FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vedhalam on July 27, 2011, 04:45:46 PM

Title: ஆசையோ ஆசைதான்
Post by: vedhalam on July 27, 2011, 04:45:46 PM
முகமுகமாய் நின்று
உன் முகம் உற்று பார்த்து ரசிக்க
ஆசையோ ஆசைதான்
முடியவில்லையே ஏன்?

பெண்மையின் நாணம்தான்
எது எப்படியோ --என்
உள்ளம் கவர்ந்த செல்லம் நீ
உன்னோடு பேசி பேசி
சிரித்து சிரித்து மகிழ
ஆசையோ ஆசைதான்
முடியவில்லையே ஏன்?

பெண்மையின் தயக்கம்தான்
எது எப்படியோ --நான்
நேசிக்கவே பிறந்தவன் நீ
உன் விரல்களோடு
என் விரல்கள் கோர்த்து

இறுக பிடித்து நடந்து செல்ல
ஆசையோ ஆசைதான்
முடியவில்லையே ஏன்?
பெண்மையின் அச்சம்தான்

எது எப்படியோ --உன்
அன்பை பெற ஏங்குபவள் நான்

உன் காதிலே
என் காதல் அதை ஓதி
உன் தோளிலே
என் தலை சாய்த்து தூங்க
ஆசையோ ஆசைதான்
முடியவில்லையே ஏன்?

பெண்மையின் மௌனம்தான்
எது எப்படியோ -உனக்கு
உனக்கென்றெ வாழுபவள் நான்
Title: Re: ஆசையோ ஆசைதான்
Post by: Global Angel on July 27, 2011, 06:23:01 PM

உன் காதிலே
என் காதல் அதை ஓதி
உன் தோளிலே
என் தலை சாய்த்து தூங்க
ஆசையோ ஆசைதான்
முடியவில்லையே ஏன்?


nice one
Title: Re: ஆசையோ ஆசைதான்
Post by: Yousuf on July 27, 2011, 06:31:19 PM
நல்ல கவிதை மனம் கவர்ந்த கவிதை...!!!

நன்றி வேதாளம் மச்சான்...!!!