்கள் பெரியவர்கள்
ஆசிர்வாதம் பெற்று நம்
உற்றவர்க்கும் சுற்றவருக்கும்
வாழ்த்துக்கள் சொல்லும் போதே
நம் வாழ்வுக்கும் நன்றி சொல்வோம்
அரக்கனை அழித்து
உலகுக்கெல்லாம் வெளிச்சம் உண்டாக்கிய
இந்த நாளில்
பேராசை, பொறாமை,
கோபம், குரோதம் என்ற
அரக்கர்களைக் கொன்று
நம் மனதிலும் சமாதானம் எனும்
தீபத்தை ஏற்றுவோமாக
அகந்தை எனும் அரக்கனை
அழிப்போமாக
அன்பை மட்டுமே
விதைப்போமாகுக
அசுரனை அழித்தார் கிருஷ்ண பரமாத்மா
அதை தீபாவளியாய் கொண்டாடுகிறோம்
இன்று கண்ணுக்கு தெரியா அரக்கனாய்
உலகம் முழுவதிலும் ஆட்டிப்படைக்கிறது
கொரோன எனும் ஆட்கொல்லிக் கிருமி
கையில் சக்கரத்துடன் வந்து
உலகத்தை காத்தார் கிருஷ்ணன்
இன்றோ கையில் ஊசியுடன்
யார் வருவார் என
உலகமே எதிர்பார்த்திருக்கிறது
இந்த தீபாவளி திருநாளில்
உலகை காக்கும் ரட்சகனாக
தடுப்பு மருந்து சீக்கிரம்
வந்திட வேண்டுமென்ன வாழ்த்துகிறேன்
தெய்வங்கள் என்றும் காத்திருக்கும்
சிலைகளாக
சில நேரம்
மனித உருவெடுக்கும் தெய்வங்கள்
மனித மீட்சிக்காக
மனிதன் தான்
கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துபோகிறான்
காற்றாக - ஆகவே
இனிப்புடன் சேர்த்தே
நம் நட்பையும் அனைவருக்கும் வழங்குவோம்
தீபங்கள் வீடுகளில் மட்டுமல்ல
உங்கள் வாழ்விலும் ஒளியேற்றட்டும்
இனிமை இனிப்புகளில் மட்டுமல்ல
உங்கள் இதயங்களிலும் இனிக்கட்டும்
சந்தோசம் என்றும் உங்கள் வாழ்வில்
பூக்களாக பூத்துக் குலுங்கட்டும்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
எனது இனிய தீபாவளி திருநாள்
வாழ்த்துக்கள்
-
தீபாவளி ;D
தீயில் கேட்டவை ஒளிந்து நல் வழி பிறக்க
நம் வாழ்வில் நல்ல எண்ணங்களை தர
ஏற்றுவோம் தீபங்களை !
தூக்கத்தை தொலைத்து உன்
வருகைக்காக காத்திருக்க
உன் வருகை தெருவெங்கும் வண்ணமயமாக
வானெங்கும் பிரமாண்ட வெடிக்கோலமாய் !
இறைவனுக்கும் கேட்டிருமோ உன் சத்தம்
கண்திறந்து பார்த்திருவாரோ நாம் படும் கஷ்டம்
தோலை தூரம் விரட்டிவிடு துயர் பஞ்சம் இல்லாமல் !
நரகாசுரனை வென்ற நாளுமிதுவோ
நாமெல்லாம் கொண்டாட
தீப நாள் அது தீபாவளி ஆனதுவோ !
எண்ணற்ற ஒலிகளால் ஒளிவிளக்கேற்றி
ஓராயிரம் கைகள் கூப்பி உன்னை வரவேற்க
அன்புடன் அழைக்கிறோம் தீபாவளியே வா !
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
-
இரவும் பகலாய் மின்னிட
பெரியோர்கள் புத்தாடை உடுத்திட
வாண்டுகளோ வண்ண ஆடை உடித்திட
விடலயார் வேட்டும் வெடிதிட
கைகளில் மின்னிடும் மத்தாப்பும்
வீதியில் கேட்டிடும் வேட்டுச்சத்தம்
வானிலே சிதறிடும் வாணவேடிக்கை
என ஊரே விழாக்கோலம்பூண்டிருக்க
வானமோ வானவில்லாய் வண்ணமிட
நானோ இங்கேயே
என் உழைப்பின் வெளிப்பாட்டில்
கொண்டேன் ஆனந்தம் கண்டேன்
சிரிப்பையும் தொலைத்தேன்
சிதைந்தும் நின்றேன்
வேட்டிற்க்கு வண்ணம் பூசிட
எந்தை குருதியும் சிந்திட
கிருஷ்ணனும்( எந்தை)மாண்டான்
அன்று
கிருஷ்ணன் நரகாசுரனை வென்றதற்கு
இன்றோ பதவி உயர்வும் பெற்றேன்
பாடசாலையிலிருந்து பட்டாசு ஆலைக்கு
இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்
இப்படிக்கு பட்டாசுத்தொழிலாளியின் மகன்
- இணையத்தமிழன்
-
தீப திருநாளே வா! தீபாவளியே வா !
என் புத்தாடையும் வா வா என்றழைக்குதே !
வித வித இனிப்புகளும் தன் கண்சிமிட்டியே !
புசி புசி என எனை கெஞ்சி கூத்தாடுதே !
கண்களுக்கு விருந்தளிக்கும் மின்மினியே !
கொஞ்சம் பொறு, அத்திருநாளும் வரட்டுமே!
அந்நாளின், வண்ண வண்ண ஒலி ஒளியிலே!
நானும் உன் உன்னத அழகிலே!
மிரண்டு மிரண்டு மலைப்பேனே!
அந்த பொன்னான நாளும் வந்ததே!
கொஞ்சமும் குதூகுலம் குறையாமலே!
பொழுது புலரா வேளையிலே !
கங்கா நதி நீரினிலே! எண்ணெய் நீராடியே!
குளம் போல் நெய் ஊற்றியே!
திருவிளக்கு சுடர்விட தீபமேற்றியே!
புத்தாடைகளும்,புது புது பூக்களும் வரிசையிலே!
முதலில் நிற்க, பலகாரமும் பிரசாதமுமே!
அடுத்து அடுத்து அணிவகுத்து அமரவே!
என் வீட்டு முற்றத்திலே! வா வா என்றழைத்தே!
தோழியரே! தோழியரே! நீங்களும் வாரீரே!
புது பாட்டடையும் சர சர ஒலியெழுப்பவே!
கண்ணாடி வளையல்களும் கலகலக்கவே!
காதோடு லோலாக்கு ஊஞ்சல் ஆடவே!
சங்கு கழுத்ததோடு முத்து மாலைகளும் நடமிடவே!
தோழியரே வாரீர்! அழகு ஊர்வலம் போகலாமே!
நம் FTC தீபாவளி சிறப்பு திருவிழாவுக்கே!
என் இனிய நண்பர்களே !! இவளின் உளம் கனிந்த
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
-
பண்டிகை என்றாலே
படடாசும்
பலகாரமும்
பளபளா சட்டையும்
உற்றாரும் உறவும்
சுற்றமும் நண்பரும்
ஊர் கூடி ஒன்றாய்
உணவை பகிர்ந்து
உல்லாசமாய் வாழ்ந்தது
உன் என் நினைவினில் உண்டு ..
காலமென்பேனா
கலி காலம் என்பேனா
காணப்பட்டு போனதெங்கள்
கலாச்சாரம் என்பேனா..
வின் பிளக்கும்
வித்தைகள் காட்டும்
வாணவேடிக்கை
வெறும்
வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும்
பார்த்து கழிக்கிறோம்
எங்கள் வீட்டு பலகாரம்
என் கையால் செய்ததெனும்
ஒரு ஆண்டியின் பதிவை
ஆவலாக
வாயில் நீர் ஊற பார்த்துவிட்டு
ஊர் நினைவில்
உச்சுக்கொட்டும்
புலம் பெயர்ந்தவர்
வலிகளை ஆசையை
வையம் உணர்ந்ததில்லை
காலமும் நேரம்
தன்னை கடுகதியில் மாற்றினாலும்
நம் கண்களில் மாறாது இருப்பது
நம் தீபாவளி பண்டிகையுமொன்றே..
இன்மையை வதம் பண்ணி
இல்லாமையை கொன்று
இல்லத்தில் கூடி
இன்புறும் நாள்தான்
எல்லோருக்கும் தீபாவளி என்பேன் ..
இருந்தும்
இல்லம் போல் உவகைதரும்
எனதருமை
நண்பர்கள் இணையதள
நண்பர்களுக்கு
என் உளமார்ந்த நன்றியும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
-
புத்தாடை சூடி
புன்னகை தவள கொத்தாக என்னை
பற்றி அணைக்கும்
பலகார வித்தகி என் அன்னை..
கட்டாக பலவண்ண பட்டாசைத் தந்து
கவனமாக பத்தவைக்க
கற்றுத் தந்த என் தந்தை..
ஊர்கோடியில்
ஒன்று சேர்ந்து
கனத்த மடியிலிருந்து
பலகாரத்தை
பறித்துக் கடிக்கும்
திரள்..
இரட்டை ஜடையில்
சின்ன தேவதைகளென
வளையவரும்
ஆயம்..
எண்ணைச் சிற்றுணவு
ஏதாவது பண்ணும் சூடாக உண்ணாதே
என துரத்தி அடிக்கும் பாட்டி..
இப்படி வளர்ந்ததும்
இழந்துவிட்ட சுகங்களை
இந்த பண்டிகைதான்
இன்றளவும்
இரைமீட்கின்றது...
பிரிவுகளை உணராது
பிடித்தவைகளை நினைக்க
பாங்கர் கூட்டமுண்டு இந்த
பாங்கர் தமிழ் இணையமுண்டு
பாடி பேசி
பாரங்களை களையும்
பண்ணையும் பாங்கரும்,
பண்டமும் ஈகையுமாக உங்கள்
பண்டிகை பண்படட்டும்...
தீபாவளி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்..
-
எங்கோ தூரத்தில் வெடிக்கும் ஒற்றை வேட்டில்
துயில் கலைந்து,
தீபாவளியின் நினைவுகளும், கனவுகளுமாய்
உறக்கமின்றி புரள்கிறேன்.
புதுவருட நாட்காட்டியை பிரித்ததும்
அக்டோபருக்கும் நவம்பருக்குமென
பரபரக்கும் கைகள்.
ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே
மனம் குதூகலமாய்,
கணக்கிடத் துவங்கும் நாட்களை.
எப்பொழுது நிறுத்திக் கொண்டேன்
நான்
தீபாவளியை தேடுவதை?
வருடத்தில் இரண்டாம் முறை
புது உடை வாங்கவென
கடைக்கு அழைத்துச்
சென்று,
இதுவா அதுவா என பார்த்து பார்த்து
நாம் ஒன்றை நினைத்து ஏங்க,
அப்பா அம்மா நமக்காய் ஒரு உடை எடுக்க,
நாம் முகத்தை திருப்பி நிற்க,
பிறகு நமக்கு பிடித்த உடையை எடுக்கவென,
மீண்டும் அந்த உடையை அணியும் வரை
எடுத்து எடுத்து தடவி பார்த்து,
சின்னதொரு நாடகங்களை
நடத்திடும் அந்த நாட்களே
அலாதியாக இருந்தது.
வருடம் முழுக்க உடைகளாய் எடுத்து
நிறைந்திருக்கும் அலமாரிகள்
இன்னுமொரு உடை சேருவதை நினைத்து
ஏளனமாக சிரிக்கிறது.
அப்பாவுடன் கைக்கோர்த்து நடந்து,
அலாதியாய் ரோட்டோர பட்டாசுக் கடையில்,
புஸ்வாணம் வேணும், சங்குசக்கரம் வேணும்
என நான் ஒரு பட்டியலிட
சரவெடியும், அணுகுண்டும், ராக்கெட்டுமாய் நீளும்
அண்ணனின் பட்டியல்.
ஒருபுறம் பரபரக்க பணத்தை எண்ணிடும் அப்பா,
எங்கள் முகம்பார்த்து
இன்னும் ஒரு வெடி சேர்த்து வாங்கக் கொள்ள
சொல்லும் தருணம் மத்தாப்பாய்
மலர்ந்திடும் எங்கள் முகங்கள்.
இன்னும் சற்று நேரத்தில்,
அக்கம் பக்கத்து வாண்டுகளின்
உற்சாகக் குரல்களோடு
வெடிக்கத் துவங்கும் பட்டாசுகள்.
பட்டாசு என்பது தீபாவளியின்
கட்டாயமில்லை என எப்பொழுதிருந்து
வேடிக்கை மட்டும்
பார்க்கத் துவங்கினேன்?
வட்ட வட்டமாய் மருதாணியிடும் அம்மாவின் வளையல் கரங்கள்,
'அரிக்கிதுப்பா சொரிஞ்சிவிடு' என அப்பாவிடம் கொஞ்சிக் கொள்ளும் மூக்கு,
பார்த்து பார்த்து பக்குவமாய் புரண்டு
உறங்கி,
காலையில் தங்கையுடன் போட்டிபோடும்
கைவிரல் சிவப்புகள்.
'மருதாணி வைக்கலாமா மா'?
என வினவுகிறாள் அம்மா,
'ம்ம்ச் எங்க போய்ம்மா மருதாணிய தேடுறது' என நான்
எப்பொழுதிருந்து சலிப்படைய துவங்கினேன்?
கைகளில் பிசுபிசுத்திருக்கும் முறுக்கின் எண்ணை வாசனை கூறிடும் எத்தனை முறை பலகாரம் வைத்திருக்கும்
அறைக்கு சென்று வந்திருப்போமென.
இரண்டொருவர் பகிர்ந்துகொள்ளும்
பலகாரங்களுக்கு மீண்டும் பலகாரங்கள் கொடுக்கவென
கடையில் வாங்கி வந்த 'ஸ்வீட் பாக்ஸ்கள்' ஏளனமாய் எனை பார்த்து
சிரிக்கின்றது.
வெறுமையாக நகரும் இந்த நாளும் மற்றொமொரு நாளென
கடந்து செல்ல பழகிக்கொண்டிருக்கும் வேளையில்
வேருக்குள் புதிதாய் விழும் நீர்த்துளி போலே
நண்பர்கள் அரட்டை அரங்கத்தில்
புது தோழிகளும், நண்பர்களும், சொந்தங்களுமாய்,
பேச்சும், அரட்டையுமாய்,
பண்டிகையின் ஆராவரத்தோடு நிகழ்ச்சிகளுக்கு தயாராக்கிக் கொண்டிருப்பது
எங்கோ, என்றோ தொலைந்த
என் பால்ய கால தீபாவளியை
மீட்டிருக்கும் சாத்தியத்தில்
நிம்மதியாய் உறங்கச் செல்கிறேன்
மற்றுமொரு சாதாரண நாளாய் கடந்திடாமல்
என் வாழ்வில் புது ஒளி வீசிடச் செய்த
எனதினிய FTC சொந்தங்களுக்கு
இனிய தீபவொளி திருநாள் நல்வாழ்த்துகள்
-
எல்லாரும் கொண்டாடும் தங்க தீபாவளி !
நமக்கு மட்டும் அரட்டை அரங்க தீபாவளி !
இங்கு வாழும் , வரும் தோழமைகள் இருந்து
நமக்கு இனிப்பு , காரம் பரிமாறும் விருந்து!
எப்படி எனில் , சொல்கிறேன் .நகைச்சுவையாக எடுத்து கொள்ளவும் !
தவறு எனில் மன்னிக்கவும் !
ஒவ்வொரு நட்பும் ஒவ்வொரு சுவை !
ஒவ்வொரு நட்பும் ஒவ்வொரு சுவை !mind voice அடைப்புக்குள்!
நிஞ்ஜா நீ ஒரு இனிப்பு லட்டு !( திருப்பதிக்கே கொடுக்கும் லட்டு )
மூன் னு நீ ஒரு குலாப்ஜாமுன்( எப்போதும் எங்க காமெடி மூனு )
ஜோ சிஸ் ஒரு ஸ்வீட் பேடா(உங்க RJ கு இணை இல்லை ஸ்வீட்டியே )
கண்மணி சிஸ் ஒரு பாதம் அல்வா (நம் FTC யின் ராஜமாதா )
JKJ ஒரு மக்கான் பேடா !( குரலில் ஒரு LKG பாப்பா )
Ms ஒரு கோதுமை ஹல்வா ( தினம் meme போடும் பில்லா )
டினு நீ ஒருஅதிரசம் (கலைகளில் ஒரு நவரசம் )
மாயா ஒரு மைசூர்ப்பா..(உனக்கு ஈடு இணை யாருப்பா )
சரண் ஒரு ரசகுல்லா (யாருக்கும் போடாது குல்லா)
நச்சு ஒரு பால்கோவா !(இனிக்கும் பேச்சில் வெல்ல பாகு )
சந்தியா நீ சோன்பப்டி !(அன்பில் போடும் சொக்குபொடி )
மோகினி ஒரு ஜாங்கிரி (எப்போவும் எனக்கு டார்லிங் )
HQ நீ ஒரு பூந்தி (உன்னிடம் பேசினால் பூர்த்தி )
எனக்கு தெரிந்த பெண் தோழிகள் இவர்கள் !
விடுபட்ட தோழிகள் மன்னிக்கவும் !நீங்கள் தப்பித்து விடீர்கள் !
ஆண் தோழர்களை சொல்லலாமா ? வேண்டாமா ?
ஏன் எனில் தோழிகளை இனிப்பு என்று சொல்லி விட்டு
ஆண்களை காரம் என்று சொல்லுவதால் ..
கோபித்து கொள்ளாவிடில் சொல்லுவேன் !
ஏவில் ஒருஅரிசி முறுக்கு (தோழமையில் என்றும் கிறுக்கு )
புல்லு ஒரு தேன்குழல் (நட்பில் விழாது விரிசல்)
டிராகன் ஐஸ் ஒரு முத்து மிக்ஸர் (யாருக்கும் வைக்க தெரியாது ஐஸ் )
ஜாக் ஒரு வெண்ணை முறுக்கு ( கெத்து காட்டும் பண்ணையார் )
வாடர்ஒரு மசால் வடை !(தினம் ஒரு காமிக் கடை )
இன்னும் இன்னும் ....
முதல்வன் விரும்புவது முட்ட போண்டா..
குமாருஸ் ஒரு சோமாஸு..
லைட்டு ஒரு பகோடா !ராஜு ஒரு பஜ்ஜி
ஜெகா ஒரு உளுந்து வடை !தமிழன் ஒரு கார சீடை
அனோத் ஒரு அன்பு சாக்லேட் பிசுக்கோத்து!
ஹரி ஒரு மசாலா பொறி !
கில்லர் உருளைக்கிழங்கு சிப்ஸு !
ஐய்யோ அடிக்கக வராதீங்க!
இப்படி சொல்லிக்கொண்டே போனாலும்
அனைவரும் உள்ளத்தால் மகிழ்ந்து
நட்பை ஆராதிப்பவர்கள்தான் !
அனைவர்க்கும் இந்த தீபாவளி
வாழ்வில் ஒளி ஏற்றி ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும்
என்று பிராத்திக்கும் உங்கள் அன்பு தோழி அக்னி !
-
தெருவெங்கும் சோடனைகள்
குருத்தோலை தோரணங்கள்
வழி நெடுக வண்ண வண்ண
கண் சிமிட்டும் மின்விளக்கு
வீடெங்கும் தீப அலங்கார
ஆராதனைகள்
தித்திக்கும் பட்சணங்கள்
தேன்முறுக்கு அதிரசமும்
தெவிட்டாத ரவா லட்டும்
தின்னத் தின்ன ருசிக்கும்
காலமும் போனதுவே
பட்டு பாவாடை தாவணியில்
பகட்டாக இளம்பெண்கள்
எட்டுமுழ வேஷ்டி கட்டி
எடுப்பாக வாலிபர்கள்
ஊரை வலம் வந்து
ஊர்கதைகள் பல பேசி
பட்டாசு வெடி வெடித்த
காலமெல்லாம் போயாச்சு.
மதியத்தில் துயிலெழுந்து
காகம் போல் குளித்து
வாட்ஸ்அப் இல் வாழ்த்தனுப்பி
பேஸ்புக்கில் கொண்டாடி
வீட்டோடு அடைபட்டு
கொண்டாடும் தீபாவளி
இன்று வந்தாச்சு.
காலங்கள் கடந்துபோக
வேதங்கள் ஆகமங்கள்
சடங்குகள் சமபிரதாயங்கள்
போன இடம் தெரியவில்லை
புதியதோர் உலகம் இன்று
நாளைய உலகம் நல்லதாய்
அமைய வேண்டி
கொண்டாடுவோம் தீபாவளி
'
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்