FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on April 04, 2012, 06:42:06 PM

Title: இந்தியாவை ஆட்சி செய்யும் பாசிசம்!
Post by: Yousuf on April 04, 2012, 06:42:06 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-nVjOZpBx1rE%2FT3U5qdzLJdI%2FAAAAAAAAHG0%2F34LF4tIx6Z4%2Fs200%2Fsinthikkavum.jpg&hash=67a3b3ed145deaa4c2c4f80652fb4c64ddd34331)

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பர்லிமன்ட் கூட்டத்தொடரில் திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது.

மத்தியை ஆளும் காங்கிரஸ் அரசும் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான் என்பது பல சந்தர்ப்பங்களில் நிருபிக்கப்பட்ட உண்மை. ஆர்.எஸ்.எஸ்.  பயங்கரவாத இயக்கம் இந்திய ராணுவம், உளவுத்துறை, காவல்துறை,   நீதி துறை மற்றும் அரசியல் கட்சிகளில் ஊடுருவி விட்டது என்பதை நிருபிக்கும் பல சம்பவங்கள் இந்தியாவில்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாபர்மசூதி இடிப்புக்கு துணை போன காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் முதல் பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வரை நமக்கு பல ஆதாரங்கள் உள்ளன. கூடங்குளம் அணு உலையை திறக்க அரசு இயந்திரங்களை கொண்டு அடாவடி நடவடிக்கை எடுத்த மத்திய மாநில அரசுகள் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த தயக்கம் காட்டுவதேன்.

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாபர்  மஸ்ஜித் விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பா.ஜ.கவினரையே அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் கரசேவைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பேசினார். குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு நடந்தவுடனேயே அந்த பழியை முஸ்லிம்களின் மீது போட்டார். குஜராத் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய பயங்கரவாதி மோடியுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறார்.

இப்படி பல சூழ்நிலைகளில் தனது பாசிச முகத்தை பகிரங்கமாக வெளிக்காட்டினார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக மக்களுக் பெரும் நன்மையை பெற்றுத்தரும் சேதுக் கால்வாய் திட்டத்தை கற்பனையான ராமர் பால கதை சொல்லி முடக்கப்பார்க்கிறார். பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பதில் மத்திய அரசு எந்த தாமதமும் காட்டக் கூடாது. அதுகுறித்த தனது கருத்துகளை நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று கூறியுள்ளார்.