FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 20, 2020, 02:19:30 PM
-
இந்தப் பூக்கள் எல்லாம்
உன் கூந்தலுக்கு அல்ல
உன் இதயத்துக்கு .......
என் பூக்கள்
கவிப்பூக்கள்
என் வாசம் எல்லாம்
உன் உடைகளுக்கல்ல
உன் உயிருக்கு .....
என் வாசம்
சுவாசம்
என் கனி
நீ புசிப்பதற்கல்ல
நீ வசிப்பதற்கு.....
என் கனி
இதயக்கனி
என் மதமெல்லாம்
நீ வணங்குவதற்கல்ல
நீ இணங்குவதற்கு ......
என் மதம்
சம்மதம்
என் ஓவியம்
உன் கண்களுக்கல்ல
உன் கருத்துக்கு.....
என் ஓவியம்
காதல் ஓவியம்
என் மனமல்ல
என் பணமும்
உனக்குத்தான்......
என் பணம்
சமர்ப்பணம்