FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 31, 2020, 12:28:58 PM
-
(https://i.postimg.cc/nsR5BVDP/images.jpg) (https://postimg.cc/nsR5BVDP)
(https://i.postimg.cc/vx9SJWSJ/maxresdefault.jpg) (https://postimg.cc/vx9SJWSJ)
பொன் ஓணம் வந்ததே
பொன் ஓணம் வந்ததே
புத்தம் புது ஆடை உடுத்தி
வீட்டின் முன் மலர் கோலமிட்டு
மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க
ஓணம் வந்ததே பொன் ஓணம் வந்ததே
வீட்டில் எல்லாரும் ஒன்றாய்
மகிழ்வாய் அமர்ந்து உண்ண
ஓணம் வந்ததே பொன் ஓணம் வந்ததே
சுவையாய் பல பலகாரம் செய்து
எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ
ஓணம் வந்ததே பொன் ஓணம் வந்ததே
ஜாதி மத பேதமின்றி
பெரியவர் சிறியவர் பாகுபாடின்றி
சேர நாட்டினர் அனைவரும்
கொண்டாட
ஓணம் வந்ததே பொன் ஓணம் வந்ததே
பத்து நாளும்
திருநாளாய் கொண்டு
கைகொட்டுக்களி,யானைத்திருவிழா
படகுப்போட்டி என வித விதமாய்
கொண்டாட ஓணம் வந்ததே பொன் ஓணம் வந்ததே
திருவோண நட்சத்திரத்தை
திருவோணமாய் கொண்டு கொண்டாட
ஓணம் வந்ததே பொன் ஓணம் வந்ததே
HAPPY ONAM