FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on July 14, 2020, 05:40:44 PM

Title: கடைசி சந்திப்பு !
Post by: joker on July 14, 2020, 05:40:44 PM
கடைசி சந்திப்பின்
கடைசி நொடி...

பிரிதல் முடிவான பின்
பெருக்கெடுத்து ஓடிய
உணர்வுகளின் கொந்தளிப்பை
சுனாமியை விட
எதிர்கொள்ள
கடுமையான தருணம்

பிரிந்த பின்
வறண்ட என் மனதில்
உன் நினைவுகள் தரும்
கண்ணீர்
பரிசாய்
நனைத்து கொண்டிருக்கிறது

ஆழ்ந்த நினைவுகளில்
கலந்திட்ட உன்னை
ரகசியமாய் பொக்கிஷம் போல
பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை என்னுள் இருந்து
கவர்ந்திட  முடியாதபடி

இருந்தும்
வீசப்பட்ட
ஒற்றை செருப்பாய்
கிடக்கிறது
என் வாழ்க்கை


Title: Re: கடைசி சந்திப்பு !
Post by: Evil on July 14, 2020, 06:10:08 PM
அவர்களின் நினைவுகள் என்றுமே நம்முடன் இருக்கும் போது பிரிதல்  என்பதே என்றும்  இல்லை  மச்சி அருமையான கவிதை மச்சி 
Title: Re: கடைசி சந்திப்பு !
Post by: Natchathira on July 16, 2020, 07:27:11 AM
ஆழ்ந்த நினைவுகளில்
கலந்திட்ட உன்னை
ரகசியமாய் பொக்கிஷம் போல
பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை என்னுள் இருந்து
கவர்ந்திட  முடியாதபடி///

வாழ்க்கை கண்ணீர், புன்னகை மற்றும் நினைவுகளைத் தருகிறது.