FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: TiNu on August 11, 2020, 09:28:02 PM

Title: நானும் நானாக
Post by: TiNu on August 11, 2020, 09:28:02 PM
நானும் நானாக
**********************

எனை அறியாமல் என்னுள் குடிபுகுந்த
உனை என்ன செய்வது?....

என் ஐம்புலன்களையும் ஆட்கொள்ளும்
உன் நினைவுகளால் நான் படும் பாட்டை கேளாயோ...

கண் திறந்த நிலையில் கனவுகள் காண்கிறேன்
கண் மூடிய நிலையில் வாய் திறந்து பேசுகிறேன்

உனை நினைக்கும் வேளையில் என் பருவம் மறந்து
நானும் சிறு பிள்ளை என உன் மடிதனில் தவழ்கிறேன்...

சற்றே நிலை மாறி உன் தாயென நானும் உருமாறி
உன் உச்சு தலை முகர்ந்து கன்னத்தில் முத்தமிடுகிறேன்

எனை அறியாமல் என்னுள் குடிபுகுந்த
உனை என்ன செய்வது?....

என் உணர்ச்சிகளை கொப்பளிக்க வைக்கும் உன் நினைவுகளை
உன்னுடனே எடுத்து கொள்ளடா..... நானும் நானாக மாற.....

Title: Re: நானும் நானாக
Post by: fcp.shan on August 13, 2020, 09:06:14 AM
Super tinu  8)
Vazhthukkal
Title: Re: நானும் நானாக
Post by: MaSha on August 28, 2020, 11:36:22 PM
:D nice tinu
Title: Re: நானும் நானாக
Post by: Ninja on August 29, 2020, 03:22:47 PM
lovely. Nice Tinu sis 👏
Title: Re: நானும் நானாக
Post by: Jack Sparrow on August 30, 2020, 10:25:57 AM
Arumai ., Arumai., Tinu Chellzz :) :)