FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on July 26, 2020, 09:28:15 PM
-
உன் பார்வை மழையை
யாசிக்கும் நான் ஒரு
தாவரம்
உன் பார்வையில்
தினமும் நனைய
தா-வரம்!
அடடா
உன் வார்த்தைகளில் வழிவதென்ன
குறும்பா
உன் புன்னகையில்
நான் காண்கிறேன்
குறும்-பா
நம் காதலை தொடங்கவா
முத்தத்தோடு
உன் காதுகளில் சூட்டவா
முத்தத்-தோடு
நான் அழைத்தும்
திரும்பிப்பார்க்காமல் போனால்
உன் இதயம்
இரும்பாகாதா
என் வார்த்தையை
கேட்க மறுக்கும் உன் செவியென்ன
இரும்பா-காதா
உன் பார்வை வேறுபக்கம்
சாய்கிறதே
ஏனிப்படி?
நம் காதல் உயர்வதற்கு
உன் காதல் தான்
ஏணி-படி
காதலியே
என் கண்ணீர் துடைக்க
வருவாயா?
காதலில்
கண்ணீர் தான் என்
வருவாயா?
-
பிரிமொழிச்சிலேடை யில்
பின்னிய தமிழே!!
முத்துக்கள் கோர்த்த
தித்திப்பான கவிதை.
-
தமிழ்
என்றும் சுவை தரும்
"பழங்கள்" போல
தமிழனின்
கவிதையோ
போதை தருகிறது
பழங் "கள்" போல
வாழ்த்துக்கள் தமிழன்