FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on August 28, 2020, 07:17:45 AM

Title: காதல் ஒரு சுகமடா
Post by: SweeTie on August 28, 2020, 07:17:45 AM
நிலவின் ஒளி  நானே   
இரவின்  விழி நீயே
தனிமையில்  சிரிப்பதும்
கண்டதும்  முறைப்பதும் 
காதலில் ஒரு சுகமடா

வருவாய்  என காத்திருப்பதும்
வந்ததும்  நான்  ஓடி ஒளிவதும்
கண்களை  சுற்றி நீ தேடுவதும்
கடைக்  கண்ணால்  நான் பார்ப்பதும்
காதலில் ஒரு சுகமடா

இரவுகள்  தூக்கமின்றி
இணைந்து  ஒன்றாய்  ரசிப்பதும்
என் விழியோர  கண்ணீரை
உன் கைவிரலால்  துடைப்பதும்
காதலில்  ஒரு  சுகமடா

என் பெயரோடு கூடவே
உன் பெயர் சேர்த்தெழுதி   
அடிக்கடி  மனப்பாடம் செய்து
ஆனந்த வெள்ளத்தில்   மூல்குவது
காதலில் ஒரு சுகமடா 
 
Title: Re: காதல் ஒரு சுகமடா
Post by: joker on August 28, 2020, 06:48:19 PM
தமிழில் கவிதை பார்ப்பதும்
அதை ஸ்வீட்டி எழுதுகையில் படிப்பதும்
என்றும் வாழ்வில் ஒரு சுகமடா  ;D ;D

Title: Re: காதல் ஒரு சுகமடா
Post by: Ninja on August 29, 2020, 03:21:28 PM
ஸ்வீட் சிஸ் கவிதைல காதல் வழிந்தோடுது 😍