FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 07, 2020, 09:47:13 PM

Title: காதலே
Post by: thamilan on August 07, 2020, 09:47:13 PM
காதலே
கரை கடந்த காதல்
உன்மேலே
காந்தத்தை விட ஈர்ப்பு சக்தி உன்னிடத்திலே
தொடாமலேயே பார்த்ததும்
இழுத்துக்கொள்கிறாய்  உன்னிடத்திலே
வயது எல்லை இல்லை
பதினாறு முதல் அறுபதுவரை
எல்லோருடனும் ஒட்டிக்கொள்கிறாய்

உணர முடியாத சந்தோஷத்தைக் கொடுப்பதும்
உணர முடியாத வலியை கொடுப்பதும்
காதலே நீ தானே
சிலநேரம்
தேன்துளியாக தித்திக்கிறாய்
சிலநேரம் நீயே
வலியின் வடுக்கள் ஆகிறாய்
காதலே நீ
உணர்ச்சிகளின் கலவையாகிறாய்
உலகத்தின் உயிர் ஆகிறாய்
உள்ளங்களை ஆட்டுவிக்கும்
மந்திரக்கோல் ஆகிறாய்

அழுகையின் வெளிப்பாடும் நீயே
ஆனந்தத்தின் அடிப்படையும் நீயே
ஆதியும் நீயே
அந்தமும் நீயே