FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 03, 2012, 03:25:38 PM

Title: காக்கை கூடு
Post by: Jawa on April 03, 2012, 03:25:38 PM
மாற்றம்
ஒன்றே மாற்றமில்லாதது.
கேட்க
நன்றாகத்தான் இருக்கிறது.

காக்கையின் கூட்டில்
குயிலின் முட்டை.
கரையான் புற்றில்
நச்சு மிகு நல்லபாம்பு
கதை கேட்டாலே
கொதிக்கிறது நெஞ்சம்.!

சட்டசபை கட்டடத்தில்
மருத்துவமனை கட்டில்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
குழந்தைகள் நல மருத்துவமனை தொட்டில்.
சொரணையற்று கிடக்கிறோம்!

மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
ஆகையால்
வாயை பொத்திக்கொண்டு
அறிவாளிகளாவோம்.!

கன்னிமாரா நூலகத்தில்
தண்ணியடிக்கும் நவீன கூடரம்
வள்ளுவக் கோட்டத்தில்
கருக்கலைப்பு மருத்துவமனை
செம்மொழி பூங்காவில்
சிங்கார சுடுகாட்டு வளாகம்! - என

அரசின்
புத்தாக்கச் சிந்தனையால் - நாளும்
புது செய்தி வரும்.
செம்மறி கூட்டங்களாய் - நாமும்
சிந்தை கெட்டு வாழ்வோம்.

ஏனெனில்

மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
Title: Re: காக்கை கூடு
Post by: aasaiajiith on April 03, 2012, 04:49:46 PM
அருமையான கருத்து ஜாவா !
இந்த பதிப்பை படித்து முடிக்கும்  போது
என் எண்ணத்தின் பிம்பம் உன்னுள்
பதிந்ததாய் சிறு எண்ணம் என்னுள்  சில நிமிடம் !

அரசின் ஆளுமை திறனை அப்பட்டமாய்
அதேசமயம் ஆணித்தரமாய் ,(இக்காலத்தில்)
சுட்டி காட்டவும், கெட்டிக்காரத்தனம் வேண்டும்..
 எனக்கு உன் வரிகள் பெருமை. அருமை,அருமை!
சமுதாய சிந்தனையை வெளிபடுத்தும் பதிப்பில்
கொஞ்சம் கூடுதலாய் தேவை,பொறுமை,பொறுமை
 
என் நினைவினில் நிழலாய் நிழலாடிகொண்டிருக்கும்
ஒரு சிறு நிகழ்வை(கருத்தை)பகிர்ந்து கொள்ளலாமா ?

நீ, மேற்குறிப்பிட்ட பல அரும் நறும் திட்டங்கள் ,
அக்கால ஆட்சியின் திட்டம், எனும் ஒற்றை
காரணத்திற்காக மட்டும், திட்டம்  தீட்டப்பட்டு 
கட்டம் கட்டி ,கை(கழுவ) விட படுவதை போல்
செயல்படுத்தாமல் செல்லாது என்பதை போல்,
அந்த ஆட்சியின் போது நடத்திவைக்கப்பட்ட
திருமணங்கள் ஏதும் செல்லாது என 
சொன்னாலும் சொல்வாரோ ?
ஆட்சரிய பட இல்லை !

ஒருவேளை ,அப்படி ஒரு சட்டதிருத்தம்
தீர்மானமாய் நிறைவேற்றபட்டால் கூட
சந்தோஷமாய் ஏற்றுகொள்வார்கள்
ஏனெனில்
மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவாரே !
Title: Re: காக்கை கூடு
Post by: supernatural on April 03, 2012, 05:25:41 PM
ஆசையிடம் இருந்து ஆசையாய் மட்டும் அல்ல..
சமுதாய ஓசையாய் .கூட  கவிதை வரிகள்...
அருமை ..
ஆசையின் புது அவதாரமோ???
Title: Re: காக்கை கூடு
Post by: suthar on April 03, 2012, 07:42:01 PM
Konthalipu yen jawa
aasai nanban pol konthalika katrukkol. Naasukkaai eduththu koora katrukol. Miga aazhamaana karuthai nagaichuvaiyaaga solliathu arumai aasai nanba.

Konthalika vendia idathil
kottai vittuvittu
kottaiyil yeriyavarai patri
kottam yen.
Courtuku selbavarai
kottaiyil yetriyathey
madaiyargalaagi pona
madaiyargalaalthaan enbathai
maranthuvittu
madathanamaaga pesi
maatrathai virumbum
madaiyargalaagi pona
madaiyargal naam.
Title: Re: காக்கை கூடு
Post by: Global Angel on April 05, 2012, 10:58:03 PM



கவிதை நன்று ஜாவா இங்கு கூட மௌனத்திற்கு மாலை இடுவோம் இல்லை என்றால் மடையர்கள் ஆக வாய்ப்புகள் ஏற்படும்
 ;D