FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 20, 2020, 05:25:23 PM
-
காலையில் கண்விழிக்கும் நேரம்
கண் தேடுகிறது
அருகில் உன்னை
காண
நடக்கையிலும்
உன்னை பார்த்தபடி
நடக்கவே மனம்
விரும்புகிறது
எங்கு பயணிக்கையிலும்
உன்னுடன் பயணிக்கவே
விரும்புகிறது
மனம்
விடை தெரியா
கேள்விக்கெல்லாம்
விடையாய் என்முன்
நீயே
நீ அருகில் இல்லா
நாட்கள்
நிலா இல்லா வானம் போல
இருண்டு விடுவதாய்
உணர்கிறேன்
நீ என்ன என் காதலியா
இல்லை
நீ அதற்கும் மேல்
என் செல்ல
தொலைபேசியே