FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on August 03, 2020, 07:02:44 PM

Title: என் தங்கைகள்
Post by: joker on August 03, 2020, 07:02:44 PM
நம்மை பெற்ற
தாயின் வயிற்றிலிருந்து
வந்தால் தானோ
சகோதரத்துவ
பாசம் பொங்கும் ?

எத்தனை நாட்கள்
பாசம் வைக்க நேசம்
வைக்க ஒரு சகோதரி
இல்லை என்ற ஏக்கம்
சுழன்றுகொண்டிருந்தது
என் மனதில்

பேச்சுக்காக,
தன்னுடைய பாதுகாப்புக்காக
அண்ணா என
அழைக்கும் சகோதரிகள்
ஏராளம் உண்டு
நாட்டில்

ஏதோ
ஓர் தாயின்
வயிற்றில் பிறந்து
ஏதோ ஒரு
நாட்டில் வளர்ந்து
ftc என்னும் அரட்டை அரங்கத்தில்
இணைந்து

பரஸ்பரம் பேசி
பேசியதில்
பேரை கூட பரிமாறிக்கொள்ளாமல்
உள்ளுணர்வுடன் ஐக்கியமாகி
அண்ணா என்றும் தங்கை என்றும்
தம்பி என்றும் அக்கா என்றும்
அழைக்கையில்

உச்சி முதல்
பாதம்  வரை
பாச உணர்வு பிரவாகம் எடுத்து
ஓடிடுமெனில்
நீயும் என்
சகோதர, சகோதரியே

அப்படி கிடைத்த
பொக்கிஷங்கள்
சம்யுக்தா ,டோரா, ரித்திகா,வித்யா,ஸ்வர்ணா,


தினம் தினம்
பேசிக்கொள்வதில்லை
எங்கு இருக்கிறீர்கள் என
நான் அறியவில்லை
இருந்தும்
உங்கள் நினைவுகள்
வந்து வந்து செல்லும்

என்றும் தங்கைகள்
என நினைக்கையில்
உங்களுக்காய்
ஓர் இடம் என்றும்
என் மனதில்
உண்டு

அனைவர்க்கும் என் தங்கைகள் தின வாழ்த்துக்கள்


HAPPY RAKSHABANDHAN

Title: Re: என் தங்கைகள்
Post by: ரித்திகா on August 04, 2020, 10:55:05 AM
(https://i.postimg.cc/8cyTdwfW/9-Number-PNG.png)
Title: Re: என் தங்கைகள்
Post by: DoRa on August 05, 2020, 03:25:11 PM
(https://i.postimg.cc/Hnm7wMxx/eipng-FC21158.png) (https://postimg.cc/HcSxHVbD)