FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 06, 2020, 12:05:55 PM
-
கருவறையில்
தனிமையை
போக்கியது
தொப்புள்கொடி
சிறு வயதில்
தனிமையை
போக்கியது
நட்புக்கள்
இளமையில்
தனிமையை
போக்கியது
காதல்
முதிர் பருவத்தில்
தனிமையை
போக்கியது
பிள்ளைகள்
பயணத்தில்
தனிமையை
போக்கியது
ராஜாவின் இசை
இரவின்
தனிமையை
போக்கியது
நிலவு
இன்று
முதுமையில்
தனிமையை
மரணம் தான்
போக்கிடுமோ ?
***ஜோக்கர் ****