FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on August 30, 2020, 02:32:02 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 242
Post by: Forum on August 30, 2020, 02:32:02 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 242
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F242.jpg&hash=743828c82996a4ddfa29253d13b7a2298ccfebdd)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 242
Post by: TiNu on August 31, 2020, 12:53:31 PM
பூச்சிகளோடும் புழுக்களோடும்
பறவைகளோடும் விலங்குகளோடும்
உறவாடிய மனித பூமியா இது?
மகான்கள் வாழ்ந்த பூமியா இது?

கொதிக்கிறது நெஞ்சம்
இனத்தை இனமே வேட்டையாடும்
விஷ ஜந்துகள் ஆனோமா?
ஆறறிவு மனிதா நீ எங்கே போனாய்

தன்னை உணரா  நிலை ஏன் உனக்கு?
பெண்ணாசை  பொன்னாசை விட - இன்றோ
தலை விரித்து ஆடும் ஊடக ஆசை.. 
உயிரை விட உனக்கு 'லைக்'  'ஷேர்'  பெரிதானதா?

வேலியே பயிரை மேய்வது ஏன்..
சொல்! மனித சொல்!!
நானே உலகம்!!!  இவ்வுலகமே
என் கைக்குள்  என்ற மமதையோ..

வாலுள்ள உயிர்கள் தன் இனம் காத்து நிற்க..
வாலில்லா ஜீவராசிகள் தன்னை தானே அழிப்பது ஏனோ...
மனிதா வேதனையில் வீழ்கிறேன்..
மனித  உயிரை  செல்லா காசாக்காதே..

தன்னிலை மறந்த மனிதா....
மறந்து விடாதே.... இப்பிரபஞ்சமே
அடங்கும் பஞ்ச பூதங்களுக்குள்
அதன் முன்னே நீயும் நானும் துரும்புகளே

அகம்பாவம் ஒடுக்கு..  அன்பை பெருக்கு..
ஆணவம் அடக்கு... பணிவை பெருக்கு
விவேகம் அணைத்து சோம்பலை துரத்து
அறியாமை போக்கி அறிவை தனதாக்கு

மனிதா!!! அச்சம் தவிர்... நிமிர்ந்து நில்
என் பாவைகளும் காத்து கிடக்கின்றன...
நீயும் மனிதனாக வாழும் காட்சிகளை காண
விரைந்த எனக்கு கொடுப்பாயா மனிதா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 242
Post by: AgNi on August 31, 2020, 10:15:23 PM


உயிர் தாக்க ஒருவன் ...அதை படம் பிடிக்க ஒருவன் !
உயிர் காக்க துடித்து ஏங்கும் கைகள் !...
காப்பாற்றும் எண்ணம் இல்லை இங்கு யாருக்கும் ...
மனிதம் இங்கு மரித்து போனதா ..
புனிதம் இன்று பொய்த்து போனதா ?
கொலையை கூட கூரூரமாய் படம் பிடிக்கும்
வேடிக்கை நாய்களே !இல்லை இல்லை !
நன்றி உள்ளவை அவை !

ஐந்தறிவு கொண்ட   பிற விலங்குகளை
கொன்று தின்னும் கொடிய சிங்கம் , புலி  கூட ...
சேற்றில் விழுந்த யானையையும் ..
ஆற்றில் விழுந்த கரடியையும்..
மலை விளிம்பில் மாட்டி கொண்ட குரங்கை ..
பள்ளத்தாக்கில் விழுந்த பன்றியை கூட
தன் இரை என்று எண்ணாது..
இரக்கமாக    நடந்து கொள்ளும்  !

ஆறறிவு என்று சொல்லி கொண்டு ...
இதயத்தை கழட்டி வைத்து விட்டு ..
கைகளை நீட்டி காப்பாற்றாமல் ..
உன் ஒளிப்பதிவு திறன்கு  கை தட்டலை
எதிர் பார்க்கும் நீ ...ஒரு  அரக்கன் !

கொலை வெறி கொண்டு துரத்தி  ..
துப்பாக்கியோடு நிற்கும் இவனை கூட
மன்னித்து விடலாம் மனிதனாய் ...
ஆனால்...
காப்பாற்றும் திறம் இருந்தும் ..
மனித நேயம்  இல்லாத உன்னை ...
மரணம் கூட மன்னிக்காது போ.!

இன்றும்கூட நியாயம் கேட்டு ..
தன்னை தீ இட்டு கொளுத்தி கொண்டு
வேதனையில் துடித்து அலறி ...
காப்பாற்றுங்கள் என்று கதறிய பெண்ணை
படம் பிடித்து காசு பார்க்கும் ..
கொடூர ஊடகங்களே !

மன நலம் பிறழ்ந்த மாக்களே ! உங்களுக்கு
கொரனவை  விட மற்றும்
ஒருகொடிய நோயே தோன்றட்டும்!
மடியட்டும் ! மனித குலம் அழியட்டும் !
அப்பொழுதாவது புது உயிர்கள் தோன்றட்டும்
அங்கு ஜீவனும் மனிதமும் மலரட்டும் !


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 242
Post by: MoGiNi on September 01, 2020, 12:35:47 AM
மனிதம்
வார்த்தைகளை தாண்டி
வாழும்  தடயம்
எங்கும் காணோம் ..

ஆறறிவு ஜீவனாம்
பீத்திக்க
கொள்கிறார்கள் ..

குரங்கு ஐந்தறிவு
அது தான் பெத்த
குட்டியை
தவற விடுவதில்லை
ஐந்தறிவு கவரி மான்
அது மயிர் நீர்த்தால் வாழாது

ஐந்தறிவு மிருகம்
அது தாய்மை உணர்ந்தால்
உறவு கொள்ளாது

புறா
அதுக்கு
எத்தனை அறிவு ?
தனது துணை விட்டு
வேறு ஒரு ஜோடி  சேராது ..

எந்த மிருகமும்
தனக்கு பின் ..
இதை சிந்திப்பதில்லை
அடுத்த வேளை
உணவு  சேர்ப்பதில்லை
தன சந்ததிக்கு
காசு பணம்
வீடு மனை  சேர்ப்பதில்லை
தன் இனத்தை
அடித்து தின்பதில்லை ..

ஆறறிவு ஜீவனென்று
பிதற்றிக் கொள்ளும்
மனிதன்தான்
அடுத்தவனை
அடித்துப் பிழைப்பு
அடுத்தவர்  துன்பத்தில்
இன்பம் ..
சோற்றுக்கும் கொலை
சுகத்துக்கும் கொலை..
 
சுடு காட்டிலும் செல்பி
சுடு சோறும் செல்பி
சுகமும் செல்பி

துப்பாக்கி முனையில்
துடிதுடித்தாலும் சரி
துடி துடித்து
எவன் இறக்க
கிடந்தாலும் சரி
தூக்கி விட யாருமின்றி
துவண்டு
அவன் உயிர் மாண்டு
போகும் வரை
துவளாத கரங்கள்
இரண்டு
ஒன்று
கத்தி பிடிப்பவன்
இன்னொன்று
கமரா பிடிப்பவன் ...

எதையும்
வியாபாரமாக
மாற்றும்
இந்த இயந்திர உலகில்
நாளை உனக்கும்
இதே நிலை தான் நண்பா ...

மரணமடைந்த
தாயின் உடலையே
செல்பியாக
பிடித்து  இன்பம் காணும்
இந்த அதிசய உலகில்
அன்பையும் ஆதரவையும்
அறைகூவி அழைக்காதே ..
அமைதியாக இறந்துவிடு
இல்லையேல்
உன் மரணம்
நிர்வாணமாக்கப்படும் .

நன்றி மறந்தவனென்று
உன்னை  காக்க மறந்த
நண்பனை நினைக்காதே
நாய்களுக்கு மட்டுமே
சில நற்பண்புகள் சொந்தம்

மனிதனுருவில் அலையும்
மாக்களுக்கல்ல ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 242
Post by: Raju on September 01, 2020, 11:09:33 PM
வாள்முனையில்
வதைபடும்மோதும்
பீலிங் சேட் போடும்
சித்தம் குலைந்த
தேசமடா...

உன்னை
சாகடித்தாலும்
சாகாது
சில விளம்பர மோகம்...

கடவுளே வந்து
உன்
கடைசி ஆசை
என்னவென்று கேட்டால்
உங்களோடு ஒரு
புகைப்படம்..
அதற்கு ஒரு லட்சம்
லைக் கேட்கும்
விந்தையான மனித இனம்..
அதை பார்க்க
அவன்
ஆயுள் இருக்காதென்பதை
அறவே மறந்த
கூட்டம்...

உன்
உயிர் காக்க
உனக்கொரு யுக்தி..
முயன்று
மறுகையையும் உயர்த்தி
உன்னை கொல்பவனை
கும்பிட்டுப் பார்..

அவனாவது இரங்கலாம்
நூற்றில் ஒரு வாய்ப்பாவது
உன் உயிர் காக்கலாம்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 242
Post by: thamilan on September 02, 2020, 08:59:21 PM
இறைவன் படைப்பில்
உயர்ந்தது மனித இனம்
மனிதனுக்கு மட்டும் தான்
மகத்தான ஆறறிவு
உலகையே ஆட்டுவிக்கும்
வல்லமை படைத்தவர்கள் நாங்கள்
இப்படித்தான் நாம் நம்மைப்பற்றி
பெருமைப்பட்டு கொள்கிறோம்

சிந்தித்துப் பார்த்தால்
விலங்குகளை விட கேவலமானது
மனித இனம்
மிருகம் தன் இனத்தை
தானே சாப்பிடுவதில்லை - என்றும்
பசிக்காக மட்டுமே மிருகம்
மற்ற இன மிருகங்களை வேட்டையாடும்

மனிதனோ தன் தேவைகளுக்காக
தன் சுயநலத்துக்காக தன் இனத்தையே
வேட்டையாடும் ஒரு கொடிய மிருகம்
தன் தேவைகளுக்காக தன் வசதிக்காக
மதத்துக்காக இனத்துக்காக என
சக மனிதர்களேயே கொன்று குவித்திடும்
ஈன ஜென்மம்

இதில் கொடியது என்னவென்றால்
தன் சக மனிதனை இன்னோரு மனிதன்
கொல்வதைதை வேடிக்கை பார்ப்பது தான்
உதவி கரம் நீட்டுவோரை உதாசீனம் செய்து
அதை படம் பிடித்து பதிவேற்றம் செய்து
அதற்கும் லைக் போட்டு
சே என்ன கேவலமான இனம் மனித இனம்

ஆறறிவு படைத்த மனிதனை விட
ஐந்தறிவு படைத்த மிருகங்கள் மேலானவையே
மனிதனை போல மிருகங்கள்
யாரை கெடுப்பதென்று சிந்திப்பதில்லை
பகுந்துண்டு வாழ்வதத்திற்கு உதாரணம் காக்கைகள்
நன்றிக்கு உதாரணம் நாய்கள்
சுறுசுறுப்புக்கு  உதாரணம் எறும்புகள்
இப்படி மனிதனுக்கே ஒவ்வொன்றுக்கும் உதாரணமாக
விளங்குவது விலங்குகள் தான்

மனிதன் ?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 242
Post by: SweeTie on September 03, 2020, 05:56:08 PM
,மதங்களும்  மொழிகளும்  மனிதன் படைத்தவை
நிறங்களும்   மனிதமும்    இயற்கை  படைத்தவை
ஜாதிகள்  எல்லாமே  தொழில்கள்  கொடுத்தவை
வானமும்  பூமியும்   மனிதனை வாழவைப்பவை

 பேதமெனும்  பொறியில் சிக்கிவிட்டான்   மனிதன் 
வேதங்களை   மறந்தான்   ஆகமங்களை மறந்தான்
தாண்டவமாடும்   அக்கிரமங்களை    தனதாக
ஏற்று கொண்டுவிட்டான் 
சூது  வாதுகளை   ஜீரணித்து    ஏப்பம் விடுகிறான்

நியாயங்கள்   நிலைகுலைந்து போயின 
தர்மம் வெட்கத்தில்   தலை குனிந்து  நிற்கிறது
நேர்மை  மீளாத்  துயரில்  உறங்கிக்கிடக்கிறது
நிமிர்ந்து  நின்ற நீதி  கம்பமோ   மானமிழந்து
மதிகெட்டு   வீழ்ந்து   கிடக்கிறது

ஆபத்தில்  இருப்பவனை   அன்று  கைகொடுத்து தூக்கியவன்
 இன்று குண்டுகளால்   அவன் உடல் துளைத்து   அதில்
இன்புற்று மகிழ்கின்றான்.
இதை   காலத்தின்   கோலம் என்பேனா   இல்லை 
கலியுகத்தின்  சாபம்    என்பேனா   


தன்  இனத்தையே   கொல்லும்   ஒரே  ஜாதி
ஜாதி வெறி யில்   பேயாகி  மத வெறியில்   பிசாசாகி
நிற வெறியில்   பித்தனாகி  சுற்றுகின்ற   மானிட ஜாதி
தீராது  இவன் வெறியும்  வேட்டையும்   
மீளவும்    இவன்   உடல்    கட்டையில்  வேகும்வரை.!!!