FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on July 13, 2020, 01:39:09 PM

Title: எந்தன் உடன்பிறவா தங்கை
Post by: thamilan on July 13, 2020, 01:39:09 PM
          நட்சத்திரா
இருண்டவானில் கண்சிமிட்டும்
நட்சத்திரங்கள் போலே
FTCயில் கண்சிமிட்டும் துருவநட்சத்திரம் இவள்
யாரென்று பார்க்கமாட்டாள்

இரும்பாலனவாராயிருந்தாலும் இவள் கையில் கிடைத்தாலும்
இவளுக்கு துரும்பு தான்
நட்டு கழண்டது போல பேசினாலும்
பேசுபவர்களை கதறவைக்கும் சாகசக்காரி

பாசத்தில் இவள் பாரிவள்லல்
கோபத்தில் இவள் கொந்தளிக்கும் எரிமலை
நகைச்சுவையில் இவள் கோவைசரளா
வெளிநாட்டில் பிறந்தாலும்
தமிழை தவறின்றி பேசுபவள்
பாசம் கோபம் நட்பு
நகைசுவை பரிகாசம் எல்லாம் கலந்த
கலவை இவள்

பேய் கூட (evil) இவளை கண்டால்
பயந்து நடுங்கும்
நாலடி இருந்தாலும்
வாய் மட்டும் எட்டடி இருக்கும் 

மொத்தத்தில்  நான் தத்தெடுத்த
ஒரு பாசக்கார கோபக்கார
தங்கை இவள்
 



 
Title: Re: எந்தன் உடன்பிறவா தங்கை
Post by: Evil on July 13, 2020, 02:26:48 PM
thamilan machi naan bayapadala ana bayam ilanu sollamudiyala machi ;D aurmaiyana kavithai machi
Title: Re: எந்தன் உடன்பிறவா தங்கை
Post by: Natchathira on July 14, 2020, 05:22:29 AM
என்னைப்பற்றி கவிதைமூலம்  உண்மையை இந்த courtல சொன்னதுக்கு... என்னுடைய அன்பு தமிழன் அண்ணாக்கு மிக்க நன்றிகள்.  இனி எந்த பயபுள்ள என்னை திரும்பிப்பார்க்க போகுது . இன்றுவரை ஒருத்தனும் சைட் அடிக்கல... இனி  இதை வாசித்து ஒருத்தனும் பக்கத்துல வரமாட்டான் என்று மட்டும் தெரியுது.
நமக்கு ஒவையார் posting confirm. 8) 8) 8).

joking apart,  ஓவியம் ஒரு கலை அதே வழியில் எழுதுவதும்  ஒரு கலை.
நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்கும்படி கடவுளிடம் பிரார்த்திக்கிறேன், ஏனென்றால் உங்கள் எழுத்தை அனைவரும் ரசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்..Am I Being Selfish OR Self-Centered??? ??? ::) ::)
நன்றிகள் உங்களுடைய கவிதைக்கு அண்ணா ....



(https://i.postimg.cc/v16JsMc0/1024x768-nandri.jpg) (https://postimg.cc/v16JsMc0)