FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on June 20, 2020, 08:39:47 AM
-
உன் பார்வை கயிறுகள்
என்னைக் கட்டியபோது
என் முரட்டுத்தனம்
உதிர்ந்தது
உன் வார்த்தைகள்
என்னைக் கட்டியபோது
என் கோபம் உதிர்ந்தது
உன் அறிவு
என்னைக் கட்டியபோது
என் ஆணவம்
உதிர்ந்தது
உனக்காக என்னை
அழகாக்கிக் கொண்டதில்
என் வருவாய்
உதிர்ந்தது
கண்ணே உனக்காக
காத்திருந்த போது
என் கடமை
உதிர்ந்தது
உனக்காக மட்டும்
நேரம் ஒதுக்கியத்தில்
என் நட்பு
உதிர்ந்தது
என் கையில் ராக்கி
கட்டிய போது
என் காதல்
உதிர்ந்தது
ரகசியமாக ஏங்க வைத்த
ராட்சசியே
அண்ணா என்று நீ
அழைத்த போது
என் இதயம்
உதிர்ந்தது
இது FTC இணையதளத்தில் உலா வரும்
நண்பிகளுக்கு சமர்ப்பணம்